Saturday, October 05, 2013

தம்பலகாமம் கல்வெட்டு

திருகோணமலை வரலாறு
1..................................
2.................................
3................................
4.................................
5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ(ர்)
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
269 ம் பக்கம்

தம்பலகாமம் கல்வெட்டுச் சொல்லும் வரலாறு

1.  ‘உடையார்’  - உடையார் என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கும்.

2.  ‘ஜகதப்ப கண்டன்'  - ‘கண்டன்’ என்பது போர் வீரனைக் குறிக்கும் சொல்லாகும். ஜகதப்ப என்பது ஒரு விருதுப்பெயர். வீரசாதனை புரிந்தவர்களுக்கு உரியது. பதினோராம், பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் திருகோணமலைப் பிரதேசத்தில் கந்தளாய் ,மயிலங்குளம் போன்ற இடங்களில் இத்தகைய படைகள் இருந்தன என்பது வரலாறாகும். இதே போன்று தம்பலகாமத்திலும் ‘ஜகதப்ப கண்டன்’ என்ற பெயரால் வழங்கிய படையொன்று இருந்துள்ளது என்பது இந்தச் சாசனத்தின் மூலம் அறியப்படுகிறது.

கந்தளாய், கட்டக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் ,புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி சிங்கள வரலாற்று நூல்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே தம்பலகாமம் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒரு வீர பட்டினமாக அல்லது வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிக நகராக இருந்ததா? என்ற சந்தேகங்களை வரலாற்றுப் பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் தனது’தம்பலகாமத்துக் கல்வெட்டு’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

3.  தம்பலகாம ஊ(ர்)  -  தம்பலகாமம் என்னும் ஊரின் பெயரினைக் குறிப்பிடும் முதலாவது தமிழ் ஆவணம் தம்பலகாமம் கல்வெட்டு ஆகும். 

காலம் -  இச்சாசனம் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கலிங்க மாகனின் ( 1215 - 1255 )  ஆட்சிக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
வாசித்தவர் -  பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் 
இடம் -  இலங்கை தொல்பொருள் திணைக்களம்

தம்பலகாமம் கல்வெட்டு

                                                                   த.ஜீவராஜ்

மேலும் வாசிக்க

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment