Monday, December 31, 2018

மொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி - புகைப்படங்கள்



திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம்  HOPE  ஆகும்.

Saturday, November 17, 2018

சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்


சிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.

சிறுவயதில் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி அம்பெறியும் கடவுளைவிட ஆரவாரமாக அங்குமிங்கும் ஆவேசத்துடன் சுற்றித் திரிந்து. துள்ளிக் குதித்து கூடியிருப்போரை உருவேற்றியபடி கடவுளுடன் சண்டை செய்யும் சூரன்மேல் அதிக ஈர்ப்பு இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.

Tuesday, November 06, 2018

கழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்ந்த காடுகளும், இடையிடையே குறுக்கறுத்து ஓடுகின்ற ஆறுகளும், அருவிகளும், சிறு குளங்களும் கொண்டமைந்த இயற்கை வனப்பு மிக்க ஒரு பிரதேசம் தம்பலகாமத்தில் இருக்கிறது. அதன் பெயர் கழனி மலைப் பிரதேசம்.

Sunday, November 04, 2018

இயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்படங்கள்


உலகில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகாகக் காட்சி தரும் இடங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதில் இயற்கையும், மனிதனும் இணைந்து உருவாக்கிய அற்புதப்படைப்பு செம்புவத்தைக் குளம்.

Saturday, October 27, 2018

இலண்டனில் இருந்து HOPE ற்கான உதவிகள் - புகைப்படங்கள்


உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 1500 முதல் 1800 விசேட தேவையுள்ள குழந்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 150 முதல் 200 பேர்வரை அரச பாடசாலைகளில் அவர்களுக்குரிய விசேடவகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.

Thursday, July 19, 2018

திருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு


யானைக்கால் நோய் தொடர்பான விசேட களஆய்வு நிகழ்வு ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

Thursday, July 12, 2018

அடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஆறாவது கட்டமாக  ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 26.05..2018 அன்று நடைபெற்றது.


Friday, May 04, 2018

சந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள்


திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில் தரம் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது.

Saturday, April 14, 2018

ஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஐந்தாம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 10.04.2018 அன்று நடைபெற்றது.

Wednesday, February 28, 2018

சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு நான்காம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 16.02.2018 அன்று நடைபெற்றது.

Wednesday, January 24, 2018

மோகனாங்கி (1895) - வெளியீடு 31.1.2018 புதன் மாலை 4.30மணி

இது குளக்கோட்டன் சமூகம்

1895 இல் தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல்.
ஆசிரியர்: திருகோணமலை தம்பிமுத்துப்பிள்ளை சரவணமுத்துப்பிள்ளை
இடம்: திருகோணமலை இந்துக்கல்லூரி மண்டபம்.
காலம்: 31.1.2018 புதன் கிழமை.
மாலை 4.30மணி