Monday, May 27, 2013

திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்

திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்

திருகோணமலை நகரிலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் பாலம்போட்டாறு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்தினி அம்மன் கோவிலில் இன்று ( 27.05.2013 ) வருடாந்தப் பொங்கல் விழா இடம்பெற்றது.

திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்
திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்
திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்
திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்
திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்
திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்
திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்
திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்


த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

10 comments:

 1. படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு... நன்றிகள் பல.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. இந்த ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் வர திட்டம் வைத்திருக்கிறேன். கண்டி, பின்னவளா, நுவரேலியா , திரிகோனமலை, அனுராதபுரா என்று வர என்னம்.திரிகோனமலையில் என்ன இடங்கள் பார்கக்லாம். அங்கிருந்து ஜாப்னா பக்கமா. நான் குழந்தையுடன் பயணிக்க இருப்பதால், ஜாப்னா செல்லும் வழித்தடம் எப்படி என்று அறிய விரும்புகிறேன்.

  ReplyDelete
 3. ey;y Kaw;rp. njhlul;Lk;. - Nfzpg;gpj;jd;.

  ReplyDelete
 4. பொங்கல் விழா படங்களை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.

  பத்தினி அம்மன் தர்சனம் கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
 5. திருக்கோணேச்சரம் - இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும்.
  http://www.geevanathy.com/2009/11/blog-post_23.html


  கன்னியா வெந்நீரூற்று - கன்னியா வெந்நீரூற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 - 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அதிகமாக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் ஒரு சுற்றுலாத் தலமாக இந்த கிணறுகள் திகழ்கின்றன.  திருமலை, நிலாவெளியில் ஸ்ரீலட்சுமி நாராயண ஆலயம் - திருகோணமலை வடக்கு நிலாவெளி 6ஆம் வாய்க்கால் சாம்பல்த்தீவு சந்திக்கு அருகில் கிருஷ்ண பக்தர் ஒருவரினால் பிரமாண்டமான முறையில் வைணவ முறைப்படி இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறரை ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இவ் ஆலயம் 235 அடி நீளமும் 115 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகின்றது.


  நிலாவெளி - நிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.


  புல்மோட்டை அரிசி மலை கடற்கரை - கிழக்கில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலுள்ள அரிசி மலை கடற்கரை பிரதேசம் மாறிவருகின்றது. எழில் கொஞ்சும் காடுகளுடனான மலையடிவாரத்திற்கிடையில் காணப்படும் இக்கடற்கரை பிரதேசத்திலுள்ள மணல் அரிசியை ஒத்த அளவில் மென்மையானதாகக் காணப்படுவதால் இதனை அரிசி மலை கடற்கரை என நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த அரிசி மலை கடற்கரை பிரதேசம் பல அரியவகை உயிரினங்களைக் கொண்டுள்ளன.

  ReplyDelete
 6. தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி!!. தங்கள் பதிவொன்றில் கப்பல் துறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள். அது போன்று ஆன் தி வே டு திரிகோனமலை பகுதியில் பார்க்க வேண்டிய இடம் இருக்கிறதா ? 6 நாட்கள் பயனத்திட்டத்தில் ஜாப்னா வை இனைப்பது அத்தனை எளிதல்ல என்று டூர் கம்பெனியினர் கூறினர். மற்ற எதேனும் ஒரு பகுதியை நீக்க வேண்டும். இன்னும் ஒரிரு நாளில் முடிவு செய்ய வேண்டும்

  தகவல்கள் ரொம்ப பயணுள்ளதாக உள்ளது. திரிகோனமலையில் ஒரு நாள் ப்ரீ டே என்று பயணத்திட்டத்தில் கான்பித்திருந்தார்கள். உங்கள் புகைப்பட பதிவைப் பார்த்ததும் புரிந்தது எத்தனை அழகு அந்தக் கடற்கரை என்று.


  ReplyDelete
 7. இக் கடற்கரையிலிருந்து சிறிது தூரத்திலேயே திமிங்கிலத்தைப் பார்க்கலாம் என்கிறார்களே ? அது உண்மையா ?

  ReplyDelete
 8. கந்தளாய்க் குளம் - கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. குளக்கோட்டனால் கட்டப்பட்டது என்று அறியப்படும் கந்தளாய்க் குளம் இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவி புரிகின்றது.

  தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் - ஆதிகோணேஸ்வரம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரத்தில் இருந்து ஏறத்தாழ 20 கிமீ தொலைவில் உள்ள தம்பலகாமத்தில் உள்ள கோயில்.
  வரலாற்றுப் புகழ்மிக்க அருள்சுரக்கும் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருப்பதும், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேலென வயல் நிலங்கள் காட்சியளிப்பதும், இக்கிராமத்தின் இயற்கை எழிலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்றால் அது மிகையாகாது.போர்த்துக்கீசர் காலத்தில் திருகோணமலையின் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைப் போத்துக்கேயர் அழித்தபோது அங்கிருந்த சில விக்கிரகங்களைக் காப்பாற்றுதவற்காக குருமார் மீட்டு எடுத்தனர். பின்னர் இந்த விக்கிரகங்களை தம்பலகாமத்தில் பிரதிட்டை பண்ணியதன் மூலம் உருவாக்கப்பட்டதே இந்தக் கோவிலாகும்.


  கிண்ணியா பாலம் -கடலுக்கு குறுக்காக சுமார் 400 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்ட கிண்ணியா பாலம் இலங்கையில் மிக நீளமான பாலம் என கருதப்படும் கடலுக்கு குறுக்காக அமைக்கப்பட்ட முதலாவது பாரிய பாலமாகும்

  ReplyDelete
 9. புறாத்தீவு = நிலாவெளி பிரதேசத்தில் கடலின் நடுவே புறாத்தீவு சரணாலயம் அமைந்துள்ளது.நிலாவெளியிலருந்து தினம்தோறும் புறாத்தீவுக்கு படகுச்சேவை நடைபெறுகின்றது.

  ReplyDelete
 10. பயனத் திட்டத்தின் நெருக்கடியால் ஒரு நாள் மட்டுமே திருகோணமலையில் இருந்தோம். கந்தளாய் குளம் அழகோ அழகு நீர் ஆதாரங்களை இலங்கை அதிக அக்கரையுடன் பாதுக்காப்பதை நாடெங்கும் காண முடிந்தது. கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் நிலாவெளி கடற்கரை திருகோணமலையின் தன்னிகறற்ற சொத்துக்கள். இலங்கைப் பயணம் அற்புதமாய் அமைந்தது. பாலம்போட்டாறு ஊரை மாலை 5 மணியளவில் கடந்தோம் அப்போது பதிவர் தங்கராசாவின் ஊராச்சே என்று நினைத்துக்கொண்டேன்.

  ReplyDelete