Friday, May 15, 2009

அழிவின் விளிம்பில் இன்னொரு இனம்


திருகோணமலை நகரத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் இன்னொரு இனம் இந்த மானினம். இவர்களது பூர்வீகம் கிழேயுள்ள படத்தில் தெரியும் கோணமலை.(திருக்கோணேச்சரம் இருக்கும் கோணமலை)

கோணமலையின் இயற்கை அன்னையின் அரவணைப்பில் இருந்த இம் மானினங்கள் எங்களது பாடசாலைக்காலங்களில் கோணமலையில் இருந்து ஊருக்குள் உலாவ வந்து, மாணவர்களுடன் சேர்ந்து ஓடிப்பிடித்து மகிழ்ந்திருந்து விட்டு திரும்பிச்செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தன.

பின்னர் கோணமலைப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவை மெல்ல மெல்ல இடம்பெயரத்தொடங்கின. நகரப்பகுதியில் அவற்றுக்கு தேவையான உணவுகள் கிடைக்காததைத் தொடர்ந்து பயணிகளால் வீசப்பட்ட பொலித்தின் பைகளையும்,அழுகிய பொருட்களையும் உண்ணத் தலைப்பட்டு நோய்வாய்ப்பட்டு குறுகிய காலத்திற்குள் பெருமளவில் இறந்துபோயின.


இப்போது எஞ்சி இருக்கும் மான்களை திருமலை நகர மைதானப்பகுதியிலும், பேரூந்து தரிப்பிடம், பொதுச்சந்தைப்பகுதிகளிலும் காணலாம். ஒழுங்கான பராமரிப்புக்கு உள்ளாகாத இம்மான்கள் பற்றிய தரவுகளும் எந்தளவிற்கு இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் இதே நிலை இன்னும் சிறிது காலத்துக்கு நீடிக்குமானால் இம்மானினம் முற்றாக அழிந்து போய்விடும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

உயிர்களின் மீளமுடியாத இழப்புக்கள் காலவோட்டத்தால் சீர்செய்யப்பட முடியாதவை என்ற உண்மை புரியப்படாமலே இருப்பது கவலை தருவதாக இருக்கிறது.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

12 comments:

 1. பல அபூர்வ வகை விலங்கினங்கள் இது மாதிரியான சுற்றுச் சூழல் காரணமாக அழிந்து வருவது வருந்தத்தக்கது. வருங்கால சந்ததியினருக்கு இவற்றைப் படங்களில்தான் காட்ட முடியும் போலிருக்கிறது:(!

  ReplyDelete
 2. உண்மைதான் காக்கப் பட வேண்டிய ஒரு இனம் தான்...
  இவை இன்று காக்கப் படாவிட்டால் பாடப்புத்தகங்களில் மட்டுமே இவற்றைக் காணமுடியும்.

  ReplyDelete
 3. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

  ReplyDelete
 4. அழிந்து வரும் அழகிய இன்னோர் இனம் என்பது உண்மை தான். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் இவற்றைக் கொல்ல முடியாது. இருந்த போதிலும் தோலிற்காகவும், கொம்புகளிற்காகவும், உண்ண உணவாகவும் இவை கொல்லப்படுகின்றன என்பதையும் மறுக்க முடியாது. சட்டமும் ஒழுங்கும் எங்கே கண்ணை மூடித் தூங்குகிறதோ அங்கெல்லாம் இது போன்ற இனஅழிப்புகள் தவிர்க்க முடியாததே!

  ReplyDelete
 5. நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

  ReplyDelete
 6. நன்றி Renuka Srinivasan அவர்களே

  ReplyDelete
 7. உங்க நாட்டில் இனத்தை அழிப்பதென்பது ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அல்ல.

  ReplyDelete
 8. உண்மைதான் ஜுர்கேன் க்ருகேர்.....

  ReplyDelete
 9. ஆயுதக் கலாசாரம் கோலோச்சிய எம் மண்ணில் அழகிய மானினம் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

  காட்டை விட்டு தெருவுக்கு வனவிலங்குகள் வருவதற்குக் காரணம் அவற்றுக்கான உணவுகளும், சீதோஷ்ணநிலையும் கிடைக்காமையே ஆகும்.

  திருமலையை ஒத்த அழகிய நகரான இந்தியாவின் ஏழுமலையான் குடி கொள்ளும் திருப்பதி மண்ணில் அருகி வரும் மானினங்களைப் பாதுகாக்க பாரிய முல்லை நிலப்பரப்பரப்பில் அழகிய சரணாலயம் அமைத்து, சுற்றிவர கம்பி வேலியிட்டு, உள்ளே அவற்றுக்குரிய உணவுகளையிட்டு பாதுகாத்து வருகின்றார்கள்.

  இதே போன்று திருகோணமலை மாநகர சபையும் முன்வந்து சரணாலயம் அமைத்து அருகி வரும் அழகிய மானினங்களைப் பாதுக்க வேண்டியது அவசியமாகும்.

  கிழக்கு முதலமைச்சர் கவனத்தில் கொள்வாரா?

  ReplyDelete