Saturday, July 06, 2013

வரலாற்றில் திருகோணமலை

@.'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' -  வரலாற்றாதாரங்கள்  - பகுதி 2   @ கோணேசர் கல்வெட்டு


'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' -  வரலாற்றாதாரங்கள்  - பகுதி 2   @ கோணேசர் கல்வெட்டு

கைலாசபுராணத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் கோணேசர் கல்வெட்டாகும். கோணேசர் ஆலயப் பணிகள் ஒரு குறைவுமின்றி சிறப்பாக நடைபெற குளக்கோட்டன் எத்தகைய திட்டங்களை மேற்கொண்டான் என்பது குறித்து இந்நூல் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. குளக்கோட்டன் கூற கவிராசவரோதயன் பாடினான் எனப் பாயிரம் கூறுவதால் இந்நூல் குளக்கோட்டன் காலத்திற்குப் பிந்தியது எனக்கருதலாம்.



@.குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1   @ வரலாற்றில் திருகோணமலை
குளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1   @ வரலாற்றில் திருகோணமலை



திருகோணமலை வரலாற்றில் இதுவரை காலம் எவரும் பெற்றிராத மக்களின் பேராதரவையும் வரலாற்றுப் புகழையும் பெற்றவன் குளக்கோட்டன். குளக்கோட்டனின் இயற்பெயர் எது என்று தெரியவில்லை. குளமும், கோட்டமும் கட்டியதால் அவனுக்கு குளக்கோட்டன் என்ற காரணப்பெயர் வழங்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இவனது காலம் வரலாற்றுப் பின்னணி குறித்த ஆய்வுகளும் இன்னும் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது. எது எப்படியிருப்பினும் திருகோணமலை வரலாற்றில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மன்னனாகக் குளக்கோட்டு மன்னன் விளங்குகிறான்.


@. திருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்


குளக்கோட்டன் காலத்தில் திருகோணமலை மாவட்டம் நாலு பற்றுக்களாக நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

1.திருகோணமலைப்பற்று.
2.கட்டுக்குளப்பற்று (நிலாவெளி சார்ந்த பிரதேசம்)
3.கொட்டியாரப்பற்று.(மூதூர் சார்ந்த பிரதேசம்)
4.தம்பலகாமப் பற்று என்பன

இவை தனியான சுயாட்சி அலகுகள் என்பதற்கு அவை கொண்டிருந்த நில, நீதி , தண்டனை தொடர்பான அதிகாரங்களே சான்று பகருகின்றன. இவையனைத்தும் திருக்கோணேஸ்வர ஆலயத்திருப்பணிகள் இடையிறாது நியமப்படி நடைபெற வேண்டும் என்பதையும், அவ்வேளைகளில் ஆலயப் பணியாளர்கள் ,சாதாரண மக்கள் என்பவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு இந்த அதிகாரங்கள் பயன்பட வேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

                                                                                                                         மேலும் வாசிக்க

@தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்



கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. 




@தம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்


ஆலயம்

13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.


@. இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை


சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
















இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment