Showing posts with label திருகோணமலை. Show all posts
Showing posts with label திருகோணமலை. Show all posts

Saturday, July 29, 2023

திருகோணமலைத் தமிழ் கல்வெட்டுகள் 30 - புகைப்படங்கள்


வன்செயல் நிமித்தமாக எங்களுடைய வீட்டில் இருந்து நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்பு கடைசி அறை என்று செல்லமாக அழைக்கப்பட்ட அறையில் ஒரு குட்டி நூலகம் அப்பாவின் பெரும் முயற்சியால் அமைக்கப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக இன வன்முறை காலங்களில் அந்நூலகம் முற்றாக அழிந்து போனது.

Thursday, December 08, 2022

திருகோணமலை வன்னிபங்கள் - பெயர் பட்டியல்


கோணேசர் கல்வெட்டில் வருகின்ற உரைநடைப் பகுதியில் நான்கு வம்சங்களைச் சேர்ந்த வன்னிபங்களின் பெயர் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருகோணமலைப் பிராந்தியத்தின் நான்கு வன்னிமை பிரிவுகளில் தலைவர்களாக விளங்கிய வெவ்வேறு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

Saturday, October 08, 2022

திருக்கோணேச்சரத்தில் பணியாற்றிய தேவரடியார்கள்

கோயில் திருப்பணிக்காக தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியார்கள். பண்ணிசை பாடுதல், நடனமாடுதல்,இசைக்கருவிகளை இசைத்தல் என்பன தேவரடியார்களின் முக்கிய பணி என்று கருதப்பட்டாலும்  ஆலய வளாகத்தை சுத்தப்படுத்துதல், பூமாலை கட்டுதல், விளக்கெரித்தல் சில சமயம் மடப்பள்ளி வேலைகளில் உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை தேவரடியார்கள் மேற்கொண்டார்கள்.

Sunday, November 28, 2021

திருகோணமலையில் முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி - புகைப்படங்கள்

 

மெய்க்கீர்த்தி என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு என்பதாகும். பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவற்றைச் செப்பேடுகளில் பொறித்து வைத்திருந்தனர். எனினும் அவற்றுக்கு மெய்க்கீர்த்தி எனப்பெயரிட்டு, அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்து ஒருபுரட்சிகரமான மாற்றத்தை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முதன்முதலில் செய்தவர் பேரரசன் முதலாம் இராசராசன்

Tuesday, June 08, 2021

திருகோணமலை வரலாற்றில் சில துளிகள் - புகைப்படங்கள்

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த நிகழ்வு  01.May.1639

1639 ஆம் ஆண்டு திருகோணமலை கோட்டை கைப்பற்றப்பட்டது தொடர்பில் இதற்கு முன்னர் திருகோணமலை கோட்டை கல்வெட்டு என்ற பதிவில் விரிவாகப் பார்த்திருந்தோம்.

அந்தப் பதிவில் சொல்லப்படாத ஒரு முக்கிய விடயம் இது. போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழிருந்த திருகோணமலை கோட்டையை கைப்பற்றுவதற்காக ஒல்லாந்துக் கடற்படையும் அவர்களுக்கு உதவியாக கொட்டியாரம், மட்டக்களப்பு, சம்மாந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து தமிழ் வன்னிச் சிற்றரசர்களும் தயார் நிலையில் இருந்தன.

Thursday, October 17, 2019

ஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)


தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.

Monday, July 15, 2019

தேசத்துக் கோயிலில் திருவிழா - தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்


தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.

Thursday, July 19, 2018

திருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு


யானைக்கால் நோய் தொடர்பான விசேட களஆய்வு நிகழ்வு ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

Wednesday, October 11, 2017

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி


கிழக்கிலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் கேதாரகௌரி விரத பூசை ஆராதனை உலகப்பிரசித்திபெற்றது.

Saturday, March 25, 2017

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்படங்கள்


தி/தி.விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் 12/3/2017 அன்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நிகழ்வின்போது விபுலானந்தா கல்லூரியில் தரம் 13 இல் கல்வி கற்கும் செல்வன் பாலேந்திரராஜா சிவஜெயனால் admin@geevanathy.com க்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

Monday, November 07, 2016

" கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " - வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு


வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் எழுதிய திருகோணமலை மாவட்டத்தின் புராதன தொன்மைகளை வெளிப்படுத்துகின்ற " கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " என்னும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு 12- 11- 2௦16 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு Jesuit ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Saturday, October 22, 2016

நாங்கள் விட்டில்கள் அல்ல (கவிதைத் தொகுதி) - வெளியீட்டு விழா



கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் நாங்கள் விட்டில்கள் அல்ல என்னும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா

Wednesday, April 27, 2016

அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபி​ஷேக மலர் - புகைப்படங்கள்


திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது. அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபி​ஷேக மலர்  23.04.2016 அன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

Thursday, April 21, 2016

அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபி​ஷேக மலர் வெளியீடு 23.04.2016 காலை 11.30 மணி

அகத்தியர்

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது.

Sunday, February 28, 2016

சுஜீதன் இயக்கத்தில் "உயிர் வரை ஏனோ" பாடல்


சுஜீதன் இயக்கத்தில் சாய்தர்சன் இசையமைப்பில் அழகாக தயாராகி இருக்கும் பாடல் உயிர்வரை ஏனோ. சுஜீதனே வரிகளை எழுதியிருக்கும் இப்பாடலை பிரபல பாடகர் அஜீஷ் அவர்கள் பாடியுள்ளார். ஜெராட், ரோசில்டா, கிரிஷ், திவ்யா என பலர் நடித்திருக்கும் இந்தப் பாடலின் வெளியீடு "05.03.2016" அன்று காலை 9.30 மணிக்கு  திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கலையரங்கில் வெளிடப்பட்டது.

Wednesday, November 11, 2015

ஏக்கம்,பேச்சம் செயலும் - (கவிதை நூல்கள்)


ஊடகவியலாளர் சேனையூர் அ. அச்சுதன் எழுதிய பேச்சம் செயலும் கவிதை நூல் மற்றும் கலாபூசனம் சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் ( சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய பிரதம குரு) அவர்கள் எழுதிய ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழா 28.10.2015 புதன் கிழமை திருகோணமலை நகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எழுதலாம் கவிதை இதழின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

Thursday, November 05, 2015

நல்லதோர் வீணை - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்


கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் எழுதிய நல்லதோர் வீணை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் 24.10.2015 அன்று இடம்பெற்றது.

Monday, November 02, 2015

கவிஞர் த.ரூபனின் "ஜன்னல் ஓரத்து நிலா"


திருகோணமலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும்  மருதநிலப் பிரதேசமான ஈச்சிலம்பற்றையின் மைந்தன் திரு.தம்பிராசா.தவரூபன். மூதூர் தொகுதியில் ஈச்சிலம்பற்று கோட்டத்தில் உள்ள ஶ்ரீ சண்பக மகாவித்தியாலயத்தில் கல்விபயின்ற இவர் வெளிவாரி பட்டப்படிபினை முடித்து மாவடிச்சேனை வித்தியாலயத்தில் சிலகாலம் ஆசிரியராகக் கடமைபுரிந்தவர்.

Tuesday, October 20, 2015

நன்றி கலைக்கேசரி - புகைப்படங்கள்


வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய்.  இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;,  8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.