Monday, July 08, 2013

குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலாற்றில் திருகோணமலை

குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1   @ வரலாற்றில் திருகோணமலை

திருகோணமலை வரலாற்றில் இதுவரை காலம் எவரும் பெற்றிராத மக்களின் பேராதரவையும் வரலாற்றுப் புகழையும் பெற்றவன் குளக்கோட்டன். குளக்கோட்டனின் இயற்பெயர் எது என்று தெரியவில்லை. குளமும், கோட்டமும் கட்டியதால் அவனுக்கு குளக்கோட்டன் என்ற காரணப்பெயர் வழங்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இவனது காலம் வரலாற்றுப் பின்னணி குறித்த ஆய்வுகளும் இன்னும் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது. எது எப்படியிருப்பினும் திருகோணமலை வரலாற்றில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மன்னனாகக் குளக்கோட்டு மன்னன் விளங்குகிறான்.

மக்கள் மத்தியில் குளக்கோட்டனுக்கு இத்தகைய பெரும் செல்வாக்கு எப்படி ஏற்பட்டது. இதற்கான காரணங்கள் எவை? என்பன போன்ற கேள்விகளுக்கு தக்க ஆதாரங்களுடன் விடைகாண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குளக்கோட்டன் இத்தகைய பெரும் செல்வாக்குப் பெற திருகோணமலையில் அவன் மேற்கொண்ட கோணேசர் ஆலயத்திருப்பணியும், கந்தளாய்க் குளத்தைக் கட்டியதுமே காரணம் எனப் பலரும் அபிப்பிராயங்களை வெளியிட்டாலும் ஆழ்ந்து சிந்திக்கின்ற பொழுது அவனது செல்வாக்குக்கு வேறு சில காரணிகளும் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன என்பதே உண்மையாகும்.
குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1   @ வரலாற்றில் திருகோணமலை

இவற்றை விரிவாக ஆராய்வதற்கு முன்னர் குளக்கோட்டன் பற்றிய விபரங்களைத்தரும் ஆவணங்களைப் பற்றிய குறிப்புளை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. குளக்கோட்டன் பற்றியும் அவனது செயல்பாடுகள் குறித்தும் விபரங்களைத் தரும் ஆவணங்களாவன.

1.கைலாச புராணம்.
2.கோணேசர் கல்வெட்டு.
3.திருக்கோணாசல வைபவம்.
4;.திருக்கரைசைப் புராணம்
5.கோணமலை அந்தாதி.
6.யாழ்ப்பாண வைபவ மாலை.
7. யாழ்ப்பாணச் சரித்திரம்
8..கந்தளாய்க் குளக்கட்டுக் காவியம்
9.குளக்கோட்டன் குறித்த திருகோணமலை கோட்டைச் சாசனம்
10.பிற சாசனங்கள்.

தென் கைலாயத்தின் தலபுராணம் என்ற பெருமைக்குரியது கைலாசபுராணம். குளக்கோட்டனும் கயபாகு மன்னனும் கோணேசர் ஆலயத்திற்கு ஆற்றிய தொண்டுகளை இது விபரிக்கின்றது. குளக்கோட்டன் இலங்கை வந்து தந்தையால் மேற்கொள்ளப்பட்டு முற்றுப்பெறாதிருந்த ஆலயப்பணியை நிறைவு செய்தான் எனவும் இதற்கு தந்தையால் முன்னரே சேமித்து வைக்கப்பட்ட திரவிய இருப்பைப் பயன் படுத்திக் கொண்டான் எனவும் அறியக்கூடியதாக உள்ளது.

கோணேசர் ஆலயத்தில் ஒரு மகாமண்டபம்,முன் மண்டபம் ,உயர்ந்த கோபுரங்கள் ,திருமால் கோட்டம் ,அன்னசத்திரம் ,ஓதுவார் மண்டபம் ஆகியவற்றை அமைத்ததுடன் உமைக்கு ஒரு தனியாலயத்தையும் ,சுற்றுமதிலையும் உருவாக்கினான். பாவநாசத்தடாகத்தைக் கட்டி சிவன் நீராட ஒரு தனி மண்டபத்தை உருவாக்கினான். கோணேசப் பெருமானை தரிசிக்க வரும் அடியார்கள் தங்குவதற்காக பெரும் மண்டபங்களையும் மாளிகைகளையும் உருவாக்கினான். இவற்றோடு தன் கடமை முடிவுற்றது என எண்ணாது திருகோணமலை நகரை மலரும், கனிகளும் தரும் மரங்களால் சோலைகளாக்கினான். குளக்கோட்டன் ஆற்றிய சிறப்பான பணிகளில் ஒன்றாகிய குளம் கட்டிய செய்தியையும் தலபுராணமாகிய கைலாசபுராணம் சிறப்பித்துக் கூறுகிறது.

தொடரும்.

வே.தங்கராசா


மேலும் வாசிக்க

1 .'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' -  வரலாற்றாதாரங்கள்  - பகுதி 2   @ கோணேசர் கல்வெட்டு
2.  குளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு'  -  பகுதி 3 @  திருகோணாசலப் புராணம்
4. திருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோட்டனின் திருப்பணிகள் -பகுதி 5
5. குளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் - பகுதி.6

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. Very use full information.

    Thank you

    Nandapalan

    ReplyDelete
  2. Please translate this article in to English through a university scholar and publish in the internet.

    ReplyDelete