Saturday, October 11, 2008

இது இறுதி அழைப்பு


உன்நினைவலைகள்
ஒன்றோடொன்று
உரசிக்கொண்டதில்
என் நெஞ்சுக்குள்
தீப்பிடித்துக்கொண்டது


எதற்காகவோ வந்த
இனக்கலவரத்தில்
எரிந்துபோன எங்கள் வீடுபோல்
இப்போதெல்லாம் என்
இதயவறைச் சுவர்கள்
கரியவறைகளாகவே
காட்சியளிக்கின்றன

அன்பே உன் கண்களென்ன
அமெரிக்காவின் ஆயுதக்கப்பலா?
ஒரு நொடி நீ
உற்றுப்பார்த்ததில்
ஓராயிரம் ஏவுகணைகள்
என் இதயத்தில்

கொஞ்சும் மொழியும்
குழிவிழும் கன்னத்தோடு வரும்
குறுநகையும் உன்
குங்கும இதழ்களில் இருந்து
இடம் பெயர்கையில் நான்
என்னையறியாமலேயே
அனைத்திலும் இருந்து அன்னியப்பட்டு
'அகதி'யாய்ப் போகிறேன்

உன் ஒவ்வொரு அசைவுகளுமெனை
உருக்குலைய வைக்கின்றன இந்த
கொடுமை தாங்காதுதானே
கோயிலுக்குள் தஞ்சமானேன் அங்கும் நீ
குண்டெறிவாய் எனநான்
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை
இப்போதுபார் என்
இதயத்துக் கூரைபிளந்து
உள்ளுக்குள் குற்றுயிராய்
உன்னைப்பற்றிய நினைவுகள்


என்னுள்ளத்தைப்
பொறுத்தமட்டில்
வனிதையே – நீ
வந்தேறு குடிதான் - நான்
இலங்கைத் தமிழர் போல்
இங்கேயே இருந்தவன்
என்னபயனின்று
நீ – ஆளும் அரசி
நான் அனாதரவான அடிமை

சுயநிர்ணய உரிமைகொடு
அல்லதென்னைச்
சும்மாவாவது இருக்கவிடு

இல்லையெனில்

இறுதியாய்க் கேட்கிறேன்
புறப்பட்டுவா - இருவருமோர்
புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வோம்
இல்லறமெனும் இறமைக்குள்

த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. Superp Jeenan I hope ur Iruthi Alaippu will reach where ever it has to go. thodarnthu Eluthunga
    Nila

    ReplyDelete
  2. எனக்கும் என் ஆரம்ப கால கற்பனைகளின் நினைவுகளை கொடுத்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  3. நன்றி தமிழன்..

    ReplyDelete
  4. தலைப்பைப் பார்த்த கணம்....தங்கள் மற்றொரு முகத்தையும் எண்ணி ஆனந்தித்த என்னை , மாற்றி ....
    பள்ளி நாட்களை , குசியுடன் திரிந்த அந்த நாட்களை எண்ண வைத்துவிட்டீர்கள் போங்கள்...
    எங்கள் முற்றத்து வேப்ப மரத்தடியில் வளர்ந்த, வளர்த்த உறவுகளை ,
    உறவுகளுடன் திரிந்த எங்கள் நாட்களை ...
    அந்தப் பசுமை மிகுந்த வசந்தகாலங்களை ...
    எங்கள் அதே பழைய உறவுகளுடன் மிகுதியாகவுள்ள கட்டம் கட்டமாக உள்ள வாழ்க்கைக்காலங்களை நாசமாக்கிய......யாரோ......எவரோ...


    தங்களிடம் அது சார்ந்த படைப்புகளை மிகுதியாக எதிபார்க்கும் ஒரு ஜீவன்..
    அவ் ஜீவன் நாங்கள் காலாறிய எங்கள் கோணச்வர கடற்கரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐவராகவும் இருக்கலாம் ...அல்லது அந்த பதினேள்வராயும் இருக்கலாம்... அல்லது எங்கள் மயுரனாயும் இருக்கலாம்....இன்னும் பல நூறாயும் இருக்கலாம்....அல்லவா?

    ReplyDelete
  5. பள்ளி நாட்களை , குசியுடன் திரிந்த அந்த நாட்களை எண்ண வைத்துவிட்டீர்கள் போங்கள்...

    நன்றி தூவானம்

    ReplyDelete