Wednesday, March 25, 2009

புலவரின் மனஅங்கலாய்ப்பு


உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொகையான மக்கள் தொழில் செய்து ஊதியம் பெற்று உயிர் வாழவும் உலகில் பல விதமான தொழில்கள் இருக்கின்றன் ஆயினும் சிலர் உலகில் உள்ள எல்லாவற்றிலும் கல்வியே சிறந்த தென்று ஆராய்ந்து அறிந்து கல்வியை கசடறத் துறைபோகக் கற்று பாண்டித்தியம் எய்தி ஆற்றல் மிக்க கவிவாணர்களாக அழகும் அறிவுமிக்க கவிதைகள் புனைந்து மனித குலத்தை நெறிப்படுத்தும் பெரும்தொண்டு புரிந்து வருகின்றனர். மானிட சமூதாயத்தின் சீலமான நல்வாழ்வுக்காக தங்கள் முழுக்காலத்தையும் செலவிட்டு வரும் படித்த மேதைகளான புலவர் பெருமக்கள் தங்கள் வாழ்வைக் கழிக்கும் நோக்கில் பொருள் தேடுவதென்பது இயலாத காரியம்.

Tuesday, March 24, 2009

பண்புள்ள ஆடவர் பழக்கத்தால் மாதர்க்கு பழுதொன்றுமில்லை..ஆண்கிளி :
காய்ச்சலால் நான் இங்கு படுத்திருக்க
கதிர் கொய்ய வயலுக்குப் போயிருந்தாய்
வாச்சது சந்தர்ப்பம் என்று மகிழ்ந்து
மாற்றானின் உறவில் மயங்கினாய் போ

பெண்கிளி :
என்ன புதிர்போட்டுப் பேசுகிறீர் அன்பே
ஏற்குமோ இத்துயர் வார்த்தையெல்லாம்
என்னைச் சிறுமையாய் ஏசிட உங்கட்கு
எவர் செய்த போதனை கூறிடுங்கள்.

Sunday, March 22, 2009

தர்மம் தலை காக்கும்

 கவிதை
பெண்கோழி 
நெஞ்சடைக்கக் கொக்கரித்து
நீங்கள் இடும் கூச்சலினால்
பஞ்சணைபோல் கூடுதனில்
படுத்துறங்கும் என் துயிலைக்
கொஞ்சமேனும் நோக்காது
குழப்புகிறீர் என் துரையே.

சேவல் 
அஞ்சுகமே! என்னுடைய
அழகான பெண் மயிலே!
மிஞ்சி ஒளி வீசி வரும்
வெய்யோன் வரவுதனை,
வஞ்சனை எதுவுமின்றி
மாந்தர்க் குணர்த்துகிறேன்.

Tuesday, March 17, 2009

நெஞ்சு நோகாத நாட்களில்லை......

 கவிதை
காலனை உதைத்த முக்கண் கடவுளின் குமாரனான
வேலனின் பெயரை வைத்தால் விடிவெனக்குண்டென் றெண்ணிச்
சீலத்தில் சிறந்த பெற்றோர் சிந்தித்துப் பெயரிட்டார்கள்
வேலையும் கிடைக்கவில்லை, விடிவையும் கண்டேனில்லை

Sunday, March 15, 2009

அத்தான் என்றழைத்தால் என்ன குறைந்துவிடும்....?

 கவிதை
கன்னம் குழிய முறுவலித்துக்
காண்போர் நெஞ்சு கிறுகிறுக்க
மின்னலிடையில் கை கோர்த்து
மிடுக்காய் நிற்கும் தேன்மொழியே
பின்னல் சடையும் கதை பேசும்
பெரிய விழியும் உடைய என்
இன்பப் புதையல் போன்றவளே
எனக்கோர் முத்தம்தாராயோ

Saturday, March 14, 2009

விசித்திரமான தேவலோகம்!

கட்டுரை
இக்கதையை விஸ்வாமித்திரர் இராமாயணத்தில் குலமுறை கிளர்த்தும் படலத்தில் இராம இலட்சுமணர்களுக்குக் கூறுகிறார். இதனால் தொடர் முயற்சிகளுக்குப் பகீரத முயற்சி என்றும் கங்கைக்குப் பகீரதி என்றும் காரணப் பெயர்கள் வந்தன.

Friday, March 13, 2009

நீதி காத்த பாண்டிய மன்னர்கள்

கட்டுரை
இந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக விளங்கினர். சங்கம் அமைத்துப் புலவர்களுடன் தாங்களும் உடனிருந்து ஆராய்ந்து இவர்கள் தமிழ் வளர்த்தனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.

Wednesday, March 11, 2009

கோவிந்தபிள்ளை வல்லிபுரம் சோமசுந்தரம்


ரங்கநாயகியின் காதலன் குறுநாவல்
சமர்ப்பணம்
தம்பலகாமம் தந்த திருக்கோணமலையின் வயலின் இசைக் கலைஞர்
சங்கீத பூஷணம் வல்லிபுரம் சோமசுந்தரம் 

திருக்கோணமலை மாவட்டத்தின் இசைத்துறையில் குறிப்பாக வயலின் வாத்திய இசையில் வறட்சியை போக்கிய தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திருகோணமலையின் முதல் வயலின் இசைக்கலைஞன் திரு. வல்லிபுரம் சோமசுந்தரம் என்றால் அது தம்பலகாம மண்ணுக்கே பெருமை.

இவர் வயலின் கலைஞராக திருகோணமலையில் கால்பதிக்குமுன் இங்கு நடைபெற்ற கதாப்பிரசங்கம், இசைக்கச்சேரிகள், போன்ற இசைநிகழ்ச்சிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்துதான் பக்கவாத்தியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். சோமசுந்தரம் அவர்களின் வருகைக்குப்பின் இந்த வறட்சி நீக்கப்பட்டுள்ளதென்றால் அது மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாததொன்றாகும்.

Tuesday, March 10, 2009

கூந்தலில் மலர் சூடும் பழக்கம்!இந்த நில உலகில் பரிசுத்தமான,தூய்மையானவைகள் செடிகளில் அன்றாடம் மலரும் பூக்களே. எனவேதான் மனிதர்கள் இறைவனுக்குப் பூக்களை அர்ச்சித்து வணங்குகின்றனர். ஆயினும் இந்த மலர்களை விட இறைவனுக்கு மிகவும் விருப்பமான பொருள் மனிதனிடம் இருக்கின்றது என்று சுவாமி விபுலானந்தர் பின்வருமாறு கூறுகின்றார்.

Monday, March 09, 2009

ரங்கநாயகியின் காதலன் - வெளியீட்டுரை

க.வேலாயுதம்
இது கிராமத்தில் பூத்த ஒரு சரித்திரக் குறுநாவல். எமது இருபதாவது வெளியீடு. இதன் ஆசிரியர் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ஒரு முதுபெரும் எழுத்தாளர், பழம்பெரும் ஊடகவியலாளரும்கூட.

Sunday, March 08, 2009

‘ரங்கநாயகியின் காதலன்’ அணிந்துரை

Thampalakamam
முழு நிலவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கின்ற செயல் இது என்றே எனக்குப் படுகின்றது. முற்றிலும் பொருத்தமான முறையில், பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் என்று வருணிக்கப்பட்டுள்ள தம்பலகாமம் வேலாயுதம் ஐயா எந்தளவுக்கு மண்ணின் மைந்தனாக வாழ்ந்தார் என்பதை அவரது எழுத்துலக வாழ்க்கை தெளிவாகக் காட்டுகின்றது.