Showing posts with label ஞாபகச்சிதறல். Show all posts
Showing posts with label ஞாபகச்சிதறல். Show all posts

Tuesday, December 08, 2009

வீடு - ஞாபகச்சிதறல்


புலம் பெயர்ந்தவர்கள், இந்திய ஏதிலி முகாம்களில் இருப்பவர்கள் , எங்கென்றும் தெரியாமல் காணாமல் போனவர்கள் , நாடுகடக்கையில் சிறைப்பட்டுப் போனவர்கள் என்று நீண்டு செல்லும் வகைப்பாடுகளில் நாங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். பெயரில் இத்தனை பிரிவுகளிருந்தாலும் ஒருவகையில் நாங்களனைவரும் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவர்கள்.

Tuesday, October 20, 2009

ரொபின் ஹூட் / ROBIN HOOD


நீண்டநாளைக்குப் பிறகு Robin of Sherwood தொலைக்காட்சித் தொடரின் ஒருபகுதியைப் பார்க்கக்கிடைத்தது. எப்போதோ கொழும்பு சென்றிருந்தபோது வாங்கிய இறுதட்டை கணிணிக்குள் சுழலவிட்டபோது கூடவே என் ஞாபகங்களும் சுழன்று பின்னோக்கிச் சென்றது.

Monday, June 22, 2009

தனித்து விடப்பட்டவர்கள்....

எத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.

தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.

Monday, June 01, 2009

ஞாபகச் சிதறல்கள்....(பாலர் வகுப்பறை)

இடிக்கப்படத் தயாராக இருக்கிறது அந்தப் பழைய கட்டடம். பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பல கட்டங்களில் இருந்து ஒதுங்கி தனித்திருக்கிறது அது.

பலமுறை அதனைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.மிகச் சிறிய வகுப்பறை. முதன் முறையாக எனக்குத் தெரிந்த வெளியுலகம் இவ்வளவு சிறியதாக இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

Wednesday, May 27, 2009

சுயம் மறைக்கும் போராட்டங்கள்....

அலுவலகம், அயலவர் வீடு, படிக்குமிடம், பலபேர் கூடுமிடம் ஏன் பயணிக்கும் போதுகூட பக்கத்தில் இருப்பவரின் மதிப்பீட்டுப் பயம் நம்மை இயல்பாய் எதையும் செய்யவிடுவதில்லை.

நிர்ப்பந்தச் சி்ரிப்புக்கள் , வேண்டுமென்றேயான விசாரிப்புக்கள் போலி நாகரீகம், சுயம் மறைக்கும் சுதாகரிப்புக்கள் என்று நம்நேரமெல்லாம் வீணாகிப் போய்விடுகிறது அடுத்தவர் என்ன நினைத்திடுவாரோ என்ற பயத்தில்.

இதன்போது பெரும்பாலும் நம்மை இராசாக்களாக உருவகித்துக்கொண்டு அடுத்தவர் முகத்தில் கரிபூசி விடுகிறோம். அல்லது நம்முகத்தில் ஏலவே கரி இருப்பதாக கருதிக்கொண்டு அடுத்தவர் முன் மண்டியிட்டுவிடுகிறோம்.
பேச்சு, சிரிப்பு நடத்தையென்று எதிலும் நம்சுயம் தெரியவிடாது நமக்கு நாமே போட்டுகொள்ளும் வேசம் பலவேளைகளில் நமக்கே வெறுப்பாய் , அருவருப்பாய் இருந்துவிடுகிறது.

சாதாரண அன்றாட அலுவல்களில் அடுத்தவர் நினைப்புக்களின் ஆக்கிரமிப்புத்தாண்டி நம்மை நம்மியல்போடு அடுத்தவர் முன் வைப்பதும், அதேபோல் பிறரை அவர்களது இயல்போடு ஏற்றுக்கொள்வதும் நிறைவான வாழ்வின் தேவையாக இருக்கிறது.

இராசாக்களுக்கும், முகத்தில் கரிபூசி சிறுமைப்படுத்தப்பட்ட மனிதர்களுக்கும் இடையில் சாதாரண மனிதர்களாக வாழ தினமும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
(யாழ்.மருத்துவபீட காலத்துப்படங்கள்)

 த.ஜீவராஜ்

Saturday, May 23, 2009

மரணத்துக்குப் பின்னரான வாழ்வு

அனுபவம்அண்மையில் அப்பப்பாவின் இறுதிக் கிரிகைகள் முடிந்த பின்னர் அவரது புத்தக அலுமாரியை அலசியதில் கிடைத்த புத்தகங்களில் ஒன்று மரணம் பற்றிய விசாரணைகளை மீளக் கிளறி விட்டிருந்தது.

Thursday, May 21, 2009

இப்படிக்கு நாற்று....

தம்பலகாமம்வானத்து வெள்ளை மேகங்களே வரப்போடு கோபமென்பதால் வரவில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். கருகிப்போன வயல் அதை அறிந்தால் மீண்டுவந்து காறி உமிழும் உங்கள் முகத்தில். வயல் செழிப்பாய் இருந்த நாளில் மழைதரப்போவதாய் அடம்பிடித்த மேகங்கள் எல்லாம் போசுங்கிப்போகையில் மேலிருந்து படம்பிடித்த விந்தை சரித்திரத்தின் கரிய பக்கங்களாய் பதிந்து போயிருக்கிறது.

Wednesday, May 20, 2009

காத்திருக்கும் பறவை

சந்தோசமான இரைதேடல் , மனமகிழ்வோடு உறவுகளுடனான உறவாடல் , நிம்மதியான வாழ்க்கை ,எதிர்காலம் பற்றிய பயமில்லாத நாட்கள் என்ற கற்பனைகளோடு எந்தச் சலனமும் இல்லாமல் முட்கம்பிமீது யார்துணையுமின்றித் தனித்துட்கார்ந்திருக்கிறது பறவையொன்று நீண்டநாட்களாக........

த.ஜீவராஜ்

Monday, April 27, 2009

துகிலுரிதலும்,பார்த்துக்கொண்டிருத்தலும்...


இன்றுவரை எனக்கு மர்மங்கள் பலநிறைந்த வாழ்வியல் ஆவணமாகத் தென்படுகிறது மகாபாரதம்.

சிலநாட்களாகவே மகாபாரதத்தில் திரௌபதிக்கு நிகழ்ந்த அந்த மிகக்கொடூரமான நிகழ்வான ‘துகிலுரிதல்’ சம்மந்தமான சில காட்சிகள் அவ்வப்போது மனதில் தோன்றி விடைதெரியாத பலகேள்விகளை எழுப்பிவிட்டுச் செல்கிறது.

Monday, April 13, 2009

யுத்தம்,இரத்தம்,சமாதானம்....


நட்பான பல வருசங்களே தப்பாகிப்போன என்னூரில் இரத்தங்களுக்கும், துப்பாக்கிச் சத்தங்களுக்கும் நடுவில் இருள்கிழிக்குமா ? என்ற கேள்விக்குறியோடு தமிழுக்கு விரோதி வருசம் பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.இதில் தமிழுக்கு வருசம் தை யா? சித்திரை யா ? என்ற வாதப்பிரதிவாதங்கள் வேறு.

Saturday, January 31, 2009

நன்றி மீண்டும் சந்திப்போம்.....

குருசேத்திரம்
குருதியும்,தசையும் சகதியாய் குவிந்து கிடக்கிறது என் தேசம். பத்து வயதில் என் பாட்டனார் {கதைசொல்லி} கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் குருசேத்திரம். இரத்தமுறைந்து நடுங்கிக்கொண்டே நாற்புறமும் பார்த்தவண்ணம் அவருடன் நடந்த ஞாபகங்கள் நிழலாடிமறைகிறது இப்போது.

Saturday, January 10, 2009

என் கல்விக்கூடங்கள் -1, தம்பலகாமம்..


பாடசாலை நாட்கள் பற்றிய நினைவுகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை, திரும்பிப்பார்க்கையில் எப்போதுமே உற்சாகம் தருபவை. எனது ஆரம்பப் பாடசாலை தம்பலகாமம் சாரதா வித்தியாலயம் என்றாலும் அதற்கு முன்பே பாடசாலைக்கும் எனக்குமான உறவு ஆரம்பித்திருந்தது. இது எல்லா வாத்தியார்களின் பிள்ளைகளுக்கும் வாய்த்திருக்கும் என நினைக்கிறேன். அப்படி அப்பாவுடன் நான் சென்றபாடசாலைகள் பாலம்போட்டாறு சித்திவிநாயகர், முன்மாதிரித்திடல்அ.த.க பாடசாலை என்பனவாகும்.