Friday, May 04, 2018

சந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள்


திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில் தரம் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 86 பிள்ளைகள் கல்விகற்கும் இப்பாடசாலையில் இம்முறை 23 மாணவர்கள் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கிறார்கள். இவர்களது அடைவுமட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனேயே இவ்விசேட வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.


இவ்விசேட வகுப்புக்களை ஒழுங்கு செய்வதற்குரிய முழுமையான அனுசரனையினை ஓம் சரவணபாபா தர்ம அறக்கட்டளை (இந்தியா) சார்பாக திருகோணமலை இ.கி.ச கோனேஸ்வரா இந்துக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் தற்போது இலண்டனில் வசிப்பவருமாகிய திரு.மு. நந்தபாலன் அவர்கள் வழங்கி இருந்தார்.


இவ்வுதவி தொடர்பாக பாடசாலை சமூகம் சார்பாக நன்றிக்கடிதத்தினை பாடசாலை அதிபர் திரு. ரதிசீலன் அவர்கள் நன்கொடையாளருக்கு வழங்கிவைத்தார்.



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

    ReplyDelete
  2. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

    ReplyDelete