Friday, August 30, 2013

ஆர்மோனியக் கலைஞர் திரு.சி.கனகரத்தினம்


தம்பலகாமம் தெற்குப்பகுதியில் ‘பச்சைப் பசேலென’ வயல்களால் சூழப்பட்ட இடமாக அமைந்துள்ளது மாக்கைத்திடல். புழமையில் ‘திருமால் கை’ என்னும் கிருஷ்ணகோயில் இத்திடலில் அமைந்திருந்ததாகவும் காலப்போக்கில் இக்கோயில் சிதைவுற்று அழிந்து போனதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. திருமால் கை என்னும் கோயில் அமைந்திருந்த இடம் திருமால்கை என வழங்கப்பட்டது.

திருமால்கையே காலப்போக்கில் சிதைந்து மாக்கைத்திடலாக மாறியது. சிதைவுற்ற இக்கோயிலின் அழிபாடுகள் கலைஞர் கனகரத்தினத்தின் மூத்த சகோதரரின் காணிக்குள் காணப்படுகிறது. தம்பலகாமத்தில் பெரிதும் பேசப்படுகிற ‘குடமுருட்டி ஆறு’ இக்கிராமத்தின் எல்லை அருகாக ஓடுகிறது.

Thursday, August 29, 2013

சம்பூர் பிரதேசத்தின் தொன்மை - நூல்வெளியீட்டு அழைப்பிதழ்

சம்பூர் பிரதேசத்தின் தொன்மை

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5

குளக்கோட்டன்

திருகோணமலை வரலாற்றில் மன்னர்களின் நேரடி ஆட்சி முறை தளர்ந்தபிற்பாடு நிலமானியமுறை சார்ந்த வன்னியர் ஆட்சி தொடங்கியதெனலாம். இதனைப் பல வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குளக்கோட்டனின் அரச பிரதானியாகிய தனியுண்ணாப் பூபாலவன்னியர் என்பவர் மூலம் திருகோணமலையில் வன்னியர்களின் ஆட்சி தொடங்கியது என்றாலும் குளக்கோட்டன் காலத்திற்கு முன்னரும், பின்னரும் இங்கு அவை தொடர்ந்திருந்திருக்கிறது எனச்சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Tuesday, August 27, 2013

நாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம்

 திசவீரசிங்கம்

திரு.மாசிலாமணி அவர்களுக்கும் வீராசி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த
நாடகக்கலைஞர் திசவீரசிங்கம் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சாரதியாகக் கடமையாற்றியவர். தம்பலகாமம் ‘நடுப்பிரப்பந்திடலில்’தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

நாடகத்துறையில் மிகுந்த அனுபவம் மிக்க இவர் முற்போக்கானசிந்தனையாளன்.  தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற என்னையும் எனது சினேகிதர்களாகிய திரு.ச.மனோகரலிங்கம், திரு.க.சின்னராசா , திரு.சி.குணரத்தினம் போன்ற கலையார்வம் மிக்க மாணவர்களையும் ஒன்றாக இணைத்து 'கொலைகாரன்',‘சுமதி எங்கே?’ ,‘தூக்குத்தூக்கி’ போன்ற சமுக நாடகங்களை அரங்கேற்றினார்.

Thursday, August 22, 2013

திருகோணமலைத் தமிழ்விழா 2013 - புகைப்படங்கள்

திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலையில் 2013ம் ஆண்டுக்கான தமிழ்விழாவும், மூத்த எழுத்தாளர் கௌரவிப்பும் 6.07.2013 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு திருகோணமலை புனித மரியாள் கல்லுாரியின் கலை அரங்கில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தில்லைநாதன் பவித்திரன் தலைமையில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றல்,தமிழ்த்தாய் வாழ்த்து என்னவற்றைத் தொடர்ந்து வ.தர்மபாலன் அவர்களின் வரவேற்புரை நிகழ்ந்தது.தில்லைநாதன் பவித்திரன் தொடக்கவுரை ஆற்றியதைத் தொடர்ந்து ஶ்ரீமதி பத்மராஜினி விஜயகாந்தனால் தமிழிசை இசைக்கப்பட்டது.

Wednesday, August 21, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4

கலிங்க மாகன்
கலிங்க மாகன்
முதலாம் விஜயபாகு ( கி.பி 1055 - 1110 )மன்னன் காலத்தில் கந்தளாய் விஜயராசச் சதுர்வேதி மங்கலம் என்றும் அங்குள்ள சிவன் கோவில் விஜயராஜ ஈஸ்வரம் என்றும் அழைக்கபட்டது. கி.பி 1097 இல் நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை வர்ணிக்கிற சாசனம் முதலாம் விஜயபாகுவின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டதாகும்.(1)

திருகோணமலைத் தமிழ்ச்சங்கம் நடத்திய “முத்தமிழ் விழா” - புகைப்படங்கள்

திருகோணமலை முத்தமிழ் விழா

திருகோணமலைத் தமிழ்ச்சங்கம் ஆனி 30ஆந்திகதி பி.ப.2.30 மணியளவில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் முத்தமிழ்விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. பிரதம விருந்தினராகக் கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஜனாப்.எம்.ரி.ஏ.நிசாம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.விஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Monday, August 19, 2013

விருதுக்குத் தெரிவான தில்லைநாதன் பவித்திரனின் 'குறி இடல்' கவிதை நூல்

 Thillainathan Pavithran

இலங்கை இலக்கியப் பேரவை 2012 ஆம் ஆண்டுக்கான விருதுபெற இருக்கும் நூல்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு இருக்கிறது.அதனடிப்படையில் 2012 கவிதைக்கான விருது பெறும் நூலாக அறிவிக்கப்பட்டிருப்பது திருகோணமலையைச் சேர்ந்த தில்லைநாதன் பவித்திரனின் குறி இடல் கவிதை நூல்.

Friday, August 16, 2013

மிருதங்க, டோல்க்கி கலைஞர் திரு.ந. குழந்தைவடிவேல்தம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு இடமாகும். இங்கேதான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘நாயன்மார் கோயில் வேள்வி வளாகம்’ அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகாண்மையில் வடக்குப்புறமாக அமைந்துள்ளது மிருதங்கக் கலைஞர் திரு. ந. குழந்தை வடிவேல் அவர்களின் வீடாகும்.

அவரின் தகப்பனார் திரு. மாணிக்கம் அவர்கள் அந்நாட்களில் சிறந்த கலைஞராக விளங்கினார். மேடைகளுக்கான காட்சிகளை திரைகளில் வரைவதிலும் ‘மேக்கப் கலையிலும்’ சிறந்து விளங்கினார். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் இடம் பெறும் 17 வது திருவிழாவில் இவரது வாணவேடிக்கைகளும் குதிரை ஆ ட்டமும் மக்களைப் பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சிகளாகும்.

Thursday, August 15, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3

தம்பலகாமம்

தொல்பொருள் சாசனங்களுடன் ஒப்பிடுகையில் இடப்பெயர்கள் பெரும்பாலும் தனித்திறமையோ, நுணுக்கமோ இன்றி பொதுமக்களால் படைக்கப்படுபவை. எனவே அவை மக்களின் மொழிவழி எண்ணங்களை மிகச்சிறப்பாக உணர்த்தி நிற்கின்றது.

Wednesday, August 14, 2013

இயற்கை எழில் நிறைந்த தம்பலகாமம்

Thampalakamam

தம்பலத்தால் கமத்தொழிலை விருத்தி செய்து
தமிழ்க் குடிகள் வாழுகின்ற காரணத்தால்
தம்பலகாமம் என்னும் பெயரைப் பூண்டு எங்கள்
தாயகமாம் உழவர் குலம் தழைத்த நாடு
செம்பவளத் திருமேனி உடையோனான
ஜீவர்களை இரட்சிக்கும் கருணை வள்ளளல்
எம்பெருமான் கோணேசர் கோயில் கொண்டு
இருக்கின்ற திருப்பதியும் இந்த ஊரே.

Tuesday, August 13, 2013

ஐந்தாம் ஆண்டு நிறைவில் 'ஜீவநதி' ( 13.08.2008 )


சிலவேளைகளில் எந்தப்பதிவுகளையும் வைக்காமல் மிகவேகமாக உறுண்டோடி விடுகிறது காலம். நிதானித்து நிமிர்ந்து உட்காருகையில்தான், ஆகா இந்த வருடம் முடிந்துவிட்டதா? என்ற ஆச்சரியம் தோன்றும்.

இன்றுடன் ஐந்து வருடங்களை நிறைவு செய்யும் 'ஜீவநதி' வலைப்பதிவு பேருக்கேற்றபடி ஆங்காங்கே கூடிக்குறைந்தாலும் மிகைப்படாமலும், வற்றிப்போகாமலும் தான் நினைத்த இலக்கினை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதோடு தான் கடந்து வந்த காலத்தினை சந்தோசத்தோடு மீட்டுப்பார்க்கவும் வைத்திருக்கிறது.

இற்றைவரை எனது பாட்டனார் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் 62 பதிவுகளுடனும், எனது தந்தை திரு.வே.தங்கராசா அவர்களின் 40 பதிவுகளுடனும், எனது (த.ஜீவராஜ்) 138 பதிவுகளுடனும் பயணித்துக்கொண்டிருக்கிறது இந்த வலைப்பதிவு. கடந்த ஐந்து வருடகாலமாக இணையவெளியிலும் , நேரிலும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள் மூலம் உற்சாகமூட்டிவரும் நட்புள்ளங்களுக்கு 'ஜீவநதி' தனது மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

13.08.2008 அதிகாலை 12.49 மணிக்கு மனம் துடிக்கும் என்னும் முதல் பதிவு இணையவெளியில் இணைந்துகொண்டது. அன்று அந்தக்கணத்தில் இருந்த அதே உற்சாகம் இன்றும் தொடர்வது சந்தோசமான விடையம். திரட்டிகள், சமூகவலைத்தளங்கள் என்பன இந்த உற்சாகம் குன்றவிடாமல் துணைநிற்கும் தூண்கள் என்றால் அது மிகையில்லை.

பொழுதுபோக்கு,மனநிறைவு போன்ற பலன்களுக்கு அப்பால் தனிப்பட்ட வாழ்வில் துன்பங்கள் சூழ்கின்ற வேளைகளில் ஒரு உளவலுவூட்டும் ஊக்கியாக இந்த வலைப்பதிவு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நாளும் புதுப்புது அறிமுகங்களையும், அங்கிகாரங்களையும் உருவாக்கித்தரும் இந்த 'ஜீவநதி' வலைப்பதிவைத் தொடர்வது மகிழ்ச்சிதருவதாய் இருக்கிறது.


நட்புடன் ஜீவன்.
13.08.2013.

Friday, August 02, 2013

குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி - 7


குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் ஆற்றிய பணி இன்றும் திருகோணமலை தொடக்கம் திருக்கோயில் வரை ஒருவித குறைபாடுகளுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கால மாற்றத்தினால் சொல்லமுடியாத அளவுக்கு   இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் துன்பங்களை அனுபவித்து வந்த போதும் அவற்றினைக் கைவிடாமை குறிப்பிடத்தக்கதாகும்.

மன்னர்கள் அண்டை நாடுகளைக் கைப்பற்றுவதும் தமது ஆட்சிக்குட்படுத்துவதும் பின்னர் அவற்றை விட்டு செல்வதும் வழமை என்பது வரலாறு. இருந்தும் குளக்கோட்டன் என்னும் தர்மசீலன் ஆற்றிய பணியானது இன்றுவரை மக்கள் அவனை மறக்காமல் ஒரு தெய்வீக புருசனாகப் போற்றி வணங்கச் செய்திருக்கிறது.