Thursday, August 02, 2012

விழாவும், பாராட்டும்... திருகோணமலை ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயம்


இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் லிங்கநகர் பகுதியில் தி/ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. நகரின் புறத்தே பெரும்பாலும் வசதிகுறைந்த மாணவர்கள் கல்விகற்கும் இப்பாடசாலை 1977 ஆம் ஆண்டு பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா மகராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்டது.
தற்போது சுமார் 430 மாணவர்கள் கல்விகற்கும் இப்பாடசாலையில் 2008ஆம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அதிபர் திரு.க.ஜெயநாதன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த , இலங்கை அதிபர் சேவையில் தரம் ஒன்றில் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும், தங்கநிலா வலைப்பூவின் ஆசிரியருமான திரு.வேலாயுதம் தங்கராசா பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

அந்நிகழ்வுகளில் இருந்து சில பகைப்படங்கள் இங்கே..

முதன்மை விருந்தினர் வரவேர்ப்பு




அதிபரின் தலைமையுரை நிகழ்கிறது.

முதன்மை விருந்தினர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்படுகிறார்.

மாணவர்களின் கலைநிகழ்சிசிகளில் சில

விழாவில் சிறப்பாக கடமையாற்றிய கிறிஸ்தவ ஆசிரியருக்கு பாராட்டுப்பத்திரமும், பரிசும் வழங்கப்படுகிறது.

கலைநிகழ்சிசிகளில் சில

இடமிருந்து வலமாக பிரதி அதிபர் திருமதி வி.அன்பழகன், சிறப்பு விருந்தினர் திருமதி தி. துரைரெத்தினம், முதன்மை விருந்தினர் திரு.வேலாயுதம் தங்கராசா அதிபர் திரு.க.ஜெயநாதன் ஆகியோரைப் படத்தில் காணலாம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment