எனது வாழ்க்கையில் எப்பொழுதும் நெடுந்தூரப் பயணங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்து விடுவது வழக்கம். திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கான வவுனியா ஊடான இருநூற்று நாற்பது கிலோமீற்றர் தூரப்பயணம் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வினை மனதில் பதித்துச் சென்றிருக்கிறது. அவ்வாறான பயணம் ஒன்றிலேயே தம்பலகாமம் இடப்பெயர் ஆய்வு நூலுக்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்டது.