வெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. எனவே இடப்பெயர்கள் எல்லாம் மனிதனின் மொழிமரபையும் பண்பாட்டையும் வளர்க்கின்றன. இதனடிப்படையில் ஊர்களை இனங்காணுவது மனித இனத்தின் முக்கிய நடத்தையை உருவாக்குகின்றது.(1) என்று சொல்கிறார் திரு.ஆர். ஆளவந்தார்.
Tuesday, July 30, 2013
Sunday, July 28, 2013
குளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் - பகுதி.6
இதுவரை குளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றாசிரியர்கள் பலர் முரண்பாடான கருத்துக்களையே வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் பரணவிதானையும் அவரது கருத்தை ஏற்கும் ஏனைய வரலாற்றாய்வாளர்களும் குளக்கோட்டன் கி.பி.1223ஆம் ஆண்டு இலங்கை வந்ததாகக் கூறுகின்றனர்.(1) வரலாற்றாய்வாளர் பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களும் கி.பி.1223 ஆம் ஆண்டிலேயே குளக்கோட்டன் இலங்கை வந்ததாக தாம் எழுதிய ‘கோணேஸ்வரம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Posted by
geevanathy
Labels:
குளக்கோட்டன்,
கோணநாயகர்,
கோணேஸ்வரம்,
தம்பலகாமம்,
தர்ம சீலன்,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்
No comments:

Thursday, July 25, 2013
இலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் - பகுதி 1
‘எங்கே வரலாறு மௌனம் சாதிக்கத் தொடங்குகின்றதோ அங்கே இடப்பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய்திறந்து பேசத்தொடங்கும்’ என்கிறார் ஊர்ப்பெயர் ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் திரு.ஆர். ஆளவந்தார் அவர்கள்(1). உலக கவனத்தையீர்த்த இந்த இடப்பெயராய்வு (Toponymy )18 ஆம் நூற்றாண்டு முதல் ஒரு அறிவியல் துறையாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
Posted by
geevanathy
Labels:
Toponymy,
இடப்பெயர் ஆய்வு,
ஊர்ப்பெயர்,
தம்பலகமம்,
தம்பலகாமம்,
தம்பை நகர்,
வரலாற்றில் திருகோணமலை
2 comments:

Wednesday, July 24, 2013
திருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோட்டனின் திருப்பணிகள் -பகுதி 5
பழமையில் ‘உன்னரசுகிரி’ என வழங்கப்பட்ட பிரதேசத்தை ஆட்சிசெய்த மனுநேய கயபாகு என்பான் கடலில் அடைந்து வந்த பேழை ஒன்றில் காணப்பட்ட பெண் குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்து ‘ஆடகசவுந்தரி’ எனப்பெயருமிட்டு தனக்குப்பிறகு ஆட்சி உரிமையை வழங்கினான் என ‘கோணேசர் கல்வெட்டுக்’ கூறுகிறது.
குளக்கோட்டன் செய்யும் திருப்பணியை அழித்தொழித்து ,அவனையும் அவன் படைகளையும் கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்குமாறு தனது முதன் மந்திரிக்கு ஆணையிட்டு ஆடகசவுந்தரி அனுப்பி வைக்க அவர்களது முயற்சியை தனது மதியூகத்தால் வெற்றி கொண்ட குளக்கோட்டன் ஆடகசவுந்தரியை மணந்து தனது ஆட்சி அதிகாரத்தை திருகோணமலையிலிருந்து திருக்கோயில் வரை வளர்த்துக் கொண்டான் என ‘கோணேசர் கல்வெட்டு’ மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
Posted by
geevanathy
Labels:
குளக்கோட்டன்,
கோணநாயகர்,
கோணேஸ்வரம்,
தம்பலகாமம்,
தர்ம சீலன்,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்
2 comments:

Friday, July 19, 2013
நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு @ வரலாற்றில் திருகோணமலை
கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நிலாவெளி தான சாசனம் கோணேசர் ஆலய கட்டடச் சிதைவுகளில் ஒன்றாகும். இது நிலாவெளிப் பிள்ளையார் கோயிலின் தீர்த்தக் கிணற்றிலே படிக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாசனம் திருகோணமலையின் வரலாற்று ஆர்வலராகிய திரு.நா.தம்பிராசா அவர்களினால் கண்டறியப்பட்டு திரு.கா.இந்திரபாலா , திரு.செ.குணசிங்கம் என்போரால் வெளிப்படுத்தப்பட்டது.
Monday, July 15, 2013
குளக்கோட்டன் வகுத்த அருவ, உருவ வழிபாடுகள் பகுதி 4
வசிட்ட மாமுனிவரால் வடிவமைக்கப்பட்ட உருவ ,அருவ வழிபாடுகள் ஒருவித குறைபாடுகளுமின்றி திருகோணமலை கோணேஸ்வரத்தில் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தன. குளக்கோட்டன் காலத்திற்குப் பிறகும் இவ்வாலயச் செயற்பாடுகள் செம்மையாக நடைபெற்றன.
கோணநாயகர் கோயில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது தமது சமயத்தைப் பரப்ப முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட போத்துக்கீசர் திருகோணமலையில் உள்ள கோணநாயகர் கோயிலை இடித்துத்தரைமட்டமாக்கினர்.
Posted by
geevanathy
Labels:
குளக்கோட்டன்,
கோணநாயகர்,
கோணேஸ்வரம்,
தம்பலகாமம்,
தர்ம சீலன்,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்
No comments:

Saturday, July 13, 2013
குளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி 3 @ திருகோணாசலப் புராணம்
திருகோணாசலப் புராணம் கோணேஸ்வரத்தின் தலபுராணமாகும். ‘சிவன் கோணநாயகராக அவதாரம் எடுத்த வரலாற்றை இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டனின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வசிட்டர் என்ற தவசிரேஸ்டர் இந்த அற்புதமான வழிபாட்டை உருவாக்கினார் எனத் தலபுராணமாகிய திருகோணாசலப் புராணம் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
கி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற இந்நூலைத் தொகுத்தவர் திரு.மா.முத்துக்குமாரு என்பவராவர். குளக்கோட்டன் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பெரும்பாலான ஆய்வாளர்கள் கோணநாயகர் திருவுருவைப் பற்றி இந்நூல் கூறும் கருத்துக்களை தமது ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
Posted by
geevanathy
Labels:
குளக்கோட்டன்,
கோணநாயகர்,
கோணேஸ்வரம்,
தம்பலகாமம்,
தர்ம சீலன்,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்
No comments:

Wednesday, July 10, 2013
'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - வரலாற்றாதாரங்கள் - பகுதி 2 @ கோணேசர் கல்வெட்டு
மேலும் வாசிக்க
குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை
கைலாசபுராணத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் கோணேசர் கல்வெட்டாகும். கோணேசர் ஆலயப் பணிகள் ஒரு குறைவுமின்றி சிறப்பாக நடைபெற குளக்கோட்டன் எத்தகைய திட்டங்களை மேற்கொண்டான் என்பது குறித்து இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டன் கூற கவிராசவரோதயன் பாடினான் எனப் பாயிரம் கூறுவதால் இந்நூல் குளக்கோட்டன் காலத்திற்குப் பிந்தியது எனக்கருதலாம்.
Posted by
geevanathy
Labels:
குளக்கோட்டன்,
கோணநாயகர்,
கோணேஸ்வரம்,
தம்பலகாமம்,
தர்ம சீலன்,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்
1 comment:

Monday, July 08, 2013
குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை
திருகோணமலை வரலாற்றில் இதுவரை காலம் எவரும் பெற்றிராத மக்களின் பேராதரவையும் வரலாற்றுப் புகழையும் பெற்றவன் குளக்கோட்டன். குளக்கோட்டனின் இயற்பெயர் எது என்று தெரியவில்லை. குளமும், கோட்டமும் கட்டியதால் அவனுக்கு குளக்கோட்டன் என்ற காரணப்பெயர் வழங்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இவனது காலம் வரலாற்றுப் பின்னணி குறித்த ஆய்வுகளும் இன்னும் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது. எது எப்படியிருப்பினும் திருகோணமலை வரலாற்றில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மன்னனாகக் குளக்கோட்டு மன்னன் விளங்குகிறான்.
மக்கள் மத்தியில் குளக்கோட்டனுக்கு இத்தகைய பெரும் செல்வாக்கு எப்படி ஏற்பட்டது. இதற்கான காரணங்கள் எவை? என்பன போன்ற கேள்விகளுக்கு தக்க ஆதாரங்களுடன் விடைகாண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Posted by
geevanathy
Labels:
குளக்கோட்டன்,
கோணநாயகர்,
கோணேஸ்வரம்,
தம்பலகாமம்,
தர்ம சீலன்,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்
2 comments:

Saturday, July 06, 2013
வரலாற்றில் திருகோணமலை
கைலாசபுராணத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் கோணேசர் கல்வெட்டாகும். கோணேசர் ஆலயப் பணிகள் ஒரு குறைவுமின்றி சிறப்பாக நடைபெற குளக்கோட்டன் எத்தகைய திட்டங்களை மேற்கொண்டான் என்பது குறித்து இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டன் கூற கவிராசவரோதயன் பாடினான் எனப் பாயிரம் கூறுவதால் இந்நூல் குளக்கோட்டன் காலத்திற்குப் பிந்தியது எனக்கருதலாம்.
Friday, July 05, 2013
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் - புகைப்படங்கள்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆலயமாக இது மக்களால் பேசப்படுகிறது. பழமையும், வரலாற்று முக்கியத்துவமும் நிறைந்த கதிர்காம முருகன் ஆலயத்துடன் தாந்தாமலை முருகன் ஆலயத்தையும் மக்கள் இணைத்துப் போற்றி வருகின்றனர்.
Wednesday, July 03, 2013
திருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்
குளக்கோட்டன் |
Posted by
geevanathy
Labels:
திருக்கோணேஸ்வரம்,
வரலாற்றில் திருகோணமலை,
வரலாற்றுப் புதையல்
No comments:

Monday, July 01, 2013
புல்மோட்டை 'அரிசி மலை' கடற்கரை - புகைப்படங்கள்
கிழக்கில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலுள்ள அரிசி மலை கடற்கரை பிரதேசம் காணப்படுகின்றது.
Subscribe to:
Posts (Atom)