Thursday, December 25, 2014

வெள்ள அனர்த்தம் - தம்பலகாமம் - புகைப்படங்கள்

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்து வரும் அடை மழையினால்16 மாவட்டங்களிலுள்ள 6 இலட்சத்து 47ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Wednesday, December 24, 2014

ஒளிவிழா - அன்னை திரேசா இல்லம் - புகைப்படங்கள்

ஆர்ப்பரிக்கும் கடல் அலைமோதும் திருகோணமலையில், அழகான லிங்கநகர்ப்பகுதியில், இயற்கை வனப்பு நிறைந்த இடத்தில் அமைந்திருக்கிறது அன்னை திரேசா இல்லம். வெள்ளம் ஏறுவதும் வற்றுவதுமாக இருக்கும் மட்டிக்களி கடலின் அரவணைப்பில் இருக்கும் இந்த இல்லத்தில் 57 சொந்தங்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் பராமரிக்கப்படுகிறார்கள்.

Tuesday, December 16, 2014

கலாபூசணம் வே.தங்கராசா கௌரவிப்பு நிகழ்வு - ( புகைப்படங்கள், காணொளி)

திரு.வேலாயுதம் தங்கராசா அவர்கள் திருகோணமலையில் உள்ள தம்பலகாமம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஓய்வு பெற்ற அதிபர், வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் மரபுவழி அறக் காவலர்களில் ஒருவராகக் ‘கங்காணம்’ என்னும் தொழும்பு முறையினைச் செய்பவர்.

Thursday, November 20, 2014

கேணிப்பித்தன், சம்பூர் ஸதீஸ் கௌரவிப்பு - புகைப்படங்கள்

2014 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியருக்கான விருது வழங்கும் நிகழ்வு அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையில் நடைபெற்றது. அதில்

திருகோணமலை மாவட்ட கிராமிய பாடல்கள் - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
சம்பூர் பிரதேசத்தின் தொன்மை - Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார்

விருது பெற்ற இரு நண்பர்களுக்கும் ஜீவநதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Wednesday, November 19, 2014

இது குளக்கோட்டன் சமூகம் - புகைப்படங்கள்

இது குளக்கோட்டன் சமூகம்

“ஜீவா நான் ஊருக்கு வந்துவிட்டேன்” என்ற உற்சாகமான குரல் எனது அன்றைய நாளைச் சந்தோசத்துடன் தொடங்கி வைத்தது. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த அந்தக் குரலுக்குரியவர் கலாநிதி  சரவணபவன் அவர்கள்.  திருகோணமலையின் பண்டைய வரலாற்றினை இலகுதமிழில் கால ஒழுங்குக்கு அமைய ‘வரலாற்றுத் திருகோணமலை’, ‘காலனித்துவ திருகோணமலை’ என்ற இருநூல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட வரலாற்று ஆவணங்களாக நமக்கு உருவாக்கித்தந்தவர். பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையான, இனிமையான மனிதர்.

சிவநய அறநெறிப்பாடசாலை நூலக அங்குராட்பணம் - புகைப்படங்கள்

சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50 மாணவர்கள் மூன்று தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Friday, October 03, 2014

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1

வரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்)  ஆலயம் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பதற்கான முன்னகர்வு இதுவாகும். www.noolaham.org  இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் திருக்கோணேச்சர ஆலய வரலாற்றுடன் தொடர்புடைய நூல்கள் சில.

Thursday, October 02, 2014

சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்” - புகைப்படங்கள்

கவிதை நூல் வெளியீடும் அறிமுகமும்.
சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்”
இடம்;: தி உவர்மலை விவேகானந்தா கல்லூரி
காலம்: 26.09.2014. நேரம்: மாலை 4.00 மணி.

சம்பூர் வதனரூபனின்அடையாளமற்றிருத்தல்’ என்னும் கவிதை நூல் வெளியீடும், அறிமுகமும் ‘பகிர்வின்’ ஏற்பாட்டில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி பல்லூடக அறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Monday, September 22, 2014

தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) புகைப்படங்கள் - 2

இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா  என்னும்   திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது.  கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) - புகைப்படங்கள் - 1

இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா  என்னும்   திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் (06.09.2014) அரங்கேற்றப்பட்டது.  கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

Thursday, September 18, 2014

கப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - புகைப்படங்கள்

கண்ணகி அம்மன் வழிபாடு

திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான  கிராமங்களில் கப்பல்துறைக் கிராமமும் ஒன்றாகும். இது திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் புராதான கண்ணகி அம்மன் வழிபாட்டு இடம் ஒன்று இருப்பதாக கப்பல்துறை இளைஞர் ஒருவர்மூலம் அறியக்கிடைத்தது.

Tuesday, September 09, 2014

“நீங்களும் எழுதலாம்” பௌர்ணமி தின நிகழ்வுகள் - புகைப்படங்கள்

 “நீங்களும் எழுதலாம்”  கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பௌர்ணமி தின நிகழ்வுகள் அச்சஞ்சிகையின் ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 08.09.2014 மாலை 4.30 மணியளவில் திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வினை எழுத்தாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Monday, September 08, 2014

அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு III - திறந்த போட்டிப் பரீட்சை

வேலைவாய்ப்பு

அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு  III இன் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2014 திசெம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, September 05, 2014

நரகாசுரன்

narakasuran

தீபாவளிப் பண்டிகை என்றதும் நம்மிடையே ஞாபகம் வருபவர்களில் நரகாசுரனும் ஒருவர். பாடசாலைக் காலங்களில் அசுர குணங்கொண்ட, பயங்கரமானவராக அறிமுகமான புராணக் கதாபாத்திரம் இவர். பின்னாட்களில் அசுரர் பற்றிய தேடல்கள் பயந்தருவதற்குப் பதிலாக புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஆரம்பப் புள்ளிகளாயின. அதன்படி சுரர் என்பவர்கள் பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் என்றும். அசுரர் என்போர் சுரராகிய தேவர்களுக்கு விரோதிகள் என்றும் அறியக்கிடைத்தது.

Monday, September 01, 2014

திருகோணமலையில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் உலக சாதனை முயற்சி

அனிஸ்டஸ் ஜெயராஜா

கின்னஸ் உலக சாதனை (Guinness World Records), ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும்,  இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் உசாத்துணை புத்தகமாகும். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது அத்தனை எளிதான விடையமல்ல. எல்லாவிதங்களிலும் சாதனை பற்றிய விவரங்களை உறுதி செய்து கொண்டே கின்னஸ் சாதனை முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

Tuesday, August 26, 2014

17 வருடங்களின் பின் பழைய மாணவர் ஒன்று கூடல் 2014 - புகைப்படங்கள்

திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்விகற்ற 1997 A/L, 1994 O/L மாணவர்களின் சந்திப்பு சுமார் 17 வருடங்களின் பின்னர் 24.08.2014 பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றது. அன்று திருகோணமலை நகரில் வசிக்கும் நண்பர்கள் மீள்ளிணையக் கிடைத்தது ஒரு சந்தோசமான சந்தர்ப்பமாகும்.

Thursday, August 14, 2014

இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில் - 5

vanniyar

திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில்  கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால்  தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.

Wednesday, July 16, 2014

திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னிபத்தின் உயில் - 4

koneswaram

இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில்

திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு உறுதி அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட அவ்வுயில்     கொட்டியாரப்பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துக் கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது. திருகோணமலைப் பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இது ஒரு முக்கிய ஆவணமாகும். மேற்குறித்த உயிலின் அடிப்படையிலும், கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணைகொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயமுயல்கிறது இக்கட்டுரை.

இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்வதற்கு கீழ்வரும் தலைப்புகளிலான சுருக்கமான தேடல்கள் உதவிபுரியும் அதேவேளை அவை வன்னிபச் சிற்றரசுளின் காலத்தில் இருந்த சமூக நிலைகளை விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிவதாகவும் இருக்குமெனலாம். இந்த அடிப்பையில்
01. வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள்
02. வன்னி அரசர் அல்லது வன்னிபம்
03. திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும்
04. கொட்டியாரப்பற்று வன்னிமை
05. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில்.
என்பனவற்றினை தனித்தனியே ஆராய்தல் பொருத்தமானதாக இருக்கும்.

Tuesday, July 15, 2014

திருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3

குளக்கோட்டன்

வன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2

Monday, July 14, 2014

வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1

Tuesday, June 17, 2014

வரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங்கள்

வரலாற்றில் திருகோணமலை

பண்டைய நாட்களில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என அக்கால மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றைப் பல பொருட்கள் மீது எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று. அவ்வாறு நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் என கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை என்பதனால், மிகப்பழங்கால வரலாற்றுச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கான நம்பகரமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக அவை திகழ்கின்றன.

Wednesday, June 11, 2014

தம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்படுத்தலுக்கான முன்னகர்வு

Thampalakamam

ஒரு இனம் அல்லது சமூகம் தனது இருப்பை உறுதிசெய்யவும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் தனது வரலாறு, கலை,இலக்கியப் பாரம்பரியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வது அவசியமாகிறது.

Tuesday, June 10, 2014

கம்பன் கழகத்தின் ‘ஏற்றமிகு இளைஞன்’ விருதுபெற்ற அரசியல் ஆய்வாளர் திரு.யதீந்திரா

jathindra

ஈழத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படும் திரு.யதீந்திரா அவர்கள் தம்பலகாமம் புதுக்குடியிருபில் 1976.06.07.திகதி பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை குளக்கோட்டன் வித்தியாலயத்திலும் பின்னர் இடப்பெயர்வு காரணமாக ஆலங்கேணி மகா வித்தியாலயத்திலும் கற்று உயர்கல்வியை திருகோணமலை இராமகிருஷ்ண சங்க  இந்துக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் க.பொ.த.உயர்தரம்வரை கற்றார்.

1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன் சந்தி) - புகைப்படங்கள்

Koneswaram1970

1970  ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையில் 'திருக்கோணேஸ்வர  ஆலய நகர் வலம்'  இடம்பெறுகையில் திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கணேசன் சந்தியில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளின் பதிவுகள் சில.

Tuesday, June 03, 2014

தெய்வத்தை வேண்டுகின்றேன்

பெரியோர்கள் செய்கை

பாசத்தில் பிணைப்புண்டிந்த
பாரினில் பிறந்து விட்டேன்
யோசனை பல வாறாக
நொடிக் கொரு ஆவல் தோன்றும்.
ஆசையை அறுத் தெறிந்தால்
அமைதியை அடையலாம் தான்
லேசில்லை அதனைச் செய்தல்
நிம்மதி இழந்தேன் அந்தோ!.

Tuesday, May 27, 2014

அது போதும்

koneswaram

சிற்றம்பலத்தில் நடம் புரியும்
சிவனே உன்றன் திருத் தாள்கள்
பற்றித் தொழுதேன் பயம் நீக்கிப்
பாப இருளைப் போக்கிவிடு.
கற்றைக் குழலில் பிறை சூடிக்
கங்கை மானைத் தரித்தோனே!
முற்றும் துறந்த முனிவர்களும்
முழுதும் உணரார் உன் பெருமை.

Monday, May 26, 2014

'சிவநய' அறநெறிப்பாடசாலை, கப்பல்துறை - புகைப்படங்கள்

சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறைக் கிராமம் அமைந்துள்ளது. திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான  கிராமங்களில் இக்கிராமமும் ஒன்றாகும்.

Monday, May 19, 2014

தம்பலகாமம் தந்த பெண் எழுத்தாளர் திருமதி காயத்ரி நளினகாந்தன்

“பட்டிகள் கட்டியதால் பட்டிமேடு” என கவிஞர் க.வேலாயுதம் அவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்ற பட்டிமேட்டில் ‘வைராவியார்’ குடும்பத்தைச் சார்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி அவர்களுக்கும், அவரது மனைவி ஞானசோதி அம்மையாருக்கும் இரண்டாவது மகளாகப் பிறந்தவர்தான் நமது தம்பலகாமத்தின் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி.காயத்ரி நளினகாந்தன் அவர்கள்.

Friday, May 16, 2014

5 ஆம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 )  - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக் கிந்தப்
பாரினில் துணையுமுண்டோ?
எந்தையே! தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே! நின் பிரிவால்
தவிக்குதே! தமிழர் நெஞ்சம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்களின் மறைவுக்காகப் எழுதப்பட்ட இக்கவிதையூடாக அமரர் திரு.க.வேலாயுதம் அவர்கள் எழுத்துலகில் பிரவேசித்தார்.

Monday, May 05, 2014

தம்பலகாமத்து அண்ணாவிமார்கள் பற்றிய ஒரு ஞாபகமீட்டல்…….

திருகோணமலையின் கலை, இலக்கிய பாரம்பரியம் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் வரலாற்றாதாரங்கள் பற்றிய தேடல்களும் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் திருகோணமலையிலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றான தம்பலகாமத்தில் இன்று முற்றும் முழுதாக மறக்கப்பட்டுவிட்ட அண்ணாவிமார்களின் காலத்தினை மீட்டுப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Wednesday, April 30, 2014

மூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - புகைப்படங்கள்

வரலாற்றைத் தேடும் பயணங்களில் பல சுவையான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான ஒரு சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது. நண்பர் வைத்தியகலாநிதி ஸதீஸ்குமார் அவர்கள் வெருகலில் தமிழர் வரலாற்றாதாரங்கள் தேடும் பயணமொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2'  திருகோணமலையில் வெளியிடப்பட்ட பின்னர் அவருடன் இணைந்து இந்தப் பயணம் ஆரம்பித்தது.

Wednesday, April 23, 2014

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - புகைப்படங்கள்

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

பண்­ணகம் என அழைக்­கப்­பட்ட மாத்­தளை மாந­கரில் மிகப்பழை­மையும், சிறப்பும் மிக்க ஆல­ய­மாக ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆலயம் விளங்­கு­கின்­றது. இவ்­வா­ல­யத்தின் மூலவர் அம்­பிகை எழுந்­த­ருளி அருள்­பா­லிப்­ப­தோடு சிவன் பார்­வ­தி­யுடன் ஏனைய பரி­வார தெய்­வங்­க­ளும்,  நவக்­கி­ர­கமும் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளது.

Tuesday, April 22, 2014

பல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள்

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

இந்தமுறை புதுவருட விடுமுறையில் பார்க்கக் கிடைத்த இடங்களில் நாலந்த சிலை மண்டபம் (Nalanda Gedige) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கை நில அளவைத் திணைக்களம் இலங்கையின் மையப்பகுதியென  ( 7.6699136N, 80.6458444E ) உறுதிப்படுத்திய இடம் இதுவாகும். A9 பிரதான வீதியில், தம்புள்ளைக்கு தெற்குப் பக்கமாக 20 கி.மீ தூரத்தில், பிரதான பதையில் இருந்து கிழக்கே 1கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த நாலந்த கெடிகே என்னும் சிலை மண்டபம்.

Friday, April 11, 2014

தூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்

தூக்கமின்மை Insomnia

நமது உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் இருக்கும் ஒரு நோயின் அறிகுறி தூக்கமின்மை (Insomnia) ஆகும். நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்வதிலும் அல்லது மேற்கொண்ட தூக்கத்தை இடையூறு இல்லாமல் நீட்டிப்பதிலும் குழப்பங்கள் இருந்தால் அதனை "தூக்கமின்மை" என்று வரையறுக்கின்றனர்.

Thursday, April 03, 2014

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்படங்கள்

ஈமத்தாழி

திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டத்தில் கிணறு வெட்டும்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட தாழி இதுவாகும். நீண்ட தேடல்களுக்குப் பின்னால் இப்படங்கள் கிடைக்கப்பெற்றது. எனினும் இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. இத்தாழியுடன் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த மரங்களையும் படங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

திருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1

திருகோணமலை வரலாறு

வரலாற்றை அறிதல் என்பது வெறுமனே பழம்பெருமை பேசுவதற்காக அல்லாமல் நமது முன்னோர்களின் பண்பாட்டு விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சென்று அதனூடாக நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாய் இருத்தல் வேண்டும்.

Tuesday, April 01, 2014

தம்பலகாமம் பிரதேசச் செயலாளர் கௌரவிப்பு - புகைப்படங்கள்

jeya-shripathy

இடம். தி/சாரதா வித்தியாலயம்.
பட்டிமேடு
தம்பலகாமம்.
காலம். 25.03.2014. செவ்வாய்க்கிழமை
நேரம். பிற்பகல் 2.00.

Friday, March 28, 2014

அமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் அவர்களின் நினைவுப் பேருரை 30.03.2014

அமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் (07 .12. 1929 - 27 02.2014)  ஈழத்தில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். அவரது நினைவுப் பேருரை தொடர்பான அழைப்பிதழ்.

Wednesday, March 26, 2014

பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2' - புகைப்படங்கள்

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் எதிர்வரும் 04.04.2014 அன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள புத்தக வெளியீட்டில் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2  வெளியிடப்பட இருப்பதாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தெரிவித்தார்.

Tuesday, March 25, 2014

காணாமல் போகும் கடற்கரைகள் - சல்லி - புகைப்படங்கள்

காணாமல் போகும் கடற்கரைகள்

திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுள்ள அழகிய கடற்கரைக் கிராமம் சல்லி. இங்குள்ள கல்லணையைத் தாண்டிச் சீறும் கடல் அலைகளால்  காணாமல் போகும் கடற்கரைகளின் புகைப்படங்கள் இவை.

Monday, March 24, 2014

காற்றுவெளி மின்னிதழுக்குரிய தங்களின் படைப்புக்களை அனுப்பி சிறப்பியுங்கள்

காற்றுவெளி

வணக்கம்.
இலண்டனை தளமாகக்கொண்டு மாதம் தோறும் வெளிவரும் இணைய சஞ்சிகை காற்றுவெளி. காற்றுவெளி மின்னிதழுக்குரிய படைப்புக்களை அனுப்பி உதவுங்கள். நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்து வையுங்கள். இலக்கிய,அறிவியல்,சமயக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. எழுதுபவர்கள் A 4 அளவிலான 4 பக்கங்களுக்கு அதிகமில்லாமல் எழுதுங்கள்.

Thursday, March 13, 2014

"நிலாவெளி - வரலாறும், பண்பாடும்" நூல் வெளியீட்டு விழா

நிலாவெளி - வரலாறும் பண்பாடும்

நிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்

THE MOTHER GODDESS OF NILAAVELI

திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்று மூலங்களில் நிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்தெய்வ உருவகம் குறிப்பிடத்தக்கதாகும். புதுடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவ்வரிய பொக்கிசம் திருகோணமலையில் அன்னை வழிபாட்டின் தொன்மைக்கான ஆதாரமாகும். சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் ( Dr.J.T.XAVIER - MBBS, FRCS ) அவர்கள் இது இந்துவெளி நாகரீக காலத்திற்கு உரியதெனக் கருதுகிறார்.

Tuesday, March 04, 2014

சிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா

கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளிமேட்டில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். வருடா வருடம் இக்கோயிலில் தீ மிதிப்பு வைபவம் மிகச் சிறப்பாக இடம்பெறும். இக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது சிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா அவர்களின் பெற்றோர்களின் வீடு.

Tuesday, February 25, 2014

தம்பலகாமம் தந்த சிறுகதை எழுத்தாளர் திரு.இ.மதன் அவர்கள்

திருமலை இ.மதன்

வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ மிகவும் பிரபலியமான இடமாகும். ‘கூட்டங்கள் கூடியதால் கூட்டாம்புளி’ என்று இத்திடலை கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளார். இத்தகைய சிறந்த ‘கூட்டாம்புளியில்’ புகழ் பெற்ற நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் புதல்வி இந்திராணி அவர்களுக்கும் இந்திரசூரிய பிரேமச்சந்திரன் அவர்களுக்கும் மூத்த மகனாகப் பிறந்தவர்தான் நமது மதிப்பிற்குரிய ‘பாதை மாறிய பயணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் திரு.இ.மதன் அவர்கள்.

Monday, February 17, 2014

திருகோணமலையில் சோழ இலங்கேஸ்வரன்

இதுவரை நாம் திருகோணமலையில் சோழர்கள் என்னும் தொடரில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் (இலங்கை) சோழவம்சத்து இளவரசர்கள் அரசப்பிரதிநிதிகளாக முடிசூடி ஆட்சி செய்தார்கள் என்பதனைப் பார்த்திருந்தோம்.

பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா

1992ம் ஆண்டு அது.
வண்ண வண்ணப் பூக்கள் தேசிய விருதைப் பெற்றிருந்த காலம். கலைப்படப் பிரியர்களின் தாகம் தீர்த்த "வீடு", "சந்தியாராகம்" என்பன இலக்கியவாதிகளால் உரத்துப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அண்ணாசாலையை ஒட்டி முதுமையினால் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தை இடிக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒற்றை அறையில் வறுமையில் வாடும் நாயகி மௌனிகா பாண்டியராஜனுடன் வாழ்க்கை நடாத்தும் "என் இனிய பொன்னிலா" திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த அறையைத் தின வாடகைக்கு எடுத்து படமாக்கி கொண்டிருந்தார் பாலு மகேந்திரா.