Wednesday, February 28, 2018

சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு நான்காம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 16.02.2018 அன்று நடைபெற்றது.

கனடாவில் உள்ள திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், சங்க அங்கத்தவர்களின் குடும்பங்கள்அவர்களது நண்பர்கள் இணைந்து மேற்படி ஊட்டச்சத்து உணவுக்கான நன்கொடையினை வழங்கி இருந்தார்கள்.மிதமான ஊட்டச்சத்து இன்மை (MAM), கடுமையான ஊட்டச்சத்து இன்மை 
(SAMஆகிய போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்து உணவே நான்காம் கட்டமாக  வழங்கி  வைக்கப்பட்டது.

நீண்டகாலம் இடம்பெற்றுவந்த யுத்த அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் மிகவும் பின்தங்கியவர்களாக இக்கிராம மக்கள் காணப்படுகிறார்கள்எனவே இவர்களது வாழ்வாதாரத்தினை மேன்படுத்துவதே இக்கிராமங்களில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லைஎனவே அதற்கான முன்னகர்வுகளை அரச, தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், பொதுமக்களின் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலுடனும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் நாம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் 
பார்க்க-பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறதுபுகைப்படங்கள்

இக்கிராமங்களில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர்  போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதுமேற்படி தரவுகளின் அடிப்படையில் விடுக்கப்பட்ட உதவிகோரலுக்கு   திருபாஸ்கரன் தினேசன் (செயலாளர்அவர்களின் முயற்சியினால் கனடாவில் உள்ளகோணேஸ்வரா  இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் 
உடனடியாக உதவிட முன்வந்தனர்.

பார்க்க - பாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
பார்க்க - பாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
பார்க்க - பாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட143  சிறுவர்களுக்கு நான்காம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 16.02.2018 அன்று நடைபெற்றது.

Dr.சரவணபவன் தலைமையில் Dr.நிலோஜன் ஒழுங்கமைப்பில் சுகாதார மருத்துவ மாது  திருமதி.  காளீஸ்வரியின் ஒத்துழைப்புடன் தன்னார்வத் தொண்டர் திரு.காண்டீபனின் உதவியுடன்  நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக


திரு. இராஜநாதன் 
 (முன்னாள் அதிபர்  தி/விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்)

Dr.சௌந்தரராஜன்  
(செயலாளர்  பாடசாலை அபிவிருத்திச் சங்கம்  
திருகோணமலை  ஸ்ரீ  கோணேஸ்வரா இந்துக்கல்லூரி)

ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நேரடியாக சத்துணவுகளை வழங்கி வைத்தனர். நிர்வாக உதவிகளை திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வழங்கி இருந்தது.

இக்கிராமங்களில்  உள்ள  மக்களின்  வாழ்வாதாரங்களை  மேன்படுத்த  பல 
துறையினரையும் ஒன்றிணைத்து செயற்பட்டு வருபவரான  Dr கேதீஸ்வரன் (Australian Medical Aid Foundation: AMAF)    அவர்களது    ஆலோசனைகளுடனும்,  Drகயல்விழி (Regional Director of Health Services, Trincomalee)   அவர்களது   நிர்வாக  ஒத்துழைப்புகளுடனும்  இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது அத்துடன் போசாக்கின்மை தொடர்பான அறிக்கை தயாரித்து உதவிய நண்பன் திருகஜபதி (PhD, Lecturer in Zoology, University of Jaffna)   சத்துமா   கொள்வனவில்   உதவிய   திருசக்திமயூரன்   (Capital pharma corner, Trincomalee)  ஆகியோர்  நன்றிக்குரியவர்கள்.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் 
பழைய மாணவர் சங்கம் - கனடா


2004 ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட கனடா பழைய மாணவர் சங்கம் Dr. ஞானி நிதியத்திற்கு ஊடாக கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 20 சாதாரண தர (OL ) , உயர்தர ( AL மாணவர்களுக்கு  மாதந்தோறும் கல்விக்கான  உதவித்தொகையினை 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வழங்கி வந்தனர்.

அத்துடன் பாடசாலை பழையமாணவர் சங்கம்  ( திருமலை )  தனது  75வது  நிறைவு விழாவினைக் கொண்டாடியவேளை பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் மண்டபத்தினை நிர்மாணித்துக் கொடுத்தனர்இவைதவிர கனடாவில் பல ஒன்றுகூடல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியதோடு அந்நிகழ்வுகளின் பதிவுகளாக கனடா சாரல் என்ற சஞ்சிகையையும் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.


பாட்டாளிபுரம் சத்துணவுத் திட்டம் குறித்த ஆய்வுச் சுருக்கம்

மிதமான ஊட்டச்சத்து இன்மை (MAM), கடுமையான ஊட்டச்சத்து இன்மை (SAM) ஆகிய போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 பிள்ளைகளுக்கான  ஊட்டச்சத்து உணவு இதற்கு முன்னர் மூன்று கட்டங்களாக  வழங்கி  வைக்கப்பட்டிருந்தது.


மூன்றாவது கட்ட ஊட்டச்சத்து உணவு வழங்கலின் பின்னர் 19 கடுமையான  ஊட்டச்சத்து இன்மையினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளும், 2 மிதமான  ஊட்டச்சத்து இன்மையினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுமாக 21 பிள்ளைகள் சாதாரண உடல் நிறையினை அடைந்திருக்கிறார்கள்.


 ஐந்து வயதுக்கு உட்பட்ட  சிறுவர்களின் போசாக்கு நிலை
2017/08/25
முதலாம் கட்டம்
2017/10/25
இரண்டாம் கட்டம்
2017/12/25
மூன்றாம் கட்டம்
கடுமையான ஊட்டச்சத்து இன்மை
SAM
41
30
22
மிதமான ஊட்டச்சத்து இன்மை
MAM
101
105
100
ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளோர்   Total
142
135
122
சத்துணவுத் திட்டத்தினால் சாதாரண உடல் நிறையினை அடைந்தோர்     Normal Wight
00
07
21
சத்துணவுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகள்


143கனடாவில்  உள்ள  திருகோணமலை  ஸ்ரீ  கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர் திரு.பிரசாந்தன் பாட்டாளிபுரம் சத்துணவு திட்ட பயனாளர்கள் சிலரை 20.01.2018 அன்று நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.Dr..ஜீவராஜ்
(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment