Thursday, November 19, 2009

இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை
(இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை)(கல்வெட்டுக்கள்)

(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)


(நீர்த் தொட்டி)

(மருத்துவத் தொட்டி)

திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை. இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.

திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.


'மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.' என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், 'சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்' என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.

வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

7 comments:

 1. நல்ல வரலாறு சொல்லும் படைப்பு

  ReplyDelete
 2. அருமையாக இருக்கிறது தோழரே

  ReplyDelete
 3. தமிழ் பௌத்தர்கள் இருந்ததற்கான சான்று. புராதன கோவில், அபூர்வமான படங்கள்.
  இதை வெல்கம் விகாரை என்பதன்
  காரணம் என்ன?

  ReplyDelete
 4. அருமையான நிர்மாணங்கள்...
  அழகான படப்பிடிப்புகள்...
  பகிர்விற்கு மிக்க நன்றிகள்....

  ReplyDelete
 5. எஸ்.சத்யதேவன்Nov 20, 2009, 10:53:00 AM

  மிக்க நன்றி அண்ணா பயனுள்ள வராலற்றுத் தகவல். இது தமிழ் பெளத்தர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும் என முன்பு ஊகித்தேன் ஆயினும அது வெறும் ஓகமாக மட்டும்தான் இரந்தது. இப்போது ஓரளவு உறுதிசெய்யக்கூடியதாக இருக்கிறது. தவிர மகாசேனன் சிங்கள பெளத்தமாக மாறிய தேரவாத பெளத்தத்தை சேர்நதவனல்ல. அவன் மகாயன பெளத்தத்தை சேர்நதவன் அவனின் ஆசரியர் தமிழ் பெளத்த பிட்சு இதனாலேயே தேரவாத பெளத்தா அவனை எதிர்த்தனர் இதன் காரணமாகவே இலங்கை வராலற்று நூல்கள் மகாசேனனுக்கு பெரிய முக்கியத்துவம் வழங்கவில்லை. ஆகவே தமிழகத்தில் நிலைகொண்டிருந் மகாயன பெளத்த பிச்சுகளுக்காக இது அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது சரியான ஊகம் தான்

  சோழர்காலத்தில் சைவ மதம் நிலைநிறுத்தப்பட்டு நிறுவன மாகிவிட்டது. எனவே இது ராசராசப் பெரும்பள்ளி என அழைக்கப்பட்டாலும் அவர்களால் நிர்மானிக்ப்பட்டிருக்க முடியாது என்பதும் சரியானது.

  மிக முக்கிய தகவல்க்ள அண்ணா தொடரட்டுமு் உங்கள் முயற்சிகள்

  வாழ்த்துக்களுடன்
  ஏஸ்.சத்யதேவன்

  ReplyDelete
 6. படங்களுடன் சிறப்பாக இருக்கின்றது

  ReplyDelete
 7. மிகவும் சிறப்பான படங்களுடன் கூடிய ஆவணம்.
  ஆவணப்படுத்தலின் அவசியம் முன்னரை விட இப்போது அதிகரித்திருக்கும் இக்காலப்பகுதியில் உங்களது பதிவு அற்புதமானது.
  பணி தொடர வாழ்த்துகள் நண்பனே!

  ReplyDelete