Monday, October 27, 2008

தமிழ்மணம் நட்சத்திரவாரம்அது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத்தது. தமிழ்மண உதவிப்பக்கம்மூலம் வலைப்பூ உருவாக்கிய எனக்கு குறுகிய காலத்தில் கிடைத்த நல்லதொரு அங்கீகாரமிது. தமிழ்மண நிர்வாகிகளுக்கும், சகபதிவர்களுக்கும் ,வலைப்பூ வருகையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனக்கும் இணையத்துக்குமான உறவு யாழ் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் எனக்கு இணையம் ஒரு செய்தி ஊடகமாகவே அறியப்பட்டிருந்தது (அடிபாடு {சண்டை} நடந்தால் ஓடிப்போய் எல்லோருமாகப் பார்ப்போம்) இருந்தும் பின்னாளில் சாதாரண இணையப்பக்கங்கள் பார்வைக்கு கிடைக்கத்தொடங்கிய வேளையில் (கவிதை சம்மந்தமான ) நாமும் இதுபோல ஒரு வலைப்பூ தொடங்கலாமே என சின்னதாய் ஆசையொன்று மனதில் துளிர்விடும். ஆனாலும் கணிணி பற்றிய அடிப்படைக்கு குறைவான அறிவும், வலைத்தளம் உருவாக்கவும் அதை தொடர்ந்து செயற்படுத்தவும் நிறையச் செலவாகுமென்ற பயமும் கிடப்பில் போட்டிருந்தது எனது வலைப்பூக்கான முயற்சிகளை. பின்னாளில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, கல்விக்கான எனது போராட்டம் என்பவற்றில் வலைப்பூ ஆசைகள் அடிபட்டுப்போனது.

சற்றும் மனந்தளராத விக்கரமாகித்தனாக இணைய வேதாளத்துடனான எனது வலையேற்றும் முயற்சிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு மீள ஆரம்பிக்கப்பட்டது.அதிஸ்டவசமாக இலவச வலைத்தளம் உருவாக்குவதற்கான முயற்சியில் கூகிளில் தேடியலைந்துகொண்டிருந்தபோது  ‘தமிழில் எழுதலாம் வலையில் பரப்பலாம் வாருங்கள்’ என்ற அழைப்பு என்னையும் உள்ளழைத்துக்கொண்டது. பிறகென்ன இருவாரங்கள் தட்டுத்தடுமாறி முட்டி மோதி,பல நாட்கள் உறங்காமலே விடிய, ஒருவாறு 13.08.2008 அன்று எனது முதல் பதிவினை வெற்றிகரமாக வலையேற்றினேன்.

என்னுடைய எண்ணங்களைக் கவிதையாக எழுதிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். முழுமையான சுதந்திரத்துடன் எனது எண்ணங்களைப் பிரசுரிக்கிறேன் என பொய்சொல்ல முடியவில்லை. நானாக வகுத்துக்கொண்ட சில மட்டுறுத்தல்களுடன் வலைநாடி வருகிறது என் பகிர்வுகள். நீங்களதைக் கவிதையாக ஏற்றுக்கொண்டால் சந்தோசம், இல்லையென்றாலும் காரியமில்லை அது ஒரு கருத்துப்பகிர்வாகவேனும் இருக்குமல்லவா?

வலைக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இந்த நட்சத்திர வாரத்திலும் வழமைபோல பதிவிட உத்தேசித்திருக்கிறேன்.

மீண்டுமொருமுறை தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

59 comments:

 1. வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 2. பதிவிட்ட சிலநிமிடங்களில் வந்த முதல்வாழ்த்து,
  நன்றி கிரி

  ReplyDelete
 3. அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

  ReplyDelete
 4. வணக்கம் சிவம்,
  இரட்டிப்பு நன்றிகள் ,
  பகிர்விர்க்கும் ,'இன் தமிழுக்கு' கான அழைப்புக்குமாக.
  இணைந்துகொண்டேன் இன் தமிழில்.

  ReplyDelete
 5. நட்சத்திர வாழ்த்துக்களுடன்...!

  தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))

  ReplyDelete
 6. வாழ்த்துகள்

  ReplyDelete
 7. நன்றி திகழ்மிளிர்

  ReplyDelete
 8. ஜோசப் இருதயராஜ் அவர்களே
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 9. வணக்கம் ஜீவன்!

  வாழத்துக்கள். தொடருங்கள். தம்பலகாமம், திருகோணமலை பற்றிய குறிப்புக்களை இணையத்தில் தருவதற்கு இன்னுமொருவர் இணையத்தில் வந்தபோதே மனங்களித்தேன்

  ReplyDelete
 10. நன்றி அண்ணா
  முடியுமானவரை முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 11. நன்றி ஆயில்யன்
  உங்களுக்கும் எனது தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வாங்க, வாழ்த்துக்கள்.

  கலக்குங்க.... :)

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ..ஜீவன் ....தொடரட்டும் உங்கள் படைப்புகள் இனியும் ....

  அன்புடன்
  விஷ்ணு

  ReplyDelete
 14. வாங்க சுடர்மணி
  உங்க வரவேற்பு உற்சாகமளிக்கிறது...

  ReplyDelete
 15. //தொடரட்டும் உங்கள் படைப்புகள் இனியும் ....//

  நன்றி விஷ்ணு

  ReplyDelete
 16. நட்சத்திர வாழ்த்துக்களுடன்...!

  ReplyDelete
 17. நட்சத்திர வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 18. நட்சத்திர வாழ்த்துகள்

  ReplyDelete
 19. வருகைக்கும், பகிர்விர்க்கும் நன்றி புருனோ அவர்களே

  ReplyDelete
 20. நன்றி தமிழ் பிரியன்

  ReplyDelete
 21. வாங்க அணிமா
  நன்றிகள்

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் அண்ணன்...

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. நன்றி தமிழன்...

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. //நட்சத்திர வாழ்த்துக்களுடன்...!

  தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))//

  வழிமொழிகின்றேன் :)

  ReplyDelete
 27. நட்சத்திர வாழ்த்து(க்)கள் ஜீவன்.

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் ஜீவன்

  ReplyDelete
 29. நன்றி மாயா வரவுக்கும்,வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 30. நன்றி தமிழ் பிரியன்.
  வரவுக்கும்,வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 31. வாங்க சதங்கா தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 32. நன்றி துளசி கோபால்

  ReplyDelete
 33. வாழ்த்துகள் ஜீவன்!

  ஷைலஜா

  ReplyDelete
 34. வருகைக்கும், பகிர்விர்க்கும் நன்றி ஷைலஜா

  ReplyDelete
 35. வாழ்த்துக்கள் ஜீவன்!

  ReplyDelete
 36. நன்றி நம்பி.பா
  வருகைக்கும், பகிர்விர்க்கும்

  ReplyDelete
 37. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. நன்றி செல்லி

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள்.
  உங்கள் தரமான எழுத்து தொடரட்டும்

  ReplyDelete
 40. நன்றி நிர்ஷன்
  உங்கள் நல்வாழ்த்துக்கு....

  ReplyDelete
 41. வாழ்த்துகள்

  ReplyDelete
 42. நன்றி பூங்குழலி

  ReplyDelete
 43. மனம் நிறைந்த வாழ்த்துகள். ஜீவன்..........

  ReplyDelete
 44. நன்றி Kanthi Jaganathan

  ReplyDelete
 45. அன்பின் ஜீவராஜ்,
  தமிழ் மண நடசத்திரமாக ஜொலிப்பதற்கு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 46. நன்றி சீனா அவர்களே
  உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது.

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் :) :) :) :)

  ReplyDelete
 48. வாழ்த்துகள்.....மேலும் வளர.............

  ReplyDelete
 49. வாழ்த்துக்கள் தங்கராசா - ஜீவராஜ்

  ReplyDelete
 50. நன்றி RaKesh
  உங்கள் வாழ்த்துக்கு

  ReplyDelete
 51. நன்றி இளங்கோ

  ReplyDelete
 52. அன்பின் ஜீவன்,

  மேலும் பல வெற்றிகள் பெற்று பெரும் புகழுடன் வாழ அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 53. இன்னுமொரு பரிசாக வந்திருக்கிறது உங்கள் வாழ்த்து சக்தி அவர்களே..

  ReplyDelete
 54. அன்பின் ஜீவராஜ்

  நட்சத்திர வாழ்த்துக்கள்.

  தமிழ்மணத்தின் நட்சத்திரத் தெரிவு, குறிப்பாக சக பதிவர்களை இணங்காண்பதற்கு வாய்ப்பாகிறது. நன்றி தமிழ்மணம்.

  எப்படியோ தாயகத்தில் இருந்து பதிவிடுகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி!

  ReplyDelete
 55. நன்றி HK Arun
  வருகைக்கும்,பகிர்விர்க்கும் நன்றி

  ReplyDelete