Showing posts with label ஜீவநதி. Show all posts
Showing posts with label ஜீவநதி. Show all posts

Tuesday, August 13, 2013

ஐந்தாம் ஆண்டு நிறைவில் 'ஜீவநதி' ( 13.08.2008 )


சிலவேளைகளில் எந்தப்பதிவுகளையும் வைக்காமல் மிகவேகமாக உறுண்டோடி விடுகிறது காலம். நிதானித்து நிமிர்ந்து உட்காருகையில்தான், ஆகா இந்த வருடம் முடிந்துவிட்டதா? என்ற ஆச்சரியம் தோன்றும்.

இன்றுடன் ஐந்து வருடங்களை நிறைவு செய்யும் 'ஜீவநதி' வலைப்பதிவு பேருக்கேற்றபடி ஆங்காங்கே கூடிக்குறைந்தாலும் மிகைப்படாமலும், வற்றிப்போகாமலும் தான் நினைத்த இலக்கினை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதோடு தான் கடந்து வந்த காலத்தினை சந்தோசத்தோடு மீட்டுப்பார்க்கவும் வைத்திருக்கிறது.

இற்றைவரை எனது பாட்டனார் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் 62 பதிவுகளுடனும், எனது தந்தை திரு.வே.தங்கராசா அவர்களின் 40 பதிவுகளுடனும், எனது (த.ஜீவராஜ்) 138 பதிவுகளுடனும் பயணித்துக்கொண்டிருக்கிறது இந்த வலைப்பதிவு. கடந்த ஐந்து வருடகாலமாக இணையவெளியிலும் , நேரிலும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள் மூலம் உற்சாகமூட்டிவரும் நட்புள்ளங்களுக்கு 'ஜீவநதி' தனது மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

13.08.2008 அதிகாலை 12.49 மணிக்கு மனம் துடிக்கும் என்னும் முதல் பதிவு இணையவெளியில் இணைந்துகொண்டது. அன்று அந்தக்கணத்தில் இருந்த அதே உற்சாகம் இன்றும் தொடர்வது சந்தோசமான விடையம். திரட்டிகள், சமூகவலைத்தளங்கள் என்பன இந்த உற்சாகம் குன்றவிடாமல் துணைநிற்கும் தூண்கள் என்றால் அது மிகையில்லை.

பொழுதுபோக்கு,மனநிறைவு போன்ற பலன்களுக்கு அப்பால் தனிப்பட்ட வாழ்வில் துன்பங்கள் சூழ்கின்ற வேளைகளில் ஒரு உளவலுவூட்டும் ஊக்கியாக இந்த வலைப்பதிவு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நாளும் புதுப்புது அறிமுகங்களையும், அங்கிகாரங்களையும் உருவாக்கித்தரும் இந்த 'ஜீவநதி' வலைப்பதிவைத் தொடர்வது மகிழ்ச்சிதருவதாய் இருக்கிறது.


நட்புடன் ஜீவன்.
13.08.2013.

Thursday, August 13, 2009

ஓராண்டு நிறைவில் ஜீவநதி


ஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு(13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் என்னைச் சுற்றி நிறைய நடந்துவிட்டிருக்கிறது.

Tuesday, August 11, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு



அன்புடைய இலங்கை வலைப்பதிவாளர்களுக்குநீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட இலங்கை வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு இந்த மாதம் நடைபெற ஏற்பாடகியுள்ளது.
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

Tuesday, July 07, 2009

நன்றி யாழ்தேவி




ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக யாழ்தேவி சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை யாழ்தேவி நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன் ஜீவன்



Friday, May 15, 2009

நன்றி நெல்லைத்தமிழ்.COM


ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக நெல்லைத்தமிழ்.COM சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை நெல்லைத்தமிழ்.COM நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன் ஜீவன்






Sunday, November 02, 2008

தமிழ்மண நட்சத்திரவாரம் - ஒரு மீள்பார்வை

நட்சத்திரம்
கடந்த வாரம் ஜீவநதி வலைப்பூவினை தனது இந்தவார நட்சத்திரமாக ஏற்றுச் சிறப்பித்த தமிழ்மணத்திற்கும், தமிழ்மண நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆரம்பித்து 80 நாட்களை இன்றுடன் பூர்த்தி செய்யும் ஒரு வலைப்பூவிற்கு இப்படியொரு அறிமுகம் கிடைத்திருப்பது மனமகிழ்வைத் தருகிறது. வலையேற்றிவைத்த எண்ணங்களை சகபதிவர்களுடனும் வலைப்பூ வருகையாளர்களிடமும் பகிர்ந்துகொள்வதில் தன் சிறப்பான பங்கினை வகித்திருக்கிறது இந்த தமிழ்மண நட்சத்திரவாரம்.
.
வருகைகள்
நட்சத்திரம்
திகதி


.
மேலே காட்டப்பட்டிருப்பது ஜீவநதி வலைப்பூக்கான வருகைகள் பற்றிய கணிப்பீடு. {தமிழ்மண நட்சத்திர வாரம் 27இருந்து 2 வரை}

{நன்றி Histats.com }
நீலநிற வரைபு - Page views
மஞ்சள்நிற வரைபு - Visitors
கபிலநிற வரைபு - new visitors

இந்த நட்சத்திரவாரத்தில் சகபதிவர்களும், வலைப்பூ வருகையாளர்களும் எனது பதிவுகளுக்குத் தந்த வரவேற்பும், மறுமொழிகளும் சந்தோசத்தையும் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தையும் தந்தது.
எனவே தொடர்ந்து வரும் நாட்களிலும் இதே உற்சாகத்தோடு ஜீவநதி உங்கள் வலைநாடி வரும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். வணக்கம்....
த.ஜீவராஜ்

Monday, October 27, 2008

தமிழ்மணம் நட்சத்திரவாரம்



அது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத்தது. தமிழ்மண உதவிப்பக்கம்மூலம் வலைப்பூ உருவாக்கிய எனக்கு குறுகிய காலத்தில் கிடைத்த நல்லதொரு அங்கீகாரமிது. தமிழ்மண நிர்வாகிகளுக்கும், சகபதிவர்களுக்கும் ,வலைப்பூ வருகையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனக்கும் இணையத்துக்குமான உறவு யாழ் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் எனக்கு இணையம் ஒரு செய்தி ஊடகமாகவே அறியப்பட்டிருந்தது (அடிபாடு {சண்டை} நடந்தால் ஓடிப்போய் எல்லோருமாகப் பார்ப்போம்) இருந்தும் பின்னாளில் சாதாரண இணையப்பக்கங்கள் பார்வைக்கு கிடைக்கத்தொடங்கிய வேளையில் (கவிதை சம்மந்தமான ) நாமும் இதுபோல ஒரு வலைப்பூ தொடங்கலாமே என சின்னதாய் ஆசையொன்று மனதில் துளிர்விடும். ஆனாலும் கணிணி பற்றிய அடிப்படைக்கு குறைவான அறிவும், வலைத்தளம் உருவாக்கவும் அதை தொடர்ந்து செயற்படுத்தவும் நிறையச் செலவாகுமென்ற பயமும் கிடப்பில் போட்டிருந்தது எனது வலைப்பூக்கான முயற்சிகளை. பின்னாளில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, கல்விக்கான எனது போராட்டம் என்பவற்றில் வலைப்பூ ஆசைகள் அடிபட்டுப்போனது.

சற்றும் மனந்தளராத விக்கரமாகித்தனாக இணைய வேதாளத்துடனான எனது வலையேற்றும் முயற்சிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு மீள ஆரம்பிக்கப்பட்டது.அதிஸ்டவசமாக இலவச வலைத்தளம் உருவாக்குவதற்கான முயற்சியில் கூகிளில் தேடியலைந்துகொண்டிருந்தபோது  ‘தமிழில் எழுதலாம் வலையில் பரப்பலாம் வாருங்கள்’ என்ற அழைப்பு என்னையும் உள்ளழைத்துக்கொண்டது. பிறகென்ன இருவாரங்கள் தட்டுத்தடுமாறி முட்டி மோதி,பல நாட்கள் உறங்காமலே விடிய, ஒருவாறு 13.08.2008 அன்று எனது முதல் பதிவினை வெற்றிகரமாக வலையேற்றினேன்.

என்னுடைய எண்ணங்களைக் கவிதையாக எழுதிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். முழுமையான சுதந்திரத்துடன் எனது எண்ணங்களைப் பிரசுரிக்கிறேன் என பொய்சொல்ல முடியவில்லை. நானாக வகுத்துக்கொண்ட சில மட்டுறுத்தல்களுடன் வலைநாடி வருகிறது என் பகிர்வுகள். நீங்களதைக் கவிதையாக ஏற்றுக்கொண்டால் சந்தோசம், இல்லையென்றாலும் காரியமில்லை அது ஒரு கருத்துப்பகிர்வாகவேனும் இருக்குமல்லவா?

வலைக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இந்த நட்சத்திர வாரத்திலும் வழமைபோல பதிவிட உத்தேசித்திருக்கிறேன்.

மீண்டுமொருமுறை தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

த.ஜீவராஜ்