Thursday, August 20, 2015

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல்


திரு.வேலாயுதம் தங்கராசா அவர்கள் ஓய்வு பெற்ற அதிபர், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டதாரி, தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்பின்படிப்பை முடித்தவர். வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில், மரபுவழி அறக்காவலர்களில் ஒருவராகக் ‘கங்காணம்’ என்னும் பதவி வகிப்பவர். தம்பலகாமத்தின் மூத்த எழுத்தாளர் திரு.க.வேலாயுதம் அவர்களின் அன்புமகனாகிய இவர், இளம்வயதில் இருந்தே எழுதுவதில் அதீத ஆர்வமுள்ளவராக இருந்து வந்துள்ளார். இவரது பல இலக்கியப் படைப்புக்கள் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி, மித்திரன், மலைமுரசு ஆகிய தினசரி, வாரப்பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

Thursday, August 13, 2015

வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும் !


எனது அப்பப்பா (அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்) நல்ல கதைசொல்லி. தனது அனுபவங்களையும் பல இடங்களிலும் தான் வாசித்தறிந்த விடையங்களையும் இணைத்து சுவைபட சொல்லும் வல்லமை பெற்றவர். மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர் வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் என்று நீண்டு செல்கிறது அவரது ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள் மற்றும் இதழ்களின் பட்டியல். அவற்றில் வந்த அவரது ஆக்கங்களை எப்படிச் சேகரித்து வைத்திருந்தாரோ அதே அளவு ஆர்வத்துடன் அவ்வாக்கங்களுக்கு வந்த விமர்சனங்கள், வாசகர் கடிதங்கள், என்பனவற்றையும் பாதுகாத்து வைத்திருந்தார்.

Wednesday, August 05, 2015

தம்பலகாமத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச கருத்தரங்குகள் - புகைப்படங்கள்


நாடளாவியரீதியில் நடத்தப்படும் பரீட்சைகள் நெருங்கி வரும் போது நகர்ப்புறங்களில் கருத்தரங்குகள் பல இடம்பெறுவது வழமை. இந்த வாய்ப்புகள் கிராப்புறங்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது. எனவே இம்முறை 2015 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தம்பலகாமத்தில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கினை  செய்வதற்கான முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Tuesday, August 04, 2015

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் நாடாளுமன்ற பிரநிதித்துவம்


விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1977 இல் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம்முறைப்படியே இன்றுவரை நடைபெறுகின்றன.

இலக்கியப்பூக்கள் 2 இல் தம்பலகாமம் க. வேலாயுதம்

முல்லை அமுதன்

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன், கல்வியங்காடு, யாழ்ப்பாணம்,  இலங்கை)  ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.