Saturday, January 31, 2009

நன்றி மீண்டும் சந்திப்போம்.....

குருசேத்திரம்
குருதியும்,தசையும் சகதியாய் குவிந்து கிடக்கிறது என் தேசம். பத்து வயதில் என் பாட்டனார் {கதைசொல்லி} கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் குருசேத்திரம். இரத்தமுறைந்து நடுங்கிக்கொண்டே நாற்புறமும் பார்த்தவண்ணம் அவருடன் நடந்த ஞாபகங்கள் நிழலாடிமறைகிறது இப்போது.


குருசேத்திரம்
குருசேத்திரம்
குருசேத்திரம்
காட்சிகளில் காலமாற்றம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. போரின் கொடூரமும், வலியும் , வேதனைகளும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது...நிகழ்வின் கோரத்தை எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், விளக்கம்சொல்கிறார்கள், இருந்தும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது முடிவு.

யுத்தத்தின் முடிவினைக் கண்டவர்கள்
இறந்தவர்கள் மட்டுமே …பிளேட்டோ..

அழிவுகளும், இழப்புக்களும் தொடர்ந்தவண்ணம் இருக்கையில் சிலநாட்களுக்கு தற்காலிகமாக இந்த வலைப்பூவினை நிறுத்தி வைப்பது நல்லதெனத் தோன்றுகிறது. முழுவதுமாய் நம்பிக்கை இழந்துவிடவில்லை என்றாலும், எழுதவரும் ஒவ்வொருதடவையும் மனதுவலிக்கிறது குற்றவுணர்வில்....

பக்கங்கள் நிரப்புவது தவிர்த்து
என்ன சாதித்துவிட முடியும்
இருப்பதை எழுதாமல்


இதுவரை நல்லாதரவுதந்த அனைத்து நண்பர்கள், அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள்......

நல்லனவற்றோடு பிரிவோம்
அல்லாதனவற்றை மறப்போம்
மறுபடியும் மீண்டும் சந்திப்போம்


அன்புடன் ஜீவன்..
31.01.2009.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

17 comments:

  1. காட்சிகளில் காலமாற்றம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. தொடரும் வரிகள் மனத்தை அரிக்கின்றன

    ReplyDelete
  2. உண்மைதான்.... ஊர்முழுக்க சாவீடா கிடக்கிறது. ஏதிர்ப்படும் யாவரும் கண்ணீரால் பேசுகிறார்கள். என்றுதீருமோ இந்தவலி......

    ReplyDelete
  3. கவிதையினூடு நிகழ்கால நிஜம் உறைக்கிறது

    ReplyDelete
  4. //பக்கங்கள் நிரப்புவது தவிர்த்து
    என்ன சாதித்துவிட முடியும்
    இருப்பதை எழுதாமல் //

    நிதர்சனமான உண்மை
    அன்புடன் அருணா

    ReplyDelete
  5. ம்..உங்கள் சொல்லாடல்கள் மனதைக் கனக்க் வைக்கிறது... குருசேத்திரத்தில் தர்மம் வென்றதாகத்தானே கேள்விப் பட்டிருக்கிறோம். அது ஒரு போதும் பொய்க்காது.

    உங்கள் gmail முகவரியை எனக்கு அனுப்ப முடியுமா??

    ReplyDelete
  6. நன்றி அருணா அவர்களே

    ReplyDelete
  7. நன்றி கமல்
    நம்பிக்கை இருக்கிறது ஏதோவொரு புள்ளியில் நல்லது நடந்துவிடுமென்று....


    gmail முகவரி அனுப்பியுள்ளேன்

    ReplyDelete
  8. இரத்தமுறைந்து நடுங்கிக்கொண்டே நாற்புறமும் பார்த்தவண்ணம் அவருடன் நடந்த ஞாபகங்கள் நிழலாடிமறைகிறது இப்போது.
    ************************************

    ஞாபகங்கள் மட்டும்தன் நிரந்தரமாகிப் போனவை. ஊரிலிருந்து ஒரு குரல் அதுவும் பக்கங்களை நிரப்பியென்ன பயனென்று போனால் ?

    ஜீவன் தொடர்ந்து எழுதுங்கள்.

    தமிழிரின் இயல்பே தோற்றலில் துவண்டுபோதலென்ற என் மூத்தோர் ஒருவர் அடிக்கடி சொல்வார்.

    நம்புவோம். நல்லது நடக்க வேண்டும்.

    சாந்தி

    ReplyDelete
  9. நம்பிக்கையூட்டலுக்கு நன்றி சாந்தி அவர்களே....
    உறவொன்று உயிரிழந்தாலும் ஓ... என்று ஊர்கூட்டி அழமுடியாது வாய்பொத்தி அழுத அனுபவங்கள் உங்களுக்கும் வாய்த்திருக்குமென நினைக்கிறேன் அந்தநிலைதான் இப்போது பதிவிடுவதிலும்.

    குறித்து வைத்திருக்கும் பதிவுகள் நிறைய... விரைவில் சந்திப்போம்.....

    ReplyDelete
  10. என்றுதீருமோ இந்தவலி....????????????????

    ReplyDelete
  11. ????
    நன்றி சாரதி

    ReplyDelete
  12. உணர்வுகளுடன் ஒன்றிப்பதைத் தவிர வேறு சொல்ல முடியவில்லை

    ReplyDelete
  13. நன்றி எஸ்.சத்யன்

    ReplyDelete
  14. Feb 5, 2009 12:45:00 PM
    தங்கராசா ஜீவராஜ் சொன்னது…
    உறவொன்று உயிரிழந்தாலும் ஓ... என்று ஊர்கூட்டி அழமுடியாது வாய்பொத்தி அழுத அனுபவங்கள் உங்களுக்கும் வாய்த்திருக்குமென நினைக்கிறேன் அந்தநிலைதான் இப்போது பதிவிடுவதிலும்.
    Feb 5, 2009 2:25:00 PM
    -----------------------------------------------
    ஓவென்று அழுது உள்ளத்துயர் கரைக்க முடியாத அகதி வாழ்வில் இத்தகைய அனுபவங்கள் நிறையவே. உரத்து அழுதால் அயல் வீட்டான் காவற்துறையைக் கூப்பிடும் கதையும் இதுக்காகவா என்ற எதிர்வீட்டின் பார்வைகளும் நிறையவே அனுபவங்கள். அதன் வழி கிடைத்த துயர்கள்.

    தங்கள் இருப்பிடம் பாதுகாப்பு அனைத்தையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து வாருங்கள்.

    சாந்தி

    ReplyDelete
  15. நன்றி கேள்வி. நெட்

    ReplyDelete