Wednesday, April 24, 2024

திருகோணமலை தக்ஷிண கான சபா

 

திருகோணமலை தக்ஷிணகான சபாவில் இசை மற்றும் அறநெறி வகுப்புகள் மீள் ஆரம்பம் . 

திருகோணமலையில்  1947 ம் ஆண்டு இசைவள்ளல்  செல்வி பா.  இராஜராஜேஸ்வரி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு , ஏராளமான இசைக்கலைஞர்களை உருவாக்கிய   அம்மையாரின் இசைத்தொண்டால் உருவாகிய  கலைக்கோயில் தக்ஷிண கான சபா . 

Wednesday, April 17, 2024

கொரோனாவும் மஞ்சள் பையும் - சிறுகதை


கொரோனா கால வைத்தியசாலை நடைமுறைகள் ஒரு போர்க்கால நிலவரம்போல் காணப்பட்டது. தினமும் அதிகரித்துவரும் நோயாளிகளின் எண்ணிக்கை கொரோனா சிகிச்சைக்காக போராடும் மருத்துவத் துறையினரை ஓய்வில்லாமல் உழைக்கவைத்துக்கொண்டிருந்தது. நாடே கொரோனா அச்சத்தில் உறைந்திருந்ததினால் வீதிகளில் மருத்துவத் துறையினரையும், அத்தியாவசிய சேவைகள் புரியும் அலுவலர்களையும், காவல் துறையினரையும் தவிர்த்து மிக அரிதாகவே சாமானியர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

விசாகன் துடிப்பான இளைஞன். அவன் அரசு மருத்துவமனையில் வேலைக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறது. சிற்றூழியரான அவன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய கூடியவன் என்ற பெயரை வேலையில் இணைந்து கொண்ட சிறிது காலத்திற்குள்ளேயே பெற்றுக்கொண்டவன். அதனால் புதிதாகக் கொரோனா விடுதி உருவாக்கப்பட்டபோது அங்கு அவனை பணிக்கமர்த்திக் கொண்டார்கள்.

Friday, April 12, 2024

'கோணமாமலை 400'


கடந்த சில மாத காலமாக பல அன்புள்ளங்களின் துணையோடு முன்னெடுக்கப்பட்டு வந்த ஜீவநதியின் 'கோணமாமலை 400' விழிப்புணர்வு திட்டம் நிறைவுக்கு வருகிறது.

Monday, April 08, 2024

கோணமாமலை 400 - ( 1624 சித்திரை - 2024 சித்திரை )


ஜீவநதி வலைப்பதிவில் ‘கோணமாமலை 400’ என்ற காணொளிப் பதிவில் சொல்லப்பட்ட விடயங்களான…

Sunday, April 07, 2024

கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம் - ஓலைச்சுவடிகள் PDF

 

Royal Asiatic Society of Great Britain and Ireland இன் உடமையில் இருக்கும், கோணேசர் கல்வெட்டு மற்றும் தெட்சிண கைலாய புராணம் ஏட்டுத்தொகுகிகள் அண்மையில் இங்கிலாந்தில் வசிக்கும் திரு குணசிங்கம் டிவாஷன் அவர்களால்  எண்ணிமப்படுத்தப்பட்டு இருந்தது.

Thursday, April 04, 2024

கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம்


அமரர் இராம பிரசாந்த் அவர்களுடைய கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம் என்ற நூல் அண்மையில் வெளிவந்திருந்தது. இதனை அவரது தந்தை இரா மகேந்திரராஜா தொகுத்திருந்தார். பூபாலசிங்கம் புத்தகசாலை இந் நூலினை வெளியிட்டு இருந்தது.