Wednesday, September 06, 2017

பாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 126 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (25.08.2017) பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.


கனடாவில் உள்ள திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், சங்க அங்கத்தவர்களின் குடும்பங்கள், அவர்களது நண்பர்கள் இணைந்து மேற்படி ஊட்டச்சத்து உணவுக்கான நன்கொடையினை வழங்கி இருந்தார்கள்.

மிதமான ஊட்டச்சத்து இன்மை (MAM), கடுமையான ஊட்டச்சத்து இன்மை (SAMஆகிய போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 126 பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்து உணவே முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.


நீண்டகாலம் இடம்பெற்றுவந்த யுத்த அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் மிகவும் பின்தங்கியவர்களாக இக்கிராம மக்கள் காணப்படுகிறார்கள். எனவே இவர்களது வாழ்வாதாரத்தினை மேன்படுத்துவதே இக்கிராமங்களில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே அதற்கான முன்னகர்வுகளை அரச, தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், பொதுமக்களின் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலுடனும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

 இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் நாம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் (பார்க்க-பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. புகைப்படங்கள்)  இக்கிராமங்களில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் 280 பேரில் 126 பேர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மேற்படி தரவுகளின் அடிப்படையில் விடுக்கப்பட்ட உதவிகோரலுக்கு   திரு. பாஸ்கரன் தினேசன் (செயலாளர்) அவர்களின் முயற்சியினால் கனடாவில் உள்ள கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் உடனடியாக உதவிட முன்வந்தனர்.

25.08.2017 ஆம் திகதி பாட்டாளிபுரம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் Drகயல்விழி (திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்)  அவர்களின் தலமையில் இடம்பெற்ற சந்துணவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக    
             -             
திரு. தயாளசீலன் 
( பிரதிநிதி,கனடா கோணேஸ்வரா இந்துக் கல்லூரி , பழைய மாணவர் சங்கம் )
திரு. பத்மசீலன் 
 ( அதிபர் - கோணேஸ்வரா இந்துக் கல்லூரி )
திரு. சைலேந்திரன்  
(உப தபால் அதிபர் - திருகோணமலை )
ஆகியோர் கலந்துகொண்டு ஊட்டச்சத்து உணவுகளை நேரடியாக பயனாளர்களுக்கு வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வு திறம்பட நடைபெற பொது சுகாதார மருத்துவ மாது திருமதி. காளீஸ்வரி, தன்னார்வத் தொண்டர் திருமதி. ஜெயஸ்ரீ ( பொன்னந்தி ) ஆகியோர் உதவினர். அத்துடன் போசாக்கின்மை தொடர்பான அறிக்கை தயாரித்து உதவிய நண்பன் திரு. கஜபதி (PhD, Lecturer in Zoology, University of Jaffna) சத்துமா கொள்வனவில் உதவிய திரு. சக்திமயூரன் (Capital pharma corner, Trincomalee) ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.

பாட்டாளிபுரமும் அதனை அண்டிய கிராமங்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவைக்கான பௌதீக வளங்களை வழங்கி வருவதோடு  (பார்க்க - ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்) இக்கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மேன்படுத்த பல துறையினரையும் ஒன்றிணைத்து செயற்பட்டு வருபவரான  Dr கேதீஸ்வரன் (Australian Medical Aid Foundation: AMAF) அவர்களது ஆலோசனைகளுடனும், Dr. கயல்விழி (Regional Director of Health Services, Trincomalee) அவர்களது நிர்வாக ஒத்துழைப்புகளுடனும், Dr. சரவணபவன் (Registrar, Community Medicine) அவர்களது கண்காணிப்பிலும் ( சிறுவர்களது போசாக்கு நிலைஇத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


2004 ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட கனடா பழைய மாணவர் சங்கம் Dr. ஞானி நிதியத்திற்கு ஊடாக கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 20 சாதாரண தர ( OL ) உயர்தர ( AL ) மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்விக்கான உதவித்தொகையினை 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வழங்கி வந்தனர்.

அத்துடன் பாடசாலை பழையமாணவர் சங்கம்  ( திருமலை ) தனது 75வது நிறைவு விழாவினைக் கொண்டாடியவேளை பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் மண்டபத்தினை நிர்மாணித்துக் கொடுத்தனர். இவைதவிர கனடாவில் பல ஒன்றுகூடல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியதோடு அந்நிகழ்வுகளின் பதிவுகளாக கனடா சாரல் என்ற சஞ்சிகையையும் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சத்துமா வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட கனடா பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி நேரடியாகப் பார்த்துச் சென்ற விபரங்கள் அடிப்படையிலும், போசாக்கின்மை தொடர்பாக நாம் அனுப்பி வைத்த தரவுகள் அடிப்படையிலும் கனடா கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து மேற்கொள்வதற்கு முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

Dr.த.ஜீவராஜ்
(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

 1. Could you please give attention for their long term vision rather than give delivery and publish photo

  ReplyDelete
  Replies
  1. நீண்டகாலம் இடம்பெற்றுவந்த யுத்த அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் மிகவும் பின்தங்கியவர்களாக இக்கிராம மக்கள் காணப்படுகிறார்கள். எனவே இவர்களது வாழ்வாதாரத்தினை மேன்படுத்துவதே இக்கிராமங்களில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே அதற்கான முன்னகர்வுகளை அரச, தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், பொதுமக்களின் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலுடனும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

   இதற்குரிய பணிகள் சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது அன்பரே.......

   Delete
  2. i sincerely appreciate the efforts being done by all the volunteers, to address the urgent needs of these malnourished kids.

   Delete
  3. @Nishanthan N,
   Thank you for your thoughts to remind us about the long term vision.
   To support these kids in long term, we need to gather more support from donors. Taking pictures and publishing is the right thing to do as this would allow us to reach our more donors globally - who would be willing to support this program in long run.
   Mr.Nishanthan, thank you once again for your comment. Let's support the folks/volunteers in the field, who sacrifices their time and energy to execute this program.

   Delete
 2. They need immediate recovery acts as well which has been delivered here. If taking photos to get attention from other aides, then sorry we have made a huge mistake.

  ReplyDelete
 3. மிக்க நன்றி கஜன், Prasan Panneer

  ReplyDelete