Friday, September 15, 2023

நூறாண்டுகளுக்கு முன்னர் (1919) வாழ்ந்தவர்களின் பெயர்கள்

A postcard image of a Sri Lankan Tamil woman, 1910.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

தமிழில் பெரிதும் பிரபல்யம் இல்லாத ஒரு துறை பெயராய்வு (onomatology). ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்வரும் ஆவணத்தில் உள்ள நபர்களின் பெயர்களை மக்கட் பெயராய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, September 13, 2023

கந்தளாய்க் குளக்கட்டுக் காவியம்


மழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால்  இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. அவை

1. ஆகம வழிபாடு  (பெரும்தெய்வ வழிபாடு) - கோயிலில் நடைபெறும் நித்திய பூசை, அபிஷேகம், திருவிழா போன்றவை

2.  கிராமிய வழிபாடு (சிறுதெய்வ வழிபாடு) - கந்தளாய்க் குள மகா வேள்வி, தம்பலகாமம் நாயன்மார் திடலில் நடைபெறும் மடை வைபவம் ,கள்ளிமேடு ஆலையடியில் நடைபெறும் பத்தினித் தேவி விழா , சிப்பித்திடலில் நடைபெறும் அண்ணமார் வேள்வி, வல்லிக்கண்ணருக்கு மடை, மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்காம்பிகா விழா போன்ற வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திறந்த வெளிச் சுற்று ஆராதனைகள்.