Friday, May 29, 2009

காந்தி ஐயா / காந்தி மாஸ்டர்

திருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,சினிமா சார்ந்தவரோ அல்லது பிரபல தொழிலதிபரோ இல்லை.

Thursday, May 28, 2009

முடியலையே....!


தனித்திருந்த வாழ்க்கையது
கசத்திருந்த நாளொன்றில்
கண்ணெதிரே கண்டேன்
அந்தக் கள்ளியை - என்
நெஞ்சத்தைத் கொள்ளைகொண்ட
அன்புச் செல்வியை

Wednesday, May 27, 2009

சுயம் மறைக்கும் போராட்டங்கள்....

அலுவலகம், அயலவர் வீடு, படிக்குமிடம், பலபேர் கூடுமிடம் ஏன் பயணிக்கும் போதுகூட பக்கத்தில் இருப்பவரின் மதிப்பீட்டுப் பயம் நம்மை இயல்பாய் எதையும் செய்யவிடுவதில்லை.

நிர்ப்பந்தச் சி்ரிப்புக்கள் , வேண்டுமென்றேயான விசாரிப்புக்கள் போலி நாகரீகம், சுயம் மறைக்கும் சுதாகரிப்புக்கள் என்று நம்நேரமெல்லாம் வீணாகிப் போய்விடுகிறது அடுத்தவர் என்ன நினைத்திடுவாரோ என்ற பயத்தில்.

இதன்போது பெரும்பாலும் நம்மை இராசாக்களாக உருவகித்துக்கொண்டு அடுத்தவர் முகத்தில் கரிபூசி விடுகிறோம். அல்லது நம்முகத்தில் ஏலவே கரி இருப்பதாக கருதிக்கொண்டு அடுத்தவர் முன் மண்டியிட்டுவிடுகிறோம்.
பேச்சு, சிரிப்பு நடத்தையென்று எதிலும் நம்சுயம் தெரியவிடாது நமக்கு நாமே போட்டுகொள்ளும் வேசம் பலவேளைகளில் நமக்கே வெறுப்பாய் , அருவருப்பாய் இருந்துவிடுகிறது.

சாதாரண அன்றாட அலுவல்களில் அடுத்தவர் நினைப்புக்களின் ஆக்கிரமிப்புத்தாண்டி நம்மை நம்மியல்போடு அடுத்தவர் முன் வைப்பதும், அதேபோல் பிறரை அவர்களது இயல்போடு ஏற்றுக்கொள்வதும் நிறைவான வாழ்வின் தேவையாக இருக்கிறது.

இராசாக்களுக்கும், முகத்தில் கரிபூசி சிறுமைப்படுத்தப்பட்ட மனிதர்களுக்கும் இடையில் சாதாரண மனிதர்களாக வாழ தினமும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
(யாழ்.மருத்துவபீட காலத்துப்படங்கள்)

 த.ஜீவராஜ்

Tuesday, May 26, 2009

கோயில் குடியிருப்பமர்ந்தாரே -படத்தொகுப்பும்,பதிகமும்..









தம்பலகாமம்  ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்
அழகிய வயல்வெளிகளால் சூழப்பட்ட தம்பலகாமம் ஆதிகோணநாயகருக்கென கோயில் பதிகம்,வரலாறு என்பன தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களால் எழுபதுகளில் இயற்றப்பட்டது. அவற்றினைக் கீழுள்ள சுட்டிகள் மூலம் நீங்கள் காணலாம்.



Monday, May 25, 2009

ஊனமது கொடுமை.....

ICUஇருக்கிறது பலவழிகள்
இழந்தவற்றை மீளமைக்க
என்றாறுதல் கொண்டாலும்
ஊனமது கொடுமை
உயிர் வாழும் வரையில்
நம்நாட்டு நிலையில்

உடனிருந்த அங்கம்
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போனால்
உடல் வலியது மாறும்
உயிர்வலியதுதானே அவன்
மாளும்வரை தொடரும்

பகிர்கையில் குறையும்
அந்தத் துன்பம்
கைகொடுத் உதவுகையில்
நிறையும் நம் நெஞ்சம்
காலத்தின் தேவையிது
நம்கண்முன்னே நிற்கிறது..
த.ஜீவராஜ்

Sunday, May 24, 2009

தமிழறிஞர் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

Thampalakamam
‘இந்த மண்ணுலகம் இறைவன் படைத்துவைத்த மேடை. இந்த உலகம் என்னும் நாடகமேடையில் மாமனிதர்கள் தோன்றி நடித்து வியத்தகு சாதனைகள் புரிந்து காலத்தால் மறையாத காரியங்கள் பல ஆற்றியுள்ளனர். உண்டு,உடுத்து, உறங்கி, இதுதான் வாழ்க்கை என்று பெரும்பாலானோர் கிடைத்தற்கரிய மனித வாழ்க்கையைப் பாழ் செய்தாலும், கணிசமானவர்கள் தாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்குத் தொண்டாக உலக முன்னேற்றத்துக்கு உகந்த முறையில் கடனாற்ற வேண்டியது நியதியாகும்.’  என தம்பலகாமம் தந்த தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் தனது ‘இந்திய ஞானிகளின் தெய்வீகச் சிந்தனைகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் யாவும் பிரம்மத்தின் கூறுகள்தாம். இதனை அவரே பிரமத்தை விளக்குவதற்குப் பல உதாரணங்களைத் தந்து இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரன் என்னும் சுவாமி விவேகானந்தருக்குச் சொல்லிய’ நானும் பிரம்மம், நீயும் பிரம்மம், இந்தச் சுவர்கூடப் பிரம்மத்தின் ஒரு பகுதிதான் என விளக்குகிறார். தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் எவ்வளவு பெரிய மேதை என்பதை இவரது நூல்களை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். 

Saturday, May 23, 2009

மரணத்துக்குப் பின்னரான வாழ்வு

அனுபவம்அண்மையில் அப்பப்பாவின் இறுதிக் கிரிகைகள் முடிந்த பின்னர் அவரது புத்தக அலுமாரியை அலசியதில் கிடைத்த புத்தகங்களில் ஒன்று மரணம் பற்றிய விசாரணைகளை மீளக் கிளறி விட்டிருந்தது.

Thursday, May 21, 2009

இப்படிக்கு நாற்று....

தம்பலகாமம்வானத்து வெள்ளை மேகங்களே வரப்போடு கோபமென்பதால் வரவில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். கருகிப்போன வயல் அதை அறிந்தால் மீண்டுவந்து காறி உமிழும் உங்கள் முகத்தில். வயல் செழிப்பாய் இருந்த நாளில் மழைதரப்போவதாய் அடம்பிடித்த மேகங்கள் எல்லாம் போசுங்கிப்போகையில் மேலிருந்து படம்பிடித்த விந்தை சரித்திரத்தின் கரிய பக்கங்களாய் பதிந்து போயிருக்கிறது.

Wednesday, May 20, 2009

காத்திருக்கும் பறவை

சந்தோசமான இரைதேடல் , மனமகிழ்வோடு உறவுகளுடனான உறவாடல் , நிம்மதியான வாழ்க்கை ,எதிர்காலம் பற்றிய பயமில்லாத நாட்கள் என்ற கற்பனைகளோடு எந்தச் சலனமும் இல்லாமல் முட்கம்பிமீது யார்துணையுமின்றித் தனித்துட்கார்ந்திருக்கிறது பறவையொன்று நீண்டநாட்களாக........

த.ஜீவராஜ்

Tuesday, May 19, 2009

துயர்பகிர்வு

தம்பலகாமம்

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவருமான . தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலம் ஆனார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் இன்று(19.05.09) தம்பலகாமம் குஞ்சடப்பன்திடலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் நான்கு மணியளவில் நல்லடக்கத்துக்காக முள்ளியடி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பேரன் த.ஜீவராஜ்.


Saturday, May 16, 2009

வானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு

புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்
புகைப்படங்கள்புகைப்படங்கள்
புகைப்படங்கள்
சிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கனத்திருந்த பொழு்தொன்றில் வானத்து வண்ணங்களால் என் எண்ணங்களைத் தேற்றினேன்.அவ்வேளையில் என் கைப்பேசி கமராவிற்குள் (NOKIA N70) சி்றைப்பட்டுப்போன சில வானத்தின் வண்ணங்கள் உங்கள் பார்வைக்கு....

த.ஜீவராஜ்

தம்பலகாமம்

தம்பலகாமம்
இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாடு நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. மிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.

Friday, May 15, 2009

நன்றி நெல்லைத்தமிழ்.COM


ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக நெல்லைத்தமிழ்.COM சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை நெல்லைத்தமிழ்.COM நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன் ஜீவன்






கண்தழையே கந்தளாய் ஆனது

திருமலை
பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை நான்கு பற்றுக்களாகப் பிரித்தனர். மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.

திருக்கோணமலையின் தெய்வீகச் சிறப்பு

திருமலை
இந்த நில உலகத்தில் உச்சமான உயரத்தில் சிவபிரான் உமாதேவியோடு உறையும் மகா மலைத்தலம் கைலாயம். கடலின் மேல் மட்டத்தில்
இருந்து 22028 அடி உயரத்தில் இமய மலையின் உச்சியில் பார்வதி சமேதரரான சிவபெருமான எழுந்தருளி உள்ள கைலாய மலை உள்ளதென வரலாறு கூறுகின்றது.இறைவன் ஆதிசேடன், வாயுதேவன் இவர்களின் பலப்பரீட்சை காரணமாக கைலாய மலையின் சிகரங்களில் ஒன்றை இலங்கையின் வட கடலில் விழச் செய்து தென் கைலையாகிய திருக்கோணமலை என்ற திருப்பதியை உருவாக்கித் தந்தான் எனப் பக்திபூர்வமாகச் சைவ மக்கள் நினைவு கூருகின்றனர்.

அழிவின் விளிம்பில் இன்னொரு இனம்


திருகோணமலை நகரத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் இன்னொரு இனம் இந்த மானினம். இவர்களது பூர்வீகம் கிழேயுள்ள படத்தில் தெரியும் கோணமலை.

Thursday, May 14, 2009

கலங்குகின்றேன்.....


மண்டையைப் போட்டுடைத்து
மனத்தினில் கருத்துச் சேர்த்து
விண்டிட நினைத்த நல்ல
இலக்கிய முயற்சி எல்லாம்
பண்டைய எனது வீட்டில்
பத்திரமாக வைத் தேன்
கண் தழைக் குளத்து வெள்ளம்
கவர்ந்தெங்கோ சென்ற தம்மா

இறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......


பாடல் ஒன்று எழுதச் சொல்லி
காற்றுக் கேட்குது ஆனால்
பாழும் மனது வார்த்தை வரும்
வழியைப் பூட்டுது

Wednesday, May 13, 2009

மிதவைப் பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு

திருமலை
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர்,கிண்ணியா,புல்மோட்டை போன்ற இடங்களுக்கு பயணிக்க பாவிக்கப்படும் ஒரு வகை போக்குவரத்து முறையிது.

Tuesday, May 12, 2009

காலத்தின் கண்ணாடி


மீள ஒட்டமுடியாதபடி

உடைந்து போகிறது
கண்ணாடி ஒன்று
உலகத்தின் முன்னே

Monday, May 11, 2009

யதார்த்தங்கள்.....


வேலையில்லாத பொழுது
வீண்விவாதம் செய்ய
விரும்பாத மனது - முன்
எழுதியதைப் படித்து
பிழை திருத்தென்று
ஏவியது என்னை

Tuesday, May 05, 2009

அழிவில் இருந்து மீண்டெழுதல்.....

Koneswaram
திருக்கோணேச்சரம் 
இங்கு காண இருப்பது அழிவில் இருந்து மீண்டெழுந்த ஆலய வரலாற்றின் சுருக்கம்.

வரலாறு அறியுமா?


அந்தப்பக்கம் இத்தனை
இந்தப்பக்கம் இத்தனை
என்று எழுதும் வரலாறு
என்றேனும் அறியுமா?
இறந்தவனை இழந்தவன்
இறுதிவரை படும் துயரம்

நீதியும் அநீதியும்....


{நன்றி admirableindia.com}
பகல், இரவு, வெயில், மழை, நீதி, அநீதி, இன்பம், துன்பம் என இந்த உலகம் எல்லா விதங்களிலும் இரு விதமான நிலையிலேயே இயங்கி வருகிறது. இயற்கையின் இந்த இரு நிலைகளும் கால மாற்றத்தாலும் மாற்ற மடையாத உறுதியான நிலையிலேயே இருந்து வருகின்றன. ஆயினும் மனித வாழ்க்கையின் மேம்பாடு கருதி மேலோர்கள் அநீதி அருகி நீதி மேலோங்க வேண்டும் என்று பண்டு தொட்டு இன்றுவரை முயற்சித்தும், குரல் கொடுத்தும் வந்துள்ளனர். 

Monday, May 04, 2009

திருகோணமலை சனீஸ்வரன் ஆலய தரிசனம் புகைப்படங்கள் 2009


சனீஸ்வரன், ஒன்பது நவக்கிரகங்களில் ஒருவர். (கிரகங்கள் என்றால் பிடிப்பது என்று பொருள்) பெரும்பாலான பக்தர்களால் பயத்துடன் அணுகப்படும் கடவுள். அதே வேளை துன்பம் நேர்கையில் பக்தர்களால் நிறைய அர்ச்சிக்கப்படும் கடவுளும் இவராகத்தான் இருக்க வேண்டும். திருகோணமலையில் நிறைய ஆலயங்கள் இருந்தாலும் சனீஸ்வரனுக்கு தனியாக அமைக்கப்பட்டிருக்கும் ஆலயம் இதுவொன்றுதான். இலங்கையிலுள்ள ஒரேயொரு சனீவரன் ஆலயம் இதுவென நினைக்கிறேன். இந்தியாவிலுள்ள சனீஸ்வரனை பிரத்தியோகமாக வழிபடும் தலம் திருநள்ளாறு. நளன் சனிபகவானிடமிருந்து விடுபட்ட இடமாக கருதப்படும் இங்கு சனீஸ்வரனுக்குத் தனியான சன்னிதி உண்டு.

Saturday, May 02, 2009

விடியலுக்கான காத்திருப்பு....

திருமலை
திருமலை
திருமலை
திருமலை
இருள் கிழித்து, துயில் குலைத்து
விடிந்திடும் காலை

இசைபடித்து ஊரெளுப்பி நாளை
தொடங்கிடும் வேளை

அருமையான தயிர்கொடுக்கும்
எருமைகளின் கூட்டம்
வயல் உழுது, சேற்றோடு
வெயில்தனில் குளிக்கும்

சங்கதிகள் பல பாடிக் களித்தருவி
சலசலத்தோடும் அங்கே
நெல்மணம் கவர்ந்த கொண்டல்
கள்ளமாய் நம் நெஞ்சம் வருடும்


புல்லறுக்கும் பூவையரின்
பதுப்புது பாடல்கள்
நெல்விளையும் பூமிதனைத்
தாலாட்டிச் செல்லும்

சேற்றினிலே ஏருளும் கூட்டம்
மண்ணிறைந்த மேனியராய்
வலிமறந்து பாடையிலே நம்
மனமிழகிப் போகும்

ஒளிபட்டுச் சிரிக்கும்
பூவில் பனித்துளி
சிலிர்ப்பூட்டிச் செல்லும்
சிறுவர்களின் சிரிப்பொலி


தென்னை, பனை சோலைகளுள்
தினம் மறையும் கூட்டம்
கள்ளிறக்கி, மதிமயங்கி
மனை மறந்து கிடக்கும் பின்
மனைவிகண்டு மனம்தெளிந்து
பதறியடித்து வேலைசெய்வார்

வீதியெல்லாம் இசைபாடிச்செல்லும்
மாட்டின் குளம்பொலி
இத்தனையும் இரசித்துவக்கும்
இனியதொரு விடியல்
நாளைவராதோ என்று
நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.....


த.ஜீவராஜ்