Tuesday, September 13, 2022

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மகாநாடு - புகைப்படங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்திருக்கும் தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கோணேச்சர ஆலயத்தின் வருடாந்த  மகாசிவராத்திரி வரலாற்று ஆய்வு மகாநாடு 08.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்புற இடம்பெற்றது. 

இந்நிகழ்வு திருகோணமலை ஸ்ரீ இ.கி.ச கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் மாலை 4 மணியளவில் ஆரம்பமானது. திருக்கோணேச்சரத்தில்  இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ஆய்வுநூல் 2024 ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வைத்து வழிபடப்பட்டு இன்னிய வாத்திய இசையுடன் விழா மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது.

திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்

உலகம் முழுவதும் இருந்து கிடைக்கப்பெற்ற திருக்கோணேச்சரம் தொடர்பான புதிய வரலாற்று ஆதாரங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஆய்வுகள் இந்நூலில் இடம்பெற்றிருந்தது சிறப்பம்சமாகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த வரலாற்று ஆர்வலர்களின் முன்னிலையில் கலை நிகழ்வுகளுடன் இவ்விழா ஆரம்பமானது. துறைசார் பேராசிரியர்களின் முன்னிலையில் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான அமர்வுகள் இடம்பெற்றது. மிகக்குறுகிய நேரத்தில் சிறப்பான ஒழுங்கமைப்புடன் ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வாளர்கள் மன்றில் சமர்ப்பித்தார்கள்.

திருக்கோணேஸ்வரம்

திருக்கோணேச்சரத்தின் தொன்மை, திருக்கோணேச்சர ஆலய வழமைகள், திருக்கோணேச்சரமும், நாட்டார் வழக்குகளும் போன்ற பல்வேறு தொனிப்பொருளில் ஆய்வுக் கட்டுரைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.  இலங்கையிலிருந்தும் உலகின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் கலந்துகொண்ட பேராசிரியர்கள் ஆய்வு முடிவில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி நிகழ்வுக்கு வலுச்சேர்த்தனர். இம்முறை தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, கனடா. இலண்டன் ஆகிய நாடுகளிலிருந்து பல பேராசிரியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வின் மத்தியில் நாடளாவியரீதியில் மாணவர்களுக்கு இடையே நிகழ்த்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 

திருகோணமலையில் அண்மைக்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட திருக்கோணேச்சர ஆலய வரலாறு தொடர்பான கல்வெட்டுக்களின் காணொளிகள் நிகழ்ச்சிகளுக்கு இடையே விளக்கங்களோடு காண்பிக்கப்பட்டது மனதைக் கவர்வதாக இருந்தது.

பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களின் காத்திரமான உரைகளோடு இரவு 10 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.திருக்கோணேச்சரம் தொடர்பான பல புதிய தகவல்களை பெற்றுக்கொண்ட சந்தோசத்தோடு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மன நிறைவோடு வீடு சென்றார்கள்.

திருக்கோணேஸ்வரம்

நீண்டநாள் மனக்கனவின் விளைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. அவசரத்தில் திகதியை சரிவரப் பார்க்காத நண்பர்கள் மன்னிப்பார்கள் என நினைக்கிறேன்.

 யாவும் கற்பனை 
நட்புடன் ஜீவன்.











இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment