Wednesday, November 30, 2016

திருமலைக் கொடுமைகள் 1985 - ஒரு துன்பியல் ஆவணம்2003 ஆம் ஆண்டின் நடுப்பகுதியது. விடுமுறை முடிந்து மீள பல்கலைக்கழகம் செல்வதற்கான பயணநாள். வீடு பிரிந்து செல்லும் அன்றைய பயணம் பெரும் சலிப்பைத் தருவதாக இருக்கும் என்ற எண்ணமே மனச்சோர்வைத் தந்தது. என்ன செய்வது நெருங்கி வரும் பரீட்சைகள் பற்றிய பயம் பின்னால் இருந்து உந்தித்தள்ள அரைமனதோடு அதிகாலை வேளையிலேயே பயணப்பொதிகளுடன் புறப்பட ஆயத்தமானேன்.

Monday, November 28, 2016

ஈழ , சோழ மண்டல பேச்சுத்தமிழ் (1941) - சுவாமி விபுலானந்தர்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சுவாமி விபுலாநந்தர் பிறந்தார். 1912ஆம் ஆண்டுகளில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமைபுரிந்த இவர் 1915 ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 இல் அறிவியலில் பட்டத்தைப் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார்.

Tuesday, November 08, 2016

தம்பலகாமம் கள்ளிமேட்டு 'நடுகல்' - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமுகத்தின் தொல்மரபுகள் பல அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கிராமங்களில் இதுவுமொன்று. இலங்கையில் ஐரோப்பியரின் மேலாதிக்கம் ஏற்படுவதற்கு முன்னர் இன்றைய தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய்ப் பிரதேச செயலாளர் பிரிவுகள் மூன்றையும் உள்ளடக்கிய பிரதேசம் “ தம்பலகாமப் பற்று” எனும் சுயாட்சி அதிகாரமுள்ள வன்னிச் சிற்றரசராக இருந்தது.

Monday, November 07, 2016

" கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " - வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு


வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் எழுதிய திருகோணமலை மாவட்டத்தின் புராதன தொன்மைகளை வெளிப்படுத்துகின்ற " கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " என்னும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு 12- 11- 2௦16 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு Jesuit ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Tuesday, November 01, 2016

'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மு.செளந்தரராஜன் அவர்கள், மறைந்த தனது சகோதரர் கவிஞர் பரஞ்சோதி அவர்கள் வாழும் காலத்தில் எழுதிய கவிதைகளினை தற்போது தொகுத்து 'நாங்கள் விட்டில்கள் அல்ல' எனும் கவிதை நூலினை தயார் செய்திருந்தார். இந்த கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கேட்போர் கூடத்தில் 22.10.2016 சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு இடம்பெற்றது.

Thursday, October 27, 2016

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2016 - புகைப்படங்கள்


கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புணர்வாழ்வு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2016 ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா 20,21,22 (10. 2016) ஆகிய தினங்களில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

Wednesday, October 26, 2016

பேராசிரியர் அமிர்தலிங்கம் கௌரவிப்பு நிகழ்வு - 27.10.2016 பி.ப 4.30 மணி


திருகோணமலை மாவட்டம் சம்பூரைச் சேர்ந்த கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் (பொருளியல் துறை. கொழும்பு பல்கலைக்கழகம்) அவர்கள் பேராசிரியராகயர்ந்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார்.அவரைக் கௌரவிப்பதுடன், இளம் சமூகத்தினருக்கும் இதுபோன்ற துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக சம்பூர் மகாவித்தியாலய முன்னாள் மாணவர் வெளியக சங்கத்தினரால் கௌரவிப்பு நிகழ்வொன்று 27.10.2016 பி.ப 4.30 மணிக்கு திருமலை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கௌரிபாலனின் நூல் அறிமுகமும், கலந்துரையாடலும் - புகைப்படங்கள்


“நீங்களும் எழுதலாம்”  கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வி. கௌரிபாலனின்   காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் (சிறுகதைகள்) எனும் நூலின் அறிமுகமும், கலந்துரையாடலும் 23.10.2016 அன்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியில் சஞ்சிகை ஆசிரியர்  திரு.தனபாலசிங்கம்  தலைமையில் இடம்பெற்றது.

Saturday, October 22, 2016

நாங்கள் விட்டில்கள் அல்ல (கவிதைத் தொகுதி) - வெளியீட்டு விழாகவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் நாங்கள் விட்டில்கள் அல்ல என்னும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா

Wednesday, October 19, 2016

கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்

நன்றி -  Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் 

இலங்கை ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் செல்வதற்கு முன்னர் நாட்டின் வட பகுதியில் முழுமையாக வளர்ச்சியடைந்த யாழ்ப்பாண இராட்சியமும், அடங்காப்பற்று (வன்னி), திருகோணமலைப் பிரதேசம், மட்டக்களப்பு தேசம், புத்தளம், சிலாபம் ஆகிய பிரதேசங்களில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் வன்னிபங்களால் ஆளப்பட்ட சிற்றரசுகளும் காணப்பட்டன. இதில் யாழ்ப்பாண இராட்சியம் தவிர்ந்த அனைத்தும் வன்னி அரசுகள் என அழைக்கப்பட்டன.

Wednesday, September 14, 2016

நண்பன் பிரதீபனின் தமிழ் தாய் மொழித் தமிழ் வாழ்த்துப் பாடல்


தம்பலகாமத்தைச் சேர்ந்த பல்துறைக் கலைஞன் திரு.பூபாலசிங்கம் பிரதீபன் எனது ஆரம்ப காலப்பாடசாலைத் தோழன். இவரது ஆற்றல், பலதுறைக் கலைத்திறண், கடின உழைப்பு,  அர்ப்பணிப்புடன் ஈடுபடும் தன்மை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.

Tuesday, July 26, 2016

தம்பை போற்றும் தலைமகனாம் தமிழறிஞன் 'பொன் சித்திரவேல்'


தம்பலகாம மக்கள் தம்மை
தன்பா லிழுத்து கல்விதனை
ஓங்கி வளர வழி செய்த
உயர்ந்த மாமனிதரிவர்
தம்பை போற்றும் தலைமகனாம்
தமிழறிஞன் பொன் சித்திரவேல்
எம்மைப் பிரிந்து சென்றனனே!
இதயம் ஏங்கித் துடிக்கிறதே!

Wednesday, July 20, 2016

நூலக ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.org


இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும், அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி www.noolaham.orgநூலக நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணப்படுத்தலுக்குக்கான உதவிக் கோரிக்கை கீழே.

Saturday, May 07, 2016

இன்றைய வீரகேசரி (07.05.2016 ) சங்கமம் பகுதியில் எனது நேர்காணல்... நன்றி திரு.சஞ்சீவன்01.உங்களைப் பற்றியும் உங்களது இலக்கியப்பின்ணணி பற்றியும் கூறமுடியுமா ?

தம்பலகாமத்தில் பிறந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் நான் மருத்துவராகப் பணிபுரிகிறேன். எழுத்தாளராகவும், நீண்டகாலமாக வீரகேசரி நாளிதழின் நிருபராகவும் கடமையாற்றி மறைந்தவர் எனது அப்பப்பா தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள். அவரது தூண்டுதலினால் சிறுவயதில் வாசிப்பதிலும் பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை கலாபூசணம் வே. தங்கராசா அவர்களின் உறுதுணையுடன் அது இன்றுவரை தொடர்கிறது. பாடசாலைக் காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த எழுத்துலகப் பயணம் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கிய மலர்கள் என்று நீண்டு செல்கிறது. 

Wednesday, May 04, 2016

ஆதவன் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பு - புகைப்படங்கள்


அண்மையில் எனது மைத்துனர்  திரு.தி.ஸ்ரீபதி (திருகோணமலை மாவட்ட கடல்சார், சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பாளர்  ) அவர்கள் தனது வேலை நிமிர்த்தமாக சீனன்வெளி ஆதவன் வித்தியாலயத்திற்குச் சென்றிருந்தபோது பாடசாலை அதிபர் திரு.இலிங்கேஸ்வரன் அவர்களினால் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி கீழ்வரும் பொருட்கள் நன்கொடையாகக் கோரப்பட்டன.

“இலக்கியப் பூக்கள் - 2 ” - தொகுப்பாசிரியர் முல்லை அமுதன்


இங்கிலாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் “முல்லை அமுதன்” அவர்கள் தொகுத்தளித்திருக்கும் “இலக்கியப் பூக்கள் ” என்னும் நூலின் இரண்டாவது தொகுதி சென்னை “காந்தளகத்தின்” தயாரிப்பில் வெளிவந்திருக்கின்றது.

Wednesday, April 27, 2016

அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபி​ஷேக மலர் - புகைப்படங்கள்


திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது. அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபி​ஷேக மலர்  23.04.2016 அன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

Thursday, April 21, 2016

அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபி​ஷேக மலர் வெளியீடு 23.04.2016 காலை 11.30 மணி

அகத்தியர்

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது.

Tuesday, April 19, 2016

கல்விக் கண்களைத் திறந்த மேலோன்! ( காசிநாதர் ஐயா )


தேசிய உடையில் தோன்றி
செந்தமிழ் வளர்த்த கோமான்!
காசிநாதர் ஐயா கல்விக்
கண்களைத் திறந்த மேலோன்!
கிண்ணியாவின் கல்வித் தரத்தை
கீர்த்தியை வளர்த பெருமை
அவரையே சாரும் என்று
அனைவரும் புகழ்ந் துரைப்பர்.

1960 களில் திருகோணமலை நகரத் திருக்கோவில்கள் - புகைப்படங்கள்


திருக்கோணேச்சர ஆலய கும்பாபிஷேக மலரில் (03.04.1963) வெளிவந்த   திருகோணமலை நகரத் திருக்கோவில்களின் புகைப்படங்கள் இவை. இப் புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையின் வரலாற்றை நிழற்படங்களின் துணைகொண்டு பதிவு செய்த அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள்.

Monday, March 07, 2016

சிவ தேசம் பாடல் வெளியீட்டு நிகழ்வு 07. 03. 2016


07. 03.  2016 மகாசிவராத்திரி அன்று மாலை 7 மணிக்கு திருக்கோணேஸ்வர ஆலய முன்றலில் MAP ART AND ENRERTAINMENT இன்(திருக்கோணமலை கலைக்கூடம்)  "சிவ தேசம்" இசை இறுவெட்டு வெளியிடப்பட இருக்கிறது. 

Sunday, February 28, 2016

சுஜீதன் இயக்கத்தில் "உயிர் வரை ஏனோ" பாடல்


சுஜீதன் இயக்கத்தில் சாய்தர்சன் இசையமைப்பில் அழகாக தயாராகி இருக்கும் பாடல் உயிர்வரை ஏனோ. சுஜீதனே வரிகளை எழுதியிருக்கும் இப்பாடலை பிரபல பாடகர் அஜீஷ் அவர்கள் பாடியுள்ளார். ஜெராட், ரோசில்டா, கிரிஷ், திவ்யா என பலர் நடித்திருக்கும் இந்தப் பாடலின் வெளியீடு "05.03.2016" அன்று காலை 9.30 மணிக்கு  திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கலையரங்கில் வெளிடப்பட்டது.

Tuesday, January 26, 2016

திருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் - புகைப்படங்கள்


திருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு நகராகும். வங்கக்கடலை நோக்கிய “ஆ” என விரிந்த குடாவோடு, நிலத்தின் அருகிலேயே கப்பல்கள் தரிக்கக்கூடிய ஆழத்தோடு திகழும் இந்த இயற்கைத்துறைமுகம் காலங்காலமாக கடலோடிகளை கவர்ந்தே வந்துள்ளது. இதனாலேயே திருக்கோணமலை அக்கால இணையற்ற தமிழ்ப்பேரரசனான இராஜராஜ சோழனது கடாரம், சொர்ணத்தீவு ( இன்றைய இந்தோனேசியா, பாலித்தீவுகள், சுமத்திரா ) போன்ற நாடுகளுக்கான படையெடுப்பிற்கான பிரதான துறைமுகமாகவும், பிற்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியரின் காலனித்துவ கனவுகளுக்கு பிரதான திறவுகோலாகவும், இக்கால அமெரிக்கா முதல் இந்தியா வரையான நாடுகளின் தீராத காதலினால் ஏற்பட்ட பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு அடித்தளமாகவும் விளங்கிவருகின்றது.

Tuesday, January 19, 2016

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் தம்பலகாமத்திலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு தைப்பொங்கல் தினமான 15.01.2016 அன்று மாலை நான்கு மணியளவில் தம்பலகாமத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.