Saturday, October 27, 2018

இலண்டனில் இருந்து HOPE ற்கான உதவிகள் - புகைப்படங்கள்


உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 1500 முதல் 1800 விசேட தேவையுள்ள குழந்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 150 முதல் 200 பேர்வரை அரச பாடசாலைகளில் அவர்களுக்குரிய விசேடவகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம்  HOPE  ஆகும்.

2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்றுவரை சுமார் 30 குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டு இருக்கின்றனர். வழமையான வகுப்புகளுக்கு சுமார் 18 முதல் 24 பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.

பெற்றோரின் வறுமைநிலை, பிள்ளைகளை வகுப்புகளுக்கு கொண்டு வருவதிலுள்ள போக்குவரத்துப் பிரச்சனைகள், விசேட கல்வி முறை தொடர்பில் போதிய விழிப்புணர்வு இன்மை போன்ற காரணங்களால் சுமார் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இத்தகைய வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

விசேட தேவையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களின் நிதிப் பங்களிப்பிலும், சில நன்கொடையாளர்களின் உதவி மூலமும் செயற்பட்டுவரும் இந்நிறுவனம்   கல்விச் செயற்பாடுகளுக்கான உபகரணங்களின் தேவை குறித்து அதன் இயக்குனர் திரு.கிருபாகரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இவ்வேண்டுகோள் தொடர்பாக ஜீவநதியிலும், தனிப்பட்டரீதியிலும் பலரிடம் எம்மால் உதவிகோரப்பட்டிருந்தது.

பார்க்க விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்

இதற்கமைய HOPE நிறுவனத்தில் கல்விபயிலும் விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு உதவ இலண்டனில் வசிக்கும் திரு. இரட்ணதீபன் அவர்களும் அவரது நண்பர்களும் முன்வந்தனர். “Friends of Trincomalee HinduCollege Old Student Association (UK)” from UK என்ற இணைவின் ஊடாக

1. M.Mathiyalakan 
2. Vijendran
3. K.Mukunthakumar
4. S.Ratnatheepan
5. S.Lingeswaran
6. B. Sureshan
7. M.Visakesan
8. A. Sutharson
9. T.Jathese N Bahu
10. S.Gangatharan
11. T.Siam N Bahu
12. S.Pradeepkumar
13. P.Jegan Amarnath
14. R.Raja Bahirathan
15. T.Raj mohan

பதினைந்து அன்பர்கள் இணைந்து வழங்கிய மூன்று இலட்சம் பெறுமதியான நிர்வாக உபகரணங்கள் முதற்கட்டமாக கார்த்திகை 2017 இல் HOPE நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.


மேற்படி உதவி கிடைக்கும்வரை தற்காலிகமாக இயங்கிய கட்டடங்களில் கிடைக்கப்பெற்ற அலுவலக தளபாடங்களையே HOPE நிறுவனம் பயன்படுத்தி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இலண்டன்வாழ் ஆர்வலர்கள் சிலரது முயற்சியால்  “Friends of Trincomalee HinduCollege Old Student Association (UK)” from UK என்ற இணைவின் ஊடாக

1. M. Mathialagan 
2. A Sutharson 
3. K Mukunthakumar 
4. S Lingeswaran 
5. S Prabaharan 
6. B Sureshan 
7. T Rajmohan 
8. P Jegan Amarnath 
9. G Pragash 
10. M Balaskanther 
11. S Ratnatheepan 
12. Nathan Cheliyan

பன்னிரண்டு அன்பர்கள் இணைந்து வழங்கிய 75,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இரண்டாம் கட்டமாக இல் HOPE நிறுவனத்திடம் திரு.பத்மநாதன் அவர்களால் 24.10.2018 அன்று கையளிக்கப்பட்டது. 



விசேட தேவையுள்ள குழந்தைகளின் பராமரிப்பு என்பது வார்த்தைகளின் விபரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. அதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களால் மட்டுமே முழுமையாகப்  புரிந்துகொள்ளமுடியும்.

விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கான உதவிகள் சமூகசேவை அல்ல அது நம் ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தேவையணர்ந்து உதவிய “Friends of Trincomalee HinduCollege Old Student Association (UK)” from UK நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எமது மனம்நிறைந்த நன்றிகள்.




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment