Thursday, October 11, 2012

உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம் - புகைப்படங்கள்

உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்

திருகோணமலைப் பட்டணத்திலிருந்து சுமார் நாலு கிலோமீற்றர் தூரத்தில் நிலாவெளிக்குச் செல்லும் பாதையில் உப்புவெளிக் கிராம எல்லையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் அமைந்துள்ள இடம் ‘சோலையடி’ என அழைக்கப்படுவதால் இவ்வாலயம் சோலை வைரவர் ஆலயம் என அழைக்கப்படுகிறது.
பழமையில் இங்கு திரௌபதை அம்மன் சடங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்ததாக ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செல்லும் பாரதக்கதை படிக்கப்பட்டு அதற்குரிய பூசைகள் வழிபாட்டுச் சடங்குகள் நடைபெற்று வந்ததாக இங்குள்ள முதியவர்கள் கூறுகின்றனர்.

திருகோணமலையிலுள்ள கோணேசர் கோயிலுக்கு எல்லைக் காவல் தெய்வமாக இருந்து வந்த இந்த ஆலயம் குளக்கோட்டன் காலத்திருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது. இக்கோயிலின் மூலமூர்த்தியாகிய வைரவர் அருள் நிறைந்தவராக மக்களைக் காத்தருளும் தெய்வமாக இப்பகுதியில் வாழும் மக்களால் போற்றப்படுகிறார்.

உப்புவெளி கிராமச்சபையின் தலைவராகக் கடமையாற்றிய திரு.சி.கதிர்காமத்தம்பி அவர்கள் வைரவர் மீது வைத்திருந்த அளவுகடந்த பக்தியினால் இந்த ஆலயத்தைக் கற்கோயிலாகக் கட்டுவதற்கு முயற்சிகளை மேற் கொண்டார். முன்பிருந்த மண் கோயில் சிறிய கற்கோயிலாக மாறியது. கற்பக்கிரகம் அர்த்தமண்டபம் மகாமண்டபம் வசந்த மண்டபம் என்பவற்றைக் கொண்ட கோயிலாக 1975ஆம் ஆண்டு சிறப்பாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

1982இல் திரு.மாணிக்கம் குமாரசாமி அவர்களும்,  அவருக்குப் பின் திரு நடராசா சத்தியமூர்த்தி அவர்கள் 1985.07.10 ஆந் திகதி முதல் இற்றைவரை ஆலய ஆதீனகர்த்தாவாகவும் செயலாற்றி வருகிறார். 1986இல் ஏற்பட்ட அசௌகரியங்களுக்குப் பிறகு ஆலயத்தை புனரமைத்து 2009இல் கும்பாவிஷேகத்தை சிறப்பாக நடத்தினார்.

வைரவ மூர்த்தி சிவபெருமானுடைய ஒரு திருமூர்த்தமாகவும் அவருடைய திருக்குமாரர்களில் ஒருவராகவும் ஆகமங்கள் கூறுகின்றன. இவ்வாலயத்தில் பத்து நாட்கள் அலங்காரத் திருவிழாக்களும் , சித்திரைப்பரணி , நவராத்திரி ,திருவெம்பாவை என்பனவும் நடைபெறுகின்றன.

2010 இல் இருந்து இவ்வாலயத்தில் அறநெறிப்பாடசாலை ஒன்று  ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்

உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்

வே.தங்கராசா
ஊசாத்துணை
அருள்மிகு சோலை வைரவர் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் 2012.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

8 comments:

 1. பொதுவாக வைரவர் கோவில் பெரிய கோவில்களாக அமைவதில்லை.
  யாழ் கொக்குவில் தலையாழி வைரவர் கோவில் உள்வீதி வெளிவீதியுடைய பெரிய கோவில், வடமாகாணத்தில் பெரிய கோவிலெனக் கூறக் கேட்டுள்ளேன். இச் சோலை வைரவரும் பெரிய கோவிலாக உள்ளது.
  விபரத்துக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி யோகன் பாரிஸ் அவர்களே. நீங்கள் குறிப்பிடுவதுபோல இக்கோவிலும் சிறிய கோவிலாகத்தான் இருந்தது. இக்கோயிலின் தர்மகத்தா சபையினரின் அயராத முயற்சி காரணமாக இக்கோயில் பெரிய கோயிலாக மாறி வருகிறது.

   Delete
 2. மிகவும் அருமையான படங்கள்...

  பகிர்வுக்கு நன்றிங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே

   Delete
 3. நண்பரே,

  தமிழ்நாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்குத் திரிகோணமலை ஆலயத்தின் தரிசனம் தந்ததற்கு மிக்க நன்றி.

  ஸ்ரீ....

  ReplyDelete
 4. எத்தனையோ முறை இந்தக் கோவிலைக் கடந்து சென்றிருக்கிறேன். விபரங்கள் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete