Wednesday, October 29, 2008

எல்லாமே முடிந்துபோயிருந்தது…..

எல்லாமே
முடிந்து போயிருந்தது

ஊர்த்தொடக்கமே
உதிரத்தால் உறைந்திருக்க
வாழ்விழந்த மக்களது
மரண ஓலம்
வழியெல்லாம் ஒலித்துக்கொண்டேயிருந்தது

நீண்டு வளர்ந்த எத்தனையோ
தென்னைகள் ஏற்றிருந்தன
‘செல்’ விழுப்புண்களை - இருந்து
இலக்கின்றி விழுந்தவையெல்லாம்
எதையாவது அழித்திருந்தன.

‘மாலா’ அக்காவின்
மண்வீட்டுக் கூரைபிளந்து
கொழுவி இருந்த ‘தொட்டில்க் குஞ்சு’
தரையில் சிதறியிருந்தது
அவசோகமாற்ற யாருக்கும் திரணியில்ல

கண்ணன் மாமா
விமலன் அத்தான்
பக்கத்து வீட்டுப் பரிமளம் புரிசன்
இன்னும் எத்தனையோ
இளசுகளெல்லாம் - கிராமத்தெல்லையிலேயே
எமலோகம் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்
பிணங்கள்கூட இன்னும் வயலில்தானாம்

சசி அக்கா
குண்டு மாமி
குஞ்சி மகள் என்று
நீண்ட வரிசைக்கப்பால்
என் கிராமமும் சேர்ந்து
கற்பிளந்து போயிருந்தது.

பாதைகளில் ‘ரயர்’ குவியல்
வீடுகளில் இரத்தக்கறைகள்
வயல்வெளியில் பிணக்குவியல்
இன்னும் எல்லாம்
அப்படியே இருக்கிறது.

சிற்றூர் பிரளயத்தில்
நாங்கள் மட்டுமல்ல
கோணேசரும் தப்பவில்லை
கோயிலெல்லாம் குண்டுதுளைத்து
குற்றுயிராய் இருந்தது

எங்கோ ஏதோவோர்
சண்டை நடந்ததற்காய்
இங்குநாங்கள்
சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்.


த.ஜீவராஜ்



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

10 comments:

  1. dear brother

    reality is always hard to digest and swallow but the truth is so glaringly told for posterity

    mana varuthangaludan
    radhakrishnan

    ReplyDelete
  2. //எங்கோ ஏதோவோர்
    சண்டை நடந்ததற்காய்
    இங்குநாங்கள்
    சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்//

    இன்றும் இதுதான் உண்மை..எங்கோ ஏதோ சண்டை....சாம்பலாவது மட்டும் இங்கே...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  3. நன்றி radhakrishnan
    உங்கள் வரவும்,பகிர்வும் மகிழ்ச்சிதருகிறது.....

    ReplyDelete
  4. நன்றி அருணா
    நல்லது நடக்க பிராத்திப்போம்.

    ReplyDelete
  5. "எல்லாமே முடிந்து போயிருந்தது"

    இங்கே 'எல்லாமே' என்ற இடத்தில் இந்த அவலங்கள் சோகங்கள் யாவுமே முடிந்து போய் விடியல் வந்தால்....

    வர வேண்டும். பிரார்த்திப்போம். பிரார்த்தனை வலிமையானது.

    ReplyDelete
  6. உண்மைதான் ராமலக்ஷ்மி அவர்களே
    எங்களுக்கான உங்கள் பிராத்தனை பலிக்கட்டும்

    ReplyDelete
  7. படிக்கும்போதெல்லாம் மனத்தைப் பிசைகின்றன உங்கள் வரிகள், இனிமேல் பின்னூட்டம் போடப் போவதில்லை.

    ReplyDelete
  8. எங்கோ ஏதோவோர்
    சண்டை நடந்ததற்காய்
    இங்குநாங்கள்
    சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்.


    இனவெறியர்களின் குதறல்கள்.... கண்மூடித்தனமான தாக்குதல்..

    அவர்களுக்கு இதயமில்லை... இருந்திருந்தால் செய்வார்களா?/




    எங்கோ ஏதோவோர்
    சண்டை நடந்ததற்காய்
    இங்குநாங்கள்
    சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்.


    இனவெறியர்களின் குதறல்கள்.... கண்மூடித்தனமான தாக்குதல்..

    அவர்களுக்கு இதயமில்லை... இருந்திருந்தால் செய்வார்களா?/

    ReplyDelete
  9. எங்கோ ஏதோவோர்
    சண்டை நடந்ததற்காய்
    இங்குநாங்கள்
    சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்.


    இனவெறியர்களின் குதறல்கள்.... கண்மூடித்தனமான தாக்குதல்..

    அவர்களுக்கு இதயமில்லை... இருந்திருந்தால் செய்வார்களா?/


    எங்கோ ஏதோவோர்
    சண்டை நடந்ததற்காய்
    இங்குநாங்கள்
    சாம்பலாக்கப்பட்டிருக்கிறோம்.


    இனவெறியர்களின் குதறல்கள்.... கண்மூடித்தனமான தாக்குதல்..

    அவர்களுக்கு இதயமில்லை... இருந்திருந்தால் செய்வார்களா?/

    ReplyDelete
  10. நன்றி ஆதவா
    வரும்நாட்களிலாவது நல்லது நடக்க பிராத்திப்போம்

    ReplyDelete