Thursday, October 31, 2013

மின்நூல் - ''ரங்கநாயகியின் காதலன்'' - குறுநாவல்


ஆக்க இலக்கியத் துறையில் புனைகதை வகை சாதாரண மக்களின் கவனத்தை ஈர்த்துவிடக்கூடிய ஒரு இலக்கிய வடிவமாகும். அந்த வகையில் காலத்தின் பதிவாகவும், ஒரு குறித்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக அசைவியக்கம் என்பவற்றை மிக எளிய நடையில் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியவகையில் எடுத்துக்கூறும் புனைகதை வடிவமான குறுநாவலினூடாக மிக எளிமையான முறையில் அக்கால இலக்கிய பேச்சு வழக்கு நடையில் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ரங்கநாயகியின் காதலன் ஊடாக வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
வல்வை.ந.அனந்தராஜ் , திருக்கோணமலை.

Wednesday, October 30, 2013

மின்நூல் - ''தமிழ் கேட்க ஆசை'' - கட்டுரைத் தொகுப்பு


திரு. தம்பலகமம் க. வேலாயுதம் அவர்களின் தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பில் முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவரது கட்டுரைகளில் பல  இவரது மண்ணின் , தம்பலகாமம் மண்ணின் வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. சில கட்டுரைகள் ஆய்வை நோக்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதன் தன்மையில் தனித்துவமாகவே இருக்கிறது. திறமையாக எழுதப்பட்டிருக்கிறது.
கலாவினோதன்,த.சித்தி அமரசிங்கம்.

Monday, October 28, 2013

ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளரும், எழுத்தாளருமாகிய அமரர் திரு.முத்துக்குமாரு சிவபாலபிள்ளை


வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமத்தில் ‘வர்ணமேடு’ பழமையில் இருந்தே நன்கு பேசப்பட்ட இடமாகும்.  ‘வர்ணமேட்டில்’ மிகுந்த செல்வாக்குப்பெற்ற அமரர் முத்துக்குமாரு,அமரர் வள்ளிப்பிள்ளை ஆகிய தம்பதிகளின் ஐந்தாவது பிள்ளையாக 06.11.1942 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நமது பெருமதிப்புக்குரிய அமரர் முத்துக்குமாரு சிவபாலபிள்ளை அவர்கள்.

Sunday, October 27, 2013

சர்வதேச விருது பெற்ற ‘அடிவானம்’ குறும்பட இயக்குனர் பல்துறைக் கலைஞர் திரு.யோகராசா சுஜீதன்

அடிவானம்

‘விம்பம்’ சர்வதேச ஏழாவது குறுந்திரைப்படவிழா ‘இலண்டன்மா நகரில்’ 2011.நவம்பர் 11ஆந் திகதி மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தென்இந்தியாவில் சிறந்த படங்களான ‘சாமுராய்’ ‘காதல்' 'கல்லூரி’ 'வழக்குஎண் 18/9' ஆகிய படங்களை இயக்கிப் புகழ்பெற்ற திரு.பாலாஜீ சக்திவேல் அவர்களும் ஆய்வாளரும், அரங்கியலாளரும், நாடக விமர்சகருமாகிய திரு.யு. ராம்சுவாமி போன்ற பலரும் மத்தியஸ்தம் வழங்கினர்.

Friday, October 25, 2013

'தமிழ்ப்பாஷை' நூல் வெளியீடு

தமிழ்ப்பாஷை

இந்நூல் எழுநா, நூலகம் ஆகியவற்றின் கூட்டுவெளியீடாக கடந்த 19.10.2013 இல் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் "பகிர்வு" இலக்கியக்  குழுமத்தின் "முற்றத்துச் சந்திப்பில்" வெளியிடப்பட்டது.

Wednesday, October 23, 2013

‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ தந்த தம்பலகாமத்தின் முதுபெரும் கவிஞன் வீரக்கோன் முதலியார்

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்  திருவிழா

வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் தம்பலகாமத்தின் முதுபெரும் கவிஞராக விளங்குகிறார் ஸ்ரீ.ஐ.வீரக்கோன் முதலியார் அவர்கள். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் பழந் தமிழ் நூல் இவரால் இயற்றப்பட்டது.

Tuesday, October 22, 2013

'மடை' - பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும், பாரம்பரிய கலைஞர்களின் கொண்டாட்டமும்


திருமலை நகரில் 'மடை' எனும் மகுடத்தில் நடைபெறவுள்ள 'பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும்,கலைஞர்களின் கொண்டாட்டமும்'

விருதுகள் பல வென்ற சூரியன் FM அறிவிப்பாளர் திரு.தில்லையம்பலம் தரணீதரன்

Tharaneetharan

தம்பலகாமம் வடக்கிலுள்ள ‘சம்மாந்துறை’ வயல்வெளியில் செந்நெல்லும் , அந்த வயல்வெளியின் அருகேயுள்ள ‘பாற்கடலில்’ முத்தும் அமோகமாக விளைந்ததால் நெல் அறுவடைக்காலங்களிலும் முத்துக் குளிப்பு நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் தொழிலாளர்களும் வியாபாரிகளும் வந்து குவியும் இடமாக ஒரு காலத்தில் சிறந்திருந்தது ‘சிப்பித்திடல்’ முத்துக்குளிப்போர் ‘சிப்பிகளை’ இத்திடலுக்குக் கொண்டு வந்து சிப்பிகளை உடைத்து ‘முத்துக்களைத்’ தேடிப்பெற்றுக் கொண்டதாக அக்காலத்தில் இருந்த பெரியார்கள் கூறுவர். சிப்பிகள் அதிகமாக காணப்பட்ட இடம் ‘சிப்பித்திடல்’ என அழைக்கப்பட்டது.

Sunday, October 20, 2013

பவள விழா - புகைப்படங்கள் - 3

பழைய மாணவர் சங்கம் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

பவள விழா - புகைப்படங்கள்
பழைய மாணவர் சங்கம்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
(தேசிய பாடசாலை)
திருகோணமலை

பவள விழா - புகைப்படங்கள் - 2

பழைய மாணவர் சங்கம் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

பவள விழா - புகைப்படங்கள்
பழைய மாணவர் சங்கம்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
(தேசிய பாடசாலை)
திருகோணமலை

பவள விழா - புகைப்படங்கள் - 1

பழைய மாணவர் சங்கம் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

பவள விழா - புகைப்படங்கள்
பழைய மாணவர் சங்கம்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
(தேசிய பாடசாலை)
திருகோணமலை

Saturday, October 19, 2013

திரியாய் மயிலன் குளத்து வேளைக்காறரின் கல்வெட்டு

திருகோணமலை வரலாறு

ஸ்ரீ அபைய
லா மேகச் ச
க்கரவர்த்திகள்
ஸ்ரீ ஜயபா ஹூ தே
வர்க்கு யாண்டு ப
தின் எட்டாவது தம்
பால் ஜீவிதமுடைய
கணவதித் தண்டநாத
நார் உதுத்துறை விக்
கிரமசலாமேகர் நால்
படையையும் ஆஸ்ரி
த்து பேருமிட்டு விக்
கிரிம சலாமேகன்
பெரும் பள்ளி திருவே
ளைக்காறர் அபையம்

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
432 ம் பக்கம்

Tuesday, October 15, 2013

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான சாசனம்

திருகோணமலை வரலாறு

ஸ்ரீ பலவன் புதுக்கு
டி யான் ஆதித்தப்
பேரரையன் ஸ்தவ்யா
றாமய னா மானாவதிளானா
ட்டு வெல்க வேரான
ராஜராஜ பெரும்ளிக்கு
வைத்த னொந்தா வி
ளக்கு 1 பசு 8
4
இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
412  ம் பக்கம்

இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 4

இராஜராஜப் பெரும்பள்ளி

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தானம்

திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம்.

வெல்காமத்தில் இருந்த தமிழ் பௌத்த விகாரை முதலாம் இராஜராஜனது பெயரால் ராஜராஜப் பெரும்பள்ளி என்றும், வெல்காமத்தில் இருந்ததனால் வெல்காமப் பள்ளி ( இன்றைய வெல்கம் விகாரை )என்றும் அழைக்கப்பட்டது.இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை தானசாசனங்கள்.

Friday, October 11, 2013

பழைய மாணவர் சங்கத்தின் பவள விழா நிகழ்வுகள் 19.10.2013

 பழைய மாணவர் சங்கத்தின் பவள விழா நிகழ்வுகள் 19.10.2013

எமது பழைய மாணவுர் சங்கம் 1937ம் செயல்பட்டுக்கொண்டிருந்தமைக்கான ஆதாரத்தைக் பெற்றதன் மூலம் (1937 – 2012) அகவை எழுபத்தைந்தில் 2012ம் ஆண்டு இப்பவளவிழா நிகழ்வினை சிறப்புற கொண்டாட முடியாமல் போனதன் விளைவால் 2013ம் ஆண்டு இந்நிகழ்வினை சிறப்பாகவும் , அழகுறவும் நடாத்தி முடிப்பதற்கு எமது பழைய மாணவர் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

Wednesday, October 09, 2013

கர்நாடக சங்கீத கலைஞர் திரு.கணபதிப்பிள்ளை மகாலிங்கம்

கணபதிப்பிள்ளை மகாலிங்கம்

தம்பலகாமத்து இரட்டையர்கள் எனச்சிறப்பிக்கப்படும் கலைஞர்களில் ஒருவரான திரு.கணபதிப்பிள்ளை மகாலிங்கம்  தம்பலகாமம் கள்ளிமேட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சுதேச வைத்தியரும் அண்ணாவியாருமாகிய கந்தப்பர் கணபதிப்பிள்ளையின் இளையமகன். வாய்ப்பாட்டுக் கலைஞர். இவரது தமையனார் கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்களை முன்னரே நாம் அறிமுகம் செய்துள்ளோம்.

1941 ஆம் ஆண்டு பிறந்த இவர் தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் எட்டாந்தரம் வரை கல்வி பயின்றவர். 1967இல் விஐயலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மகாலெட்சுமி, சுகுமாரன் ,நாகராசன், ராதாலெட்சுமி, சத்தியலெட்சுமி ஆகிய ஐந்து பிள்ளைகள். இவர்களில் திரு.ம.நாகராசன் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞராக மிளிர்வது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 08, 2013

மெல்லிசைக் கலைஞர் திரு.கனகரத்தினம் (இ)லிங்கராசா

கனகரத்தினம் இலிங்கராசா

எண்ணூறு வருடகால வரலாற்றுப் பழமைமிக்க கள்ளி மேட்டில் கனகரத்தினம் காளிப்பிள்ளை தம்பதிகளுக்கு 1935ஆம் ஆண்டு மாசிமாதம் 16ஆந்திகதி மகனாகப் பிறந்தவர் தான் நமது மதிப்புக்குரிய மெல்லிசைக் கலைஞர் திரு.இலிங்கராசா அவர்கள்.

தமது பத்தாவது வயதில் 'மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில்' இவர் தனக்கு ஒப்பாரும், மிக்காருமின்றிச் சிறந்து விளங்கினார். 'கணீர் என்ற குரலில்' இவர் பாடுவதை அனைவரும் விரும்பிக் கேட்டனர். 'காவடிப்பாட்டுக்களைப் பாடுவதிலும் 'உடுக்கு' என்னும் இசைக்கருவியை இலாவகமாகக் கையாள்வதிலும் புலமை பெற்றிருந்தார்.

Saturday, October 05, 2013

தம்பலகாமம் கல்வெட்டு

திருகோணமலை வரலாறு
1..................................
2.................................
3................................
4.................................
5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ(ர்)
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
269 ம் பக்கம்

Friday, October 04, 2013

முறிவு வைத்தியர் கந்தன் இளையக்குட்டி பேச்சிமுத்து அவர்கள்


வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமத்தில் முன்மாரித்திடல் சிப்பித்திடல் என்னும் திடல்கள் மிகவும் செல்வாக்குப் பெற்ற திடல்களாக விளங்கின. குளக்கோட்டு மன்னனால் தம்பலகாமம் ஆதிகோணநாயகருக்கென உருவாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் கிராமதேவதைகளுக்குரிய வழிபாடுகளில் ஒன்றான 'வல்லிக்கண்ணருக்கான மடை வைபவம்' சிப்பித்திடலில் இடம்பெற்று வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

மாரிமுத்துச் சாஸ்திரியார் போன்ற புகழ்பெற்ற கலைஞரும் சின்னத்துரை அண்ணாவியாரும் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களேயாகும். முன்மாரித்திடலில் அமைந்துள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தமது ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொண்ட திரு.ஜெயசாகரன், திரு.ஜெயவர்ணன், திரு.ஜெயகாந்த் ஆகியோர் இன்று அரச வைத்தியர்களாக கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று  திரு.தி.தரணீதரன் 'சூரியன் வானொலியில் புகழ்பெற்ற அறிவிப்பாளராக' கடமையாற்றுவதையும்  இங்கே குறிப்பிடுவது சாலச்சிறந்தது.

Thursday, October 03, 2013

நிலாவெளி தான சாசனம்

திருகோணமலை வரலாறு

ஸ் (வஸ்தி ஸ்ரீ)…
சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு
க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி)
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்
ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம
ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து
க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க
ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல்
லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி
ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே
ஸ்வரரஷை

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
406 ம் பக்கம்

Wednesday, October 02, 2013

பலதுறைகளிலும் சாதனை படைத்த கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார்

கணபதிப்பிள்ளை அண்ணாவியார்

வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமத்தில் கள்ளிமேடு 'கடல்சூழ் இலங்கை கயபாகு மன்னன்' காலத்திலிருந்து மக்களால் பெரிதும் பேசப்பட்ட இடமாகும். இம் மன்னனின் ஏற்பாட்டில் கண்ணகியம்மன் விழா மிகச்சிறப்பாக ஆண்டுக்கொருமுறை கள்ளிமேட்டு 'வேள்வி வளாகத்தில்' நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

புகழ் பூத்த கலைஞர்களும் அண்ணாவிமார்களும் சுதேச வைத்தியர்களும் இந்தக் கள்ளிமேட்டைத் தாயகமாகக் கொண்டவர்களேயாகும். இவர்களில் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் மிகவும் பிரபலியமானவர். தனது தந்தையிடம் வைத்தியத் தொழிலை முறையாகக்கற்றுக் கொண்ட இவர் அந்தக் காலத்தில் சுதேச வைத்தியத்தில் மிகவும் பிரபலியம் பெற்றிருந்தார்.

இலங்கையில் 'தமிழ் பௌத்த தேரர்கள் ஆற்றிய பணிகள்' - பகுதி - 3

தமிழ் பௌத்த தேரர்கள்

பதி(பதவியா) நகரில் அமைந்த வேளைக்காற விகாரம் 

பண்டை நாட்களில் தமிழ் நகரமாக விளங்கிய பதி நகரமே  இன்று பதவியா என்றழைக்கப்படுகிறது. இங்கு பல சிவாலயங்கள் அமைந்திருந்தன. பல சமூகப்பிரிவுகளைக்கொண்டிருந்த வளர்ச்சிடைந்த பட்டினங்கள் இருந்தன. இவற்றில் ஒன்று ஐம்பொழில் பட்டினம்.

ஐம்பொழில் பட்டினம் வணிகர், பேரிளமையாளர், படைவீரர், கம்மாளர், அந்தணர் போன்ற பல சமூகப் பிரிவினர்களை கொண்டமைந்த ஒரு வீரபட்டினமாகும். இங்கு வேளைக்காறர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். பதவியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நூற்றாண்டிற்குரியதாகக் கருதப்படும் சமஸ்கிரத மொழிச் சாசனம் வேளைக்காற விகாரம் பற்றி விபரிக்கிறது.

Tuesday, October 01, 2013

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு


தமிழ் விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். கூட்டு முயற்சித் தன்னார்வத் திட்டமான இது 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. http://ta.wikipedia.org என்ற முகவரியில் இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவை நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் படிக்கிறார்கள். பல நாடுகளையும் துறைகளையும் சேர்ந்த 11 வயது முதல் 77 வயது வரையிலான பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் எழுதி வருகிறார்கள்.இன்று 935 பங்களிப்பாளர்களை எட்டியுள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ இரண்டு கோடி சொற்களைக் கொண்ட 55,881 கட்டுரைகள் உள்ளன.