Saturday, November 14, 2015

இலவச மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் - புகைப்படங்கள்


உலக பாரிசவாத விழிப்புணர்வு தினத்தினை (29.10.2015) முன்னிட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கினையும், இலவச மருத்துவ முகாமினையும் தம்பலகாமத்தில் நடாத்தும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. வைத்திய நிபுணர் DR..கனேய்க்கபாகு கருத்தரங்கினை தலைமையேற்றுச் செய்வதற்கான தனது விருப்பத்தினைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வு தொடர்பில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களை அணுகிய போது ஆர்வத்துடன் நிகழ்வு ஏற்பாட்டுப் பொறுப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அவரது நேரடி வழிகாட்டலில் தம்பலகாமம் பிரதேச செயலகம், தம்பலகாமம் வாழ்வின் எழுச்சித்திணைக்களம் (சமுர்த்தி) என்பன இணைந்து மேற்படி நிகழ்வினை 06.11.2015 அன்று திறம்பட நடாத்தினர்.

தம்பலகாமம் வாழ்வின் எழுச்சித் திட்ட முகாமையாளர் திரு.ஹிஸ்புல்லா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திரு.பற்றிக் அன்ரனி, திருகோணமலை கச்சேரியின் நிர்வாக உத்தியோகத்தர் திரு.நிரஞ்சன் என்பவர்களின் மேற்பார்வையில் தம்பலகாமம் பொற்கேணி கிராம, சமுர்த்தி,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இந்நிகழ்வுக்கான ஒழுங்கினைச் செய்திருந்தார்கள்.


நிகழ்வு இடம்பெறுவதற்குத் தேவையான மண்டபத்தையும், தளபாடங்களையும் தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய அதிபர் திரு.இலங்கேஸ்வரன் வழங்கியிருந்தார்.



பாரிசவாதமும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகளும்என்ற தலைப்பில் DR..கனேய்க்கபாகு (வைத்திய நிபுணர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) விழிப்புணர்வுக் கருத்தரங்கினைப் படவிளக்கங்களுடன் தொடங்கி வைத்தார்.

அவரது உரையின் முடிவில் பயனாளிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. வைத்திய நிபுணர்களின் உரையின் பின்னர் தன்வந்தரி (தனியார்) வைத்தியசாலையினால் வெளியிடப்பட்ட பாரிசவாத விழிப்புணர்வு தொடர்புடைய துண்டுப்பிரசுரம் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

கருத்தரங்கின் முடிவில் வைத்திய நிபுணரும்DR..சாம்பவி மற்றும் தன்வந்தரி (தனியார்) வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவரும் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இதன்போது தேவையானவர்களுக்கு சலப்பரிசோதனையும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருகோணமலைப் பொது வைத்தியசாலையின் பல பிரிவுகளை ஒருங்கிணைத்துத் தந்தவர் Elderly Care Friendly Clinic  இன் வைத்தியர் DR. பிரதீபா கஜேந்திரன் அவர்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கான உணவுப் பழக்கவழக்கங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பின்னர் அவரும் அவருடன் வருகை தந்திருந்த மருத்துவ தாதி செல்வி.மா.இராசலெட்சுமியும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.



கருத்தரங்கின் இறுதி உரை திருகோணமலைப் பொது வைத்தியசாலையிலிருந்து வருகை தந்திருந்த இயன் மருத்துவப்பிரிவைச் சேர்ந்த திரு.முசாமில் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பாரிசவாத்தின் பின்னரான புனர்வாழ்வுஎன்ற தலைப்பில் உரையாற்றிய அவர் பயனாளர்கள் செயன்முறை அப்பியாசங்களை பொது வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தார்.


கருத்தரங்கினைத் தொடர்ந்து இடம் பெற்ற இலவச மருத்துவ முகாமிற்கான மருந்து வசதிகளை பொது வைத்தியசாலையின் மார்பு சிகிச்சைப்பிரிவு வழங்கியிருந்தது. அப்பிரிவின் பொறுப்பதிகாரி DR..சுரேஸ்குமார் (DTCO) திருமதி.மற்றில்டா (மருந்துக் கலவையாளர்), திரு.சிவகுமார் (சுகாதாரப் பரிசோதகர்) மற்றும்  அவர்களுடன் வருகை தந்திருந்த திரு.சமீர, திரு.திசாநாயக்க ஆகியோர் மருத்துவ முகாமில் இணைந்து அது சிறப்புடன் நடைபெற உதவினர்.


இலவச மருத்துவ முகாம் தொடர்பில் அறிந்து கொண்டதும் தானாக முன்வந்து உதவிய நண்பன் திரு.சக்திமயூரன்(மருந்தாளர்) தனது Capital Pharma Corner மருந்தகம் ஊடாக அரச வழங்களுக்கு ஊடாக கிடைக்கப்பெறாத மருந்துகளைத் தந்துதவினார்.


நீண்ட நாட்களாக இவ்வாறானவொரு சந்தர்பத்தினை எதிர்பார்த்திருந்த நண்பர் திரு.இ.அசோக் (மருந்தாளர் திருகோணமலை பொதுவைத்தியசாலை) அவர்கள் மருத்துவ முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மருந்து வழங்குவதில் உதவி புரிந்தார்.


St.Joseph’s Health Centre (Holy Cross)  இன் மருத்துவ உதவியாளர்களான செல்வி.நி.நந்தினி, செல்வி.நிலானிதனுஜா இருவரும் அருட்சகோதரி யோ.லுசியா அவர்களின் பணிப்பின் பெயரில் மருந்துவழங்குவதில் உதவியாளராக செயற்பட்டனர். அத்துடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குருதியில் சீனியின் அளவினைப் பார்ப்பதற்கும் உதவினர். 

Dr.விக்னராஜா (ஆரம்ப சுகாதார நிலையம் - மணற்சேனை) மருத்துவ உபகரணங்களைத் தந்துதவியதுடன் மருத்துவ முகாம் ஒழுங்காக நடைபெறவும் உதவினார். Dr.ரோமன் ஜெபரட்ணம் (தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை) மருத்துவ முகாமில் கலந்து கொண்டதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர் தொடர்பிலும் வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டார்.


இலவச மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் - புகைப்படங்கள்

 

நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக கடுமையான மழை பெய்த போதும் இலவச மருத்துவ முகாமின் பதிவுகளின்படி 240க்கும் மேற்பட்ட பயனாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்ததாக அறிய முடிந்தது. அரச, தனியார் நிறுவனங்களின் தன்னார்வ இணைவினால் விழிப்புணர்வு கருத்தரங்கும், மருத்துவ முகாமும் சிறப்புற நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Dr.த.ஜீவராஜ்
(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. பயன்தரும்
    இவ்வாறான எழுச்சித் திட்டங்கள்
    தொடரவேண்டும்
    தொண்டாற்றியவர்களைப் பாராட்டுவோம்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    கலந்து கொள்ளா விட்டாலும் நேரில் பார்த்தது போல உணர்வு... இப்படியான பணி தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete