Monday, April 08, 2024

கோணமாமலை 400 - ( 1624 சித்திரை - 2024 சித்திரை )


ஜீவநதி வலைப்பதிவில் ‘கோணமாமலை 400’ என்ற காணொளிப் பதிவில் சொல்லப்பட்ட விடயங்களான…

நோக்கம்  -   400 வருடங்களுக்கு முன்னர் கோணமாமலையில் அமைந்திருந்த பிரசித்தி பெற்ற மூன்று ஆலயங்கள் அழிக்கப்பட்டதை ஆக்கபூர்வமானதாக நினைவு கூர்தல்.

செயற்திட்டங்கள் ஆரம்பிக்க வேண்டிய காலப்பகுதி -  2024 சித்திரை முதல்  2025 சித்திரை 

செயற்திட்டங்கள்

விழிப்புணர்வும், வரலாற்றுப் பதிதலும் 

ஆலயத்துடன் இணைந்த அருங்காட்சியகம் 

தாயக, புலம்பெயர் தேசங்களில் உள்ள தொல்பொருட்களை அடையாளப்படுத்துதலும், இயலுமானவற்றை சுவடியாக்கம் செய்வதுவும் 

எல்லோரும் அணுகக் கூடிய விதத்தில் இணைய வெளியில் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கி ஆய்வு முயற்சிகளை ஊக்கப்படுத்துதல்

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மகாநாடு

இவைகள் வரலாற்றின் பின்னால் பயணம் செய்யும் ஒரு வலைப்பதிவரின் ஆசைகள் மட்டுமே. இவற்றில் பெரும்பாலானவை தனிமனித சக்திக்கு அப்பாற்பட்டவை. எனவே இணைந்த கைகளால் மட்டுமே இந்த எண்ணங்களை செயலுருப் பெறச் செய்யமுடியும்.

திருக்கோணேச்சர வரலாற்றில் ஆர்வமுள்ள அமைப்புக்கள், ஆர்வலர்கள், தாயக, புலம்பெயர் உறவுகள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய பெரும்பணி இது.

வரலாற்றைப் பதிதல் ஒரு கூட்டுச் செயற்பாடு. தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத நூறாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பலமான வரலாற்றைப் பதியும் தடத்தினை உருவாக்கிச் சென்றுள்ளனர். தாயக, புலம்பெயர் உறவுகள் ஒன்று கூடி அந்தத் தடத்தில் வரலாறு என்ற தேரை இழுத்து வருவதுதான் இன்று எம்முன் உள்ள பணி. வடத்தை இழுக்கும் பல நூறு கைகளில் உங்கள் கைகளும் இருக்கட்டும்.


நட்புடன் ஜீவன்.







‘கோணமாமலை 400’  காணொளிப் பதிவு











இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment