Tuesday, July 21, 2009

ஆச்சரியம் தரும் நம்பிக்கைகள் - புகைப்படங்கள்
இன்று மிகுந்த மன உளைச்சல் நிறைந்த நாளாக இருந்தது. ஆர்வமில்லாமல் சோர்வுடன் மின்னஞ்ல்களைப் படித்துக்கொண்டிருந்தபோது நண்பர் முகமட் முனாஸினால் அனுப்பப்பட்டிருந்த NEVER LOSE HOPE எனத்தலைப்பிடப் பட்டிருந்த மின்னஞ்சல் படங்கள் மனதில் மீளப்புத்துணர்ச்சி ஊட்டியது.

படத்தில் இருப்பவரின் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் நிறைந்த சந்தோசமான முகம் என் சோர்வுகளைக் கணநொடியில் நீக்கி பழையபடி உற்சாகமாக வேலைகளில் ஈடுபடத்தூண்டியது. அப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நண்பருக்கு நன்றிகள்.

Sunday, July 12, 2009

தமிழ் கேட்க ஆசை


{கட்டுரைத் தொகுப்பு}
வெளியீடு –பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம், தம்பலகாமம்.

திரு. தம்பலகமம் க. வேலாயுதம் அவர்களின் தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பை வாசித்த போது, எனக்கு விநோத மஞ்சரி என்ற நூலே ஞாபகத்திற்கு வந்தது. தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பில் முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. அன்றைய நிலையில் விநோத மஞ்சரிக் கட்டுரைகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் இவரது கட்டுரைகள் முக்கியமானதும் அவசியமானதுமே. இவரது கட்டுரைகளில் பல இந்த மண்ணின் - இவரது மண், தம்பலகாமம் மண்ணின் வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. சில கட்டுரைகள் ஆய்வை நோக்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதன் தன்மையில் தனித்துவமாகவே இருக்கிறது. திறமையாக எழுதப்பட்டிருக்கிறது.

வாசிப்பு ஒருவனை அறிவாளியாக்கும் என்பதற்கு தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ஒரு உதாரணம் என்றால் அது மிகையாகாதது மட்டுமல்ல பொய்யுமல்ல. தம்பலகாமம் கிராமம் எத்தகைய வளங்களையுடையது என்பதை அறிந்தவர்கள்தான் அறிவார்கள். கல்வி வசதி குறைந்த, நூல் நிலையங்களோ, நூல் சந்தை அகங்களோ அற்ற அக்கிராமத்தில் (தன் தேடல்மூலம் நூல்களைத்தேடி வாசித்து) வாழ்ந்த க.வேலாயுதம் அவர்கள் அதனூடாக தன் கலை இலக்கிய உணர்வுகளை வெளிக்கொணர்வதில் மற்றவர்களைவிட எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல என்பதை, தமிழ் கேட்க ஆசை என்ற நூலின் மூலம் நிரூபித்துள்ளார்.

Tuesday, July 07, 2009

பிரஷாந்தனின் புகைப்படங்கள்
இவைபோல பல அழகுகொஞ்சும் படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையைச் சேர்ந்த பிரஷாந்தன். சிறுவயது முதலே புகைப்படத்துறையில் ஆர்வங்கொண்டுள்ள பிரஷாந்தன் தனது கைப்பேசிக் கமராவைப் பயன்படுத்தி (sonyericsson k800i phone, nokia 7600 ) எடுத்த புகைப்படங்களில் சிலவற்றையே இங்கு பார்த்தீர்கள்.

மேலும் புகைப்படங்களைக்காணபிரஷாந்தன் சிறைப்பிடித்த வண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதோடு, ஒரு நண்பனாக எனது பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நன்றி யாழ்தேவி
ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக யாழ்தேவி சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை யாழ்தேவி நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன் ஜீவன்Monday, July 06, 2009

மான்களின் இன்றைய நிலை - புகைப்படங்கள்
திருகோணமலை பேரூந்துத் தரிப்பிடத்தில் உள்ள மான்களையே படத்தில் காண்கிறீர்கள்.
படங்கள் - (NOKIA N70) கைப்பேசி கமரா

தொடர்புடைய பதிவு (வாசிக்க எழுத்தின்மேல் சுட்டுங்கள்)
திருகோணமலை நகரத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் இன்னொரு இனம் இந்த மானினம். இவர்களது பூர்வீகம் கிழேயுள்ள படத்தில் தெரியும் கோணமலை.

Wednesday, July 01, 2009

அபாய அறிகுறிகள் -டெங்குக் காய்ச்சல்/DENGUE FEVER

டெங்குக் காய்ச்சல் நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோய். இந்நோய்பற்றிய சில தகவல்கள்.