Wednesday, September 28, 2022

திரிகோணமலை அந்தாதி - 1886 - ஓலைச்சுவடிகள் pdf

திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த  வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது.

Tuesday, September 13, 2022

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மகாநாடு - புகைப்படங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்திருக்கும் தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கோணேச்சர ஆலயத்தின் வருடாந்த  மகாசிவராத்திரி வரலாற்று ஆய்வு மகாநாடு 18.02.2023 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்புற இடம்பெற்றது. 

Thursday, September 01, 2022

வெல்கம் விகாரை கல்வெட்டுகள் - புகைப்படங்கள்

 

திருகோணமலையில் பெரியகுளம் பகுதியில் இருக்கும் வெல்கம் விகாரை என அழைக்கப்படுகின்ற இராஜராஜப் பெரும் பள்ளியில்  11, 12, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 தமிழ் அறக்கொடைச் சாசனங்கள் 1929, 1953 ஆண்டுகளில் இடம்பெற்ற தொல்பொருள் ஆய்வுகளின்போது கிடைக்கப்பெற்றன. திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம். வெல்காமம் என்னும் ஊரில் இவ்விகாரை அமைந்திருந்ததால் வெல்காமப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டது.