Tuesday, June 30, 2009

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்


பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE என்னும் பதிவிற்கு மருத்துவர் RENUKA SRINIVASAN (UNIVERSITY OF EAST LONDON ) அவர்கள் எழுதிய மறுமொழியுடன் கூடிய உதவிக்குறிப்பு இங்கு பகிர்தலுக்காக பதிவாக்கப்பட்டுள்ளது.

Monday, June 29, 2009

திருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ணாப்பூபால வன்னிபம்


ஆதியில் வாயுதேவனால் பறித்து வீசப்பட்ட கைலைமலைச் சிகரங்களில் ஒன்றே திருக்கோணமலை என்பதை வரராமதேவ சோழன் அறிந்தான். இம் மன்னன் முக்கிய கட்டிடப் பொருள்களுடன் சோழநாட்டில் இருந்து திருக்கோணமலை வந்து, தங்கி, சுவாமி மலையில் கோணேஸ்வர ஆலயத்தை அமைத்து வழிபாடு நடைபெற எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு அரசன் நாடு திரும்பினான். அரசனின் குமாரன் குளக்கோட்டன் தந்தையைப் போல் தானும் சிவாலயங்களை அமைக்க வேண்டும் என்ற மேலான எண்ணமுடையவன்.

Sunday, June 28, 2009

தம்பன் கோட்டை தந்த குறுநாவல்


தம்பன் கோட்டை வரலாறு சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.

கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.

Thursday, June 25, 2009

பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE

இலங்கையில் வருடமொன்றுக்கு 600 க்கு மேற்பட்டோரைப் பலியெடுக்கும் ஒரு துர்நிகழ்வாக விசப்பாம்புக்கடி இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 11,000 மரணங்களும் , தெற்காசியாவில் 14,000 மரணங்களும் , உலகில் ஆண்டொன்றுக்கு 94,000 மரணங்களும் பாம்புக்கடியால் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Monday, June 22, 2009

கலங்குகின்றோம் கண்பாருங்கள்.....

இனிதே களிக்கும் முதுமைக் காலம்
இழந்து தவிக்கும் எங்கள் நிலை
கடைசி வரைக்கும் புரியுதில்லை
கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை

தனித்து விடப்பட்டவர்கள்....

எத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.

தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.

Friday, June 19, 2009

கலவரம் தரும் நிலவரம் - காசநோய்(TUBERCULOSIS )

இப்பதிவு பின்வரும் தலைப்புக்களிலான பதிவுகளின் தொடர்ச்சி

முறையான சிகிச்சை மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய காசநோயினால்

  • ஒவ்வொரு செக்கனும் உலகில் ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார்.(Infected with TB)
  • ஒவ்வொரு நான்கு செக்கனுக்கும் ஒருவர் உலகில் காசநோயாளியாகிறார்.(ACTIVE TB DISEASE)
  • ஒவ்வோரு 15 செக்கனுக்கும் ஒருவர் காசநோயினால் மரணமடைகிறார்.


Thursday, June 18, 2009

உதவும் வழி தெரியணும்.....

பசிக்கும் விழியோடு இந்தக்
குழந்தை பார்க்கையில் - உயிர்
கசக்கி மனம் அழுகிறதே
கொடுமை வறுமையே

Wednesday, June 17, 2009

கனவுதேசம்....


நிலவொளியில் நீயும், நானும்
சேர்ந்து நடக்கையில் - இது
கனவுதேசம் என்றலவோ
கருதத் தோன்றுது

காச நோயற்ற உலகு..

(இப்பதிவு காச நோய் - TUBERCULOSIS என்னும் பதிவின் தொடர்ச்சி...)

காசநோய் ஒரு மிகப் பழைய நோயாக இருப்பினும் , அது உலகம் முழுவதும் குறிப்பாக வளர்முக நாடுகளில் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

Monday, June 15, 2009

காச நோய் - TUBERCULOSIS

காசநோய்க்கிருமி தொற்றி நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் காசநோயாளிகளாக இனங்காணப்படுகின்றனர்.

நுரையிரலில் தொற்று இருப்பின் நுரையீரல் காசநோய் என்றும்,நிணநீர்க் கணுக்கள் , எலும்புகள் ,மூட்டுக்கள் ,இனப்பெருக்க ,சிறுநீர்க் கால்வாய் ,மூளை மென்சவ்வு ,உணவுக்கால்வாய், நுரையீரலைச் சுற்றியுள்ள சவ்வு என்பதில் ஒன்றைக் காசநோய்க் கிருமி பாதித்திருந்தால் அது நுரையீரல் அல்லாத காசநோயாக கருதப்படுகிறது.

Thursday, June 11, 2009

பைத்தியக்காரர்கள்.....


கனவெல்லாம் எரிந்து
சாம்பலாகிப்போன நாளொன்றில்
தெருவில் தனித்திருந்து
சிரித்துக் கொண்டிருந்தேன்

காச நோய் - சில உதவிக்குறிப்புக்கள்...


இப்பதிவு பற்றிய மேலதிக தகவல்களைப்பெற


காச நோய் - TUBERCULOSIS
காச நோயற்ற உலகு.
கலவரம் தரும் நிலவரம் - காசநோய் TUBERCULOSIS


தொடர்புகளுக்கு

The National Programme for Tuberculosis Control and Chest Diseases
Address:Public Health Complex
555/5, Elvitigala Mawatha
Narahenpita
Colombo 05
Sri Lanka
Telephone:(94) 011-2368276, 011-2368386
Facsimile:: (94)011-2368386


dnptccd@gmail.com
இணையம் -
http://203.94.76.60/TBWeb/index.htm


அண்மையில் NPTCCD, IMPA ,GFATM
என்பன இணைந்து நடாத்திய செயலமர்வில்
எனக்குக் கிடைத்த தகவல்களைப்
பகிர்ந்திருக்கிறேன்.

உங்களுக்கு காசநோய்த்தொற்று இருக்குமென
சந்தேகித்தால் நீங்களாகவே அருகிலுள்ள
காசநோய் சிகிச்சை நிலையத்துக்குச் சென்று
பரிசோதிக்கலாம்.

உங்களுக்கு காசநோய்ச் சிகிசைக்காக
வைத்தியசாலை செல்ல சங்கடமாக
இருந்தால் உங்கள் குடும்ப வைத்தியரிடம்
சிகிச்சை பெறலாம். உங்களுக்குரிய மருந்துகள்
இலவசமாக வழங்கப்படும்.

த.ஜீவராஜ்


Monday, June 01, 2009

ஞாபகச் சிதறல்கள்....(பாலர் வகுப்பறை)

இடிக்கப்படத் தயாராக இருக்கிறது அந்தப் பழைய கட்டடம். பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பல கட்டங்களில் இருந்து ஒதுங்கி தனித்திருக்கிறது அது.

பலமுறை அதனைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.மிகச் சிறிய வகுப்பறை. முதன் முறையாக எனக்குத் தெரிந்த வெளியுலகம் இவ்வளவு சிறியதாக இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.