Wednesday, August 20, 2008

இடப்பெயர்வுஅவசரத்தில் அவிழ்க்காமல்
விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்
கோழியும் , குஞ்சும்


உலையில் புட்டு
வரும்போது அரையவியல்
எரிந்துபோயிருக்கும் இப்போது

யார் சோறுவைக்கப்போகிறார்கள்
பூனைக்கும் , நாய்க்கும்

வெட்டி அடுக்கியமாதிரி
வேலிக்கான கதிகால்கள்

வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள்
வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல்

பாழாய்ப்போன யுத்தம்
வீடுகூடப் பூட்டவில்லை

வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட
மிஞ்சி இருப்பது நான்மட்டும்தானே

உயிர் பிழைக்க நானும்
ஊர் பெயர்ந்தால்
வீடென்ன செய்யும்.
 த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

47 comments:

 1. பிரமாதமான கவிதை. மனதைக் கவ்விக் கொண்டது !

  ReplyDelete
 2. நன்றி சேவியர்
  பகிர்விற்கும், பாராட்டிற்கும்.

  ReplyDelete
 3. மனதை நெகிழச்செய்யும் கவிதை நண்பரே ..

  உண்மைதானே ...தினம் காணும் அவலங்கள் யுத்தத்தால் ...

  ReplyDelete
 4. ///மனதை நெகிழச்செய்யும் கவிதை நண்பரே//
  நன்றி விஷ்ணு
  உங்கள் அன்புக்கு

  ReplyDelete
 5. நன்றி அப்துல்லா
  உங்கள் உணர்வு பகிர்விற்கு...

  ReplyDelete
 6. இடப்பெய்ர்வின் துன்பம் ஏராளம். விடைகொடு எங்கள் நாடே... என்ற பாடலை நினைவு
  கூறுகிறது உங்கள் வரிகள்.

  ReplyDelete
 7. உலையில் புட்டு
  வரும்போது அரையவியல்
  எரிந்துபோயிருக்கும் இப்போது

  யார் சோறுவைக்கப்போகிறார்கள்
  பூனைக்கும் , நாய்க்கும்


  இலங்கையின் யுத்தத்தை நினைவுறுத்தும் ஒவ்வொரு கவிதையும் உணர்வுகளையும்
  வலிகளையும்
  ஏந்தி வருகிறது ...

  ReplyDelete
 8. மனத்தை உருக்கிய வரிகள்

  ReplyDelete
 9. நான்கே வரிகளால் நம் ஜீவனை
  நானூறாய் உடைத்து விட்டார்
  நண்பர் ஜீவன்

  ReplyDelete
 10. உண்மையான வரிகள் வலியை ஏற்படுத்துகின்றன.

  ReplyDelete
 11. அருமை மற்றும் வலிமையான பா நண்பர் ஜீவராஜ்

  ReplyDelete
 12. சண்டை நிறுத்த வழியே இல்லையா நண்பா??

  ReplyDelete
 13. arumayaana valiyai unarthum varigal jeevaraj...

  ReplyDelete
 14. ////இடப்பெய்ர்வின் துன்பம் ஏராளம்///
  பாஸ்கர் (எ) ஒளியவன்
  நன்றி பாஸ்கர் அதில் மிக்க கொடுமையான விடையங்கள் ஏராளம்

  ////உண்மையான வரிகள் வலியை ஏற்படுத்துகின்றன///
  சிவா...
  நன்றி சிவா பகிரப்படுகையில் வலி குறையும்


  ////இலங்கையின் யுத்தத்தை நினைவுறுத்தும் ஒவ்வொரு கவிதையும்
  உணர்வுகளையும்
  வலிகளையும்
  ஏந்தி வருகிறது ...////
  பூங்குழலி
  நன்றி உங்கள் உணர்வுபூர்வ பகிர்விர்க்கு


  அன்புடன் ஜீவன்

  ReplyDelete
 15. ///மனத்தை உருக்கிய வரிகள் //
  நினா.கண்ணன்
  ///நானூறாய் உடைத்து விட்டார்//
  துரை
  ///மனதை நெகிழச்செய்யும் கவிதை நண்பரே///
  ,விஷ்ணு

  நன்றி நினா.கண்ணன் ,துரை ,விஷ்ணு மரணம் மலிந்த பூமியில் வாழ்கிறோம்......


  ///வெள்ளி நிலாவை விளக்காய்க் கொண்டு நம் தாய்மண்ணில் கதைபேசிய
  பொழுதுகளை
  எத்த்னையோ வருடங்களுக்கு முன்னர் தொலைத்தவன் நான். உங்கள் உள்ளத்தின்
  வேதனை நன்றாகவே புரிகிறது.///
  சக்தி
  நன்றி சக்தி அவர்களே
  உங்கள் வேண்டுதல் பலிக்கட்டும்


  அன்புடன் ஜீவன்

  ReplyDelete
 16. நன்றி வெங்கடேசன்
  முயற்சித்தால் முடியாதென்றெதுவுமில்லை Aarumugam
  நன்றி சசிதரன்

  ReplyDelete
 17. உயிர் பிழைக்க நானும்
  ஊர் பெயர்ந்தால்
  வீடென்ன செய்யும்."


  excellent!

  ReplyDelete
 18. அன்பு நண்பா ஜீவன்.. இடம்பெயர்தலின் வலியை அழகாக கவிதையில் சொல்லியுள்ளீர்கள்..

  கவிதை ருசிக்கும் அளவுக்கு மனது வலிக்கிறது...

  ReplyDelete
 19. நன்றி கோகுலன்.
  வலிமிகுந்த வாழ்க்கை வாய்த்திருக்கிறது எங்களுக்கு....

  அன்புடன் ஜீவன்

  ReplyDelete
 20. அருமையான வரிகள்

  ReplyDelete
 21. நன்றி திகழ்மிளிர்

  ReplyDelete
 22. arumai.. nanbare,,,,,,,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 23. நன்றி முடிவிலி

  ReplyDelete
 24. padithu mudikum podu kannil neer kasi kiradu,,,,,,,,,,,,en sakodharanaee

  ReplyDelete
 25. Touching....palavarundangal irukum indha prachanaiku theervu epozhudhu ?

  ReplyDelete
 26. ???? காத்திருக்கிறோம்........
  நன்றி Santhosh

  ReplyDelete
 27. JEEVARAJ..
  NANBA..

  NAM EDAM PEYARA THEVAIYILLAI.
  EDAM PEYARNTHAL ATHU

  YATHOOM OORREE YAVARUM KELIR ENRA KAKKAI PADINIYARIN
  VALIYIL THADAM PEYARNTHAI VIDUM.

  URAVUGALAI ELANTHALUM..
  URIMAIKALAI ELAKKATHA ERUKKAM
  VILANKUGALIN MEETHU KUDA ERAKKAM.
  ENAM KAKKA VILIYIL ELLAI URAKKAM
  ETHUVE NAM ETHIRIKKU TARUM KALAKKAM
  THIDAMAI YIRU NAMMAKKU VALI PIRAKKUM.

  ANBE ENGAL ULAGA THATHUVAM.
  ENRUM NAM ENA MANA UNARVAI VALZTHUVOM.

  ReplyDelete
 28. UNAKKU ENRUM THOL KODUKKUM
  NGAL MULAKKAM.
  UN VEERATHUKKU VANAKKAM.

  ReplyDelete
 29. உங்கள் உணர்விர்க்கு நன்றி SUBRAMANIAN

  ReplyDelete
 30. innum urakka sollungal tholare..!
  ingu sevidargal athigam undu...!

  ReplyDelete
 31. migavum arumai..alagiya kavithai..intha vali endru theerumo....

  ReplyDelete
 32. நன்றி subbu
  நன்றி THEN MOZHI

  ReplyDelete
 33. உலையில் புட்டு
  > வரும்போது அரையவியல்
  > எரிந்துபோயிருக்கும் இப்போது<<<
  > *உயிரே எரிகையில் புட்டு என்ன புட்டு?!!!*

  யார் சோறுவைக்கப்போகிறார்கள்
  > பூனைக்கும் , நாய்க்கும்<<<

  *மனிதாபிமானம்...*
  வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள்
  > வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல்<<<  *எத்தனை எத்தனை எண்ணங்கள்....இடம் பெயரும் ஒவ்வொருவருக்குள்ளும் பொதிந்துபோய்
  கிடக்கும்....*


  > பாழாய்ப்போன யுத்தம்
  > வீடுகூடப் பூட்டவில்லை


  > வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட
  > மிஞ்சி இருப்பது நான்மட்டும்தானே


  > உயிர் பிழைக்க நானும்
  > ஊர் பெயர்ந்தால்
  > வீடென்ன செய்யும்.<<<  *அதே எண்ணத்துடன் இருப்பவர்கள் பல பேர். மாண்டாலும் என் மண்ணிலேயே மாளுவது
  நல்லது என்பார்கள்!!*
  **
  *எங்கட உறவுகள் படும்பாடு?!! என்றுதான் தீருமோ எங்களின் அவல நிலை அகதி
  நிலை?????????*

  ReplyDelete
 34. உங்கள் கருத்துரைக்கு நன்றி சுதனின்விஜி

  ReplyDelete
 35. பெரும் சோகத்தைச் சுமந்து வர முயலும் சிறுவரிகள்!! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 36. சொல்லக்கேட்டவை, சோகத்தோடு படித்தவை, கேள்விப்படாதவை,
  எண்பதுகளில் இளம் யாழ் தோழர்களோடு
  கழித்த அந்த நான்கு நாட்கள் எல்லா
  நினைவுகளையும் அழித்து விட்டு புதிய சோகங்களைப்பதிய வைக்கிறது.
  பனைமரக்காடே சோகம் கேட்கிறது
  ஜீவன்.

  ReplyDelete
 37. உங்கள் கருத்துக்கள்

  என்தேடல்களை விரிவாக்குகிறது...

  ஊடகங்களின் பார்வைகளுக்குள் சிக்காமல் பரந்து கிடக்கும் சாதாரண மக்களது சோகங்களை பகிர முயற்சிக்கிறேன்....நன்றி

  ReplyDelete
 38. அருமையான கவிதை-மு.நன்மாறன்

  ReplyDelete
 39. போரினால் சீரழிந்தவர்கள் அனைவருக்கும் இச் சொற்களின் கனம் மிகப் புரியும்.
  அலங்காரமற்ற இயல்பான ஆக்கம்.

  ReplyDelete
 40. நன்றி மு. நன்மாறன் அவர்களே....

  ReplyDelete
 41. //அலங்காரமற்ற இயல்பான ஆக்கம்.//

  நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே

  ReplyDelete
 42. வலிகளை வார்த்தையாகக் கோத்திருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 43. நன்றி கானா பிரபா
  உங்கள் உணர்வுப் பகிர்விற்கு...

  ReplyDelete