Friday, September 15, 2023

நூறாண்டுகளுக்கு முன்னர் (1919) வாழ்ந்தவர்களின் பெயர்கள்

A postcard image of a Sri Lankan Tamil woman, 1910.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

தமிழில் பெரிதும் பிரபல்யம் இல்லாத ஒரு துறை பெயராய்வு (onomatology). ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்வரும் ஆவணத்தில் உள்ள நபர்களின் பெயர்களை மக்கட் பெயராய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆவணம் 1919 ஆண்டில் இடம்பெற்ற தம்பலகாமம் ஆதிகோணநாயகர் மாகாசபை கூட்டம் தொடர்புடையது. ஆதிகோணநாயகர் ஆலயக் கருமங்கள் தொடர்பாக கூட்டப்பட இருந்த ஒரு மகாசபைக் கூட்டம் பற்றிய அறிவித்தல் இதுவாகும். இப்பத்திரம் பின்னர் 20/ 9 /1919 இல் அ. குலசேகரம்பிள்ளை அவர்களால் சரியான பிரதி (true copy) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவரின் பதவிநிலை இங்கு குறிப்பிடப்படவில்லை.   அவ்வறிவித்தில் கடிதத்தின் முழுமையான வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.


பிரசித்தம் 

திரு தம்பலகமம் ஆதியாகிய கோணநாயகர் கோயில் பராபரிப்புக்காரரில். ஒருவராகிய எரம்பு கதிரவேலு காலஞ்சென்றமையாலும், கோயில் காரியங்களை வழுவின்றி நடத்துதற்கு அவருடைய இடத்திற்கு இன்னொரு பராபரிப்பை நியமிக்க வேண்டியதனாலும், இன்னும் கோயிலுக்காகவேண்டிய அவசிய திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பதனாலும் 1919ம் ஆண்டு மாசிமாதம் 19ந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமே பத்துமணிக்குத் தம்.கோணநாயகர் கோவிலில் ஓர்மகாசபை கூடப்படும். அத்தருணம் கோயில் நன்மையை விரும்பிய சைவ சமைய அவிமானிகள் சகலரும் சமுகந்தந்து என்பிரானின் கருமங்களை இனிது முடிக்குமாறு வேண்டுகின்றோம். 

கையொப்பம் 

கோ.கதிர்காமத்தம்பி 

பராபரிப்பு 

1. வே.வைரமுத்து   (காரியப்பர், தானத்தார். )

2. கு.முருகப்பர்     (வைராலியார், வரிப்பத்து)

3. கா.வை.கனகசபை    (அடப்பன்,மீகாமர் )


சரியரனபிரதி

அ.குலசேகரம்பிள்ளை

20/9/19

இதைப்போலொத்த இன்னும் மூன்று பிரதிகள் கோட்டியாபுரப்பகுதி, கட்டுக் குளப்பகுதி, திருகோணமலைப் பகுதிக்கும் அனுப்பப்பட்டது. எல்லாப்பரதிகளிலும் நொத்தீஸ்சு கண்டதற்கு பலபேராலும் கைசாத்திடப்பட்டிருக்கிறது. 

கூட்டத்துக்கு வந்தவர்களின் பெயர்

 

1. க.முத்துக்குமாரு   வன்னிபம்  

2. அ.குலசேகரம்பிள்ளை

3. நா.அப்பாத்துரை ஜயர்.   முதன்மை 

4.     சு.கண்ணமுத்துக்குருக்கள்

5. கு.கோணாமலை 

6. கு.வேலுப்பிள்ளை 

7. எ.கணபதிப்பிள்ளை 

8. ச.அகிலேசு 

9. வே.வைரமுத்து    தானத்தார்.  காரியப்பர் 

10. வே.பொன்னையா 

11. கா.சுப்பிரமணியம் 

12. வே.கனகசபை 

13. க.பத்தினியர்

14.  சு.முருகப்பர்.  வரிபத்து.  வைராவி 

15. க.கோணாமலை

16. வே.கோணாமலை 

17. வே.சோமசுந்தரம் 

18. ஆ.வேலுப்பிள்ளை 

19. மா.கதிர்காமத்தம்பி 

20. எ.கதிர்வேலு 

21. சி.காளியப்பு 

22. கோ.கந்தப்பு 

23. கா.கனகசபை 

24. ச.கதிர்காமத்தம்பி 

25. க.ஆறுமுகம் 

26. க.பத்தினியன் 

27. க.கதிரமலை 

28. கா.இராமு 

29. இ.சின்னத்தம்பி 

30.   .கந்தர்

31. ப.வேலாயுதம் 

32. மு.கந்தையா 

33. வே.நல்லதம்பி 

34. ச.தம்பிமுத்து

35. க.ஏரம்பு 

36. அ.கதிராமு 

37. கோ.காளியப்பு 

38. ஆ.காத்தமுத்து 

39. பெ.கனகசபை 

40. க.நாகமுத்து 

41. ஆ.காத்தமுத்து 

42. த.செல்லத்தம்பி 

43. க.மாசிலாமணி 

44. க.செல்லன் 

45. வ.கந்தையா 

46. சி.வல்லிபுரம் 

47. வே.பத்தினியன் 

48. கா.இராமநாதபிள்ளை 

49. கா.அம்பலவானி 

50. க.சின்னத்தம்பி 

51. மு.பெரியதம்பி 

52. வே.கதிர்காமத்தம்பி 

53. க.பளனியப்பர்

54. அ.இராசகோன் 

55.பொ.சரவணப்பெருமாள் 

56. க.கதிர்காமத்தம்பி 

57. வா.வேலுப்பிள்ளை 

58. த.வீரக்குட்டி 

59. வ.முத்துக்குமாரு 

60. க.காளியப்பு 

61. க.ஆறுமுகம் 

62. ஜ.கந்தையா 

63. க.சரவணமுத்து 

64. க.ஜயாத்துரை

65. சு.முருகேசு 

66. க.கந்தையா

 

 நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.comஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment