Wednesday, August 05, 2015

தம்பலகாமத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச கருத்தரங்குகள் - புகைப்படங்கள்


நாடளாவியரீதியில் நடத்தப்படும் பரீட்சைகள் நெருங்கி வரும் போது நகர்ப்புறங்களில் கருத்தரங்குகள் பல இடம்பெறுவது வழமை. இந்த வாய்ப்புகள் கிராப்புறங்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது. எனவே இம்முறை 2015 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தம்பலகாமத்தில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கினை  செய்வதற்கான முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

நண்பன் திரு.அ.செல்வேந்திரன் உதவியால் திருகோணமலை குணா கல்வி நிலையம், திருகோணமலை ACA கல்வி நிறுவனம் என்பன  இலவச கருத்தரங்கை ஒழுங்கு செய்துதர  ஆர்வத்துடன் முன்வந்தன.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்கு நடாத்துவதற்கான அனுமதி பெறுதல் , இடஒழுங்கமைப்பு (தம்பலகாமம் சாரதா வித்தியாலயம்), மாணவர்களுக்கான ஒழுங்குகள் என்பனவற்றை தம்பலகாம பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களின் வழிநடத்துதலில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திரு.குணபாலா, திரு.விஜேந்திரன், திரு.சிவபாலன், திரு.வசந்தன் ஆகியோருடன் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயப் பழைய மாணவர் சங்கத்தினைச் சேர்ந்த திரு.யாழினியன், திரு.கஜன், திரு.ருபேசன், திரு.காண்டீபன், திரு.பிரதூபன் ஆகியோரும் இணைந்து கருத்தரங்கு சிறப்புற நடைபெற உறுதுணை புரிந்தனர்.

முதலாம் நாள் கருத்தரங்கு
காலம் - 19.07.2015 காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை
இடம் - தம்பலகாமம் சாரதா வித்தியாலயம்
முதலாம் நாள்  கருத்தரங்கு குணா கல்வி நிலையத்தினால் திரு.அ.செல்வேந்திரன் ஒழுங்கமைப்பில் திரு.கிருஷ்ணகாந், திரு. சுரேந்திரன் வழிநடத்தலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்குரிய அனுசரணையினை தம்பலகாமம்  பட்டிமேட்டைச் சேர்ந்த திருமதி. வினோதினி சுரேஸ் அவர்கள் வழங்கி இருந்தார்கள்.





இரண்டாம் நாள் கருத்தரங்கு
காலம் - 26.07.2015 காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை
இடம் - தம்பலகாமம் சாரதா வித்தியாலயம்

இரண்டாம் நாள்  கருத்தரங்கு ACA கல்வி  நிலையத்தினால் திரு.வ.ஜெகதாஸ் ஒழுங்கமைப்பில் திரு சுகிதரன் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்குரிய அனுசரணையினை திருகோணமலை ACA நிறுவனத்தினர் வழங்கி இருந்தார்கள்.


இக்கருத்தரகுகளில் 60 தொடக்கம் 70 வரையான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment