Wednesday, April 24, 2024

திருகோணமலை தக்ஷிண கான சபா

 

திருகோணமலை தக்ஷிணகான சபாவில் இசை மற்றும் அறநெறி வகுப்புகள் மீள் ஆரம்பம் . 

திருகோணமலையில்  1947 ம் ஆண்டு இசைவள்ளல்  செல்வி பா.  இராஜராஜேஸ்வரி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு , ஏராளமான இசைக்கலைஞர்களை உருவாக்கிய   அம்மையாரின் இசைத்தொண்டால் உருவாகிய  கலைக்கோயில் தக்ஷிண கான சபா . 


இசை வகுப்புகள் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும், அறநெறி வகுப்புகள்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும். 

இராஜராஜேஸ்வரி அம்மையாரின் வழியில் வகுப்புகளுக்கு மாணவர்களிடமிருந்து   எந்தவித  கட்டணமும் அறவிடப்படமாட்டாது .

77 வருடங்களில் பல இசைக்கலைஞர்களையும்,  இசை ஆசிரியர்களையும் உருவாக்கிய  தெக்ஷிண கான சபாவில்  தற்போது  மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருகோணமலை மக்கள்  உங்கள் குழந்தைகள்  இசை மற்றும் அறநெறி வகுப்புகளில்  பயின்று பயன் பெற இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்துமாறு  அன்போடு வேண்டுகிறோம் .


முகவரி 

தக்ஷிண கான சபா 

இராஜராஜேஸ்வரி ஞாபக கலாநிலையம் 

இல.12   சாரதா வீதி 

திருகோணமலை .


தகவல்   -  திருகோணமலை தென்கைலை ஆதீனம்



 1988 ஆம் ஆண்டில் திருகோணமலை தக்ஷிணகான சபா புதிய மண்டப திறப்பு விழா நிகழ்வில் வெளியிடப்பட்ட பிரசுரத்தினை தந்துதவிய ஓய்வு பெற்ற அதிபர் திரு க . தயானந்தகுரு அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.













இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment