Tuesday, May 05, 2009

வரலாறு அறியுமா?


அந்தப்பக்கம் இத்தனை
இந்தப்பக்கம் இத்தனை
என்று எழுதும் வரலாறு
என்றேனும் அறியுமா?
இறந்தவனை இழந்தவன்
இறுதிவரை படும் துயரம்

கணநொடியில் மரித்திடாத
கையிழந்த, கால் இழந்த
மெய்யெல்லாம் புண்சுமந்த
விதியழைக்கும் வேளைவரை
வேதனையில் உழலுகின்ற என்
உறவு்களை யாரறிவார்

கையிழந்ததறியாது தானே
சோறுண்ண அடம்பிடிக்கும்
பிள்ளைதனைப் பார்க்கையிலே நெஞ்சு
பீறிட்டு வெடிக்கிறது
சொல்லவந்த வார்த்தைகள்
சிக்கித் தவிக்கிறது

எத்தனையோ எழுதமனம்
ஏங்கித் துடிக்கிறது
அத்தனையும் வீணே என்று
அலுத்து முடிக்கிறது
வரலாறு மட்டுமிங்கே
மரணங்களால் நிறைகிறது....



 த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

10 comments:

  1. அருமையான படைப்பு...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நன்றி கவிக்கிழவன்

    ReplyDelete
  3. Renuka SrinivasanMay 5, 2009, 5:41:00 AM

    வேதனையை வெளிப்படுத்தியுள்ள விதம் அருமை. எனினும் அதனில் பொதிந்துள்ள கருத்து மனதை மிகவும் பாதிக்கிறது. இறந்தவர்களை விட இவ்வாறு இருப்பவர்களின் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வரலாறு மட்டுமல்ல நிகழ்காலம் கூட முழுதாக அறியாது என்பதே உண்மை.

    ReplyDelete
  4. அருமையான படைப்பு சிறு திருத்தம் சொல் வார்த்தை இரண்டும் ஒன்று தான் .சொல் இழந்த வரிகள் என இருத்தல் நலம்.

    ReplyDelete
  5. நன்றி Renuka Srinivasan

    ReplyDelete
  6. நன்றி சுட்டிக்காட்டியமைக்கு baghyalakshmi அவர்களே
    சொல்லவந்த வார்த்தைகள்
    சிக்கித் தவிக்கிறது
    என்று மாற்றி இருக்கிறேன்.

    ReplyDelete
  7. கையிழந்ததறியாது தானே
    சோறுண்ண அடம்பிடிக்கும்
    பிள்ளைதனைப் பார்க்கையிலே நெஞ்சு
    பீறிட்டு வெடிக்கிறது
    சொல்லவந்த வார்த்தைகள்
    சிக்கித் தவிக்கிறது

    valiyudan kudiya kavithai anna

    ReplyDelete
  8. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


    தமிழர்ஸின் சேவைகள்

    இவ்வார தமிழர்

    நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

    இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

    இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

    இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

    சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

    Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

    இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
    உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

    நன்றி
    உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
    தமிழர்ஸ்
    தமிழர்ஸ் பிளாக்

    ReplyDelete
  9. கவிதை கனக்கிறது. வார்த்தைகளில் மனதினை ஆற்றிக் கொள்ள இயலாத வலி புரிகிறது.

    ReplyDelete