ஆதினி


இன்றைய சூழ்நிலையில் 46,850 மொத்த சனத்தொகையாகக் கொண்ட கந்தளாய்ப் பிரதேசத்தில் 2119  தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அங்கு கிடைக்கும் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மூன்று கல்வெட்டுகளையும், கந்தளாயுடன் தொடர்புடைய ஏனைய இரு கல்வெட்டுகளையும், ஐரோப்பியர் ஆவண குறிப்புகளையும், வாய்மொழி வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆயிரம் வருடங்களுக்கு முந்திய கந்தளாய்ப் பிரதேச வாழ்வியலை உங்கள் கண்முன் கொண்டுவரும் சிறு முயற்சி இது.

ஆதினியின் கதையினை தொடராக பிரசுரித்துவரும் கனடாவின் தாய்வீடு இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு.திலீப்குமார், ஓவியர் திரு.டிராட்ஸ்கி மருது மற்றும் திரு. பிரசாத் சொக்கலிங்கம் அண்ணா ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பதோடு / கேட்பதோடு நின்றுவிடாமல் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் ஆரோக்கியமான கருத்தாடல்கள் இனி வரும் எனது எழுத்துக்களை மென்மேலும் பண்படச் செய்யும்.

நன்றி 

நட்புடன் ஜீவன்

ஒலி வடிவம் பதிவின் கீழ்ப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
1. பிடிவாதக்காரி  -   ( ஆதினி  பகுதி 1 )ஒலி வடிவில் கேட்க


No comments:

Post a Comment