Thursday, October 27, 2016

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2016 - புகைப்படங்கள்


கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புணர்வாழ்வு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2016 ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா 20,21,22 (10. 2016) ஆகிய தினங்களில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

Wednesday, October 26, 2016

பேராசிரியர் அமிர்தலிங்கம் கௌரவிப்பு நிகழ்வு - 27.10.2016 பி.ப 4.30 மணி


திருகோணமலை மாவட்டம் சம்பூரைச் சேர்ந்த கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் (பொருளியல் துறை. கொழும்பு பல்கலைக்கழகம்) அவர்கள் பேராசிரியராகயர்ந்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார்.அவரைக் கௌரவிப்பதுடன், இளம் சமூகத்தினருக்கும் இதுபோன்ற துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக சம்பூர் மகாவித்தியாலய முன்னாள் மாணவர் வெளியக சங்கத்தினரால் கௌரவிப்பு நிகழ்வொன்று 27.10.2016 பி.ப 4.30 மணிக்கு திருமலை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கௌரிபாலனின் நூல் அறிமுகமும், கலந்துரையாடலும் - புகைப்படங்கள்


“நீங்களும் எழுதலாம்”  கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வி. கௌரிபாலனின்   காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் (சிறுகதைகள்) எனும் நூலின் அறிமுகமும், கலந்துரையாடலும் 23.10.2016 அன்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியில் சஞ்சிகை ஆசிரியர்  திரு.தனபாலசிங்கம்  தலைமையில் இடம்பெற்றது.

Saturday, October 22, 2016

நாங்கள் விட்டில்கள் அல்ல (கவிதைத் தொகுதி) - வெளியீட்டு விழா



கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் நாங்கள் விட்டில்கள் அல்ல என்னும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா

Wednesday, October 19, 2016

கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்

நன்றி -  Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் 

இலங்கை ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் செல்வதற்கு முன்னர் நாட்டின் வட பகுதியில் முழுமையாக வளர்ச்சியடைந்த யாழ்ப்பாண இராட்சியமும், அடங்காப்பற்று (வன்னி), திருகோணமலைப் பிரதேசம், மட்டக்களப்பு தேசம், புத்தளம், சிலாபம் ஆகிய பிரதேசங்களில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் வன்னிபங்களால் ஆளப்பட்ட சிற்றரசுகளும் காணப்பட்டன. இதில் யாழ்ப்பாண இராட்சியம் தவிர்ந்த அனைத்தும் வன்னி அரசுகள் என அழைக்கப்பட்டன.