Monday, August 19, 2013

விருதுக்குத் தெரிவான தில்லைநாதன் பவித்திரனின் 'குறி இடல்' கவிதை நூல்

 Thillainathan Pavithran

இலங்கை இலக்கியப் பேரவை 2012 ஆம் ஆண்டுக்கான விருதுபெற இருக்கும் நூல்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு இருக்கிறது.அதனடிப்படையில் 2012 கவிதைக்கான விருது பெறும் நூலாக அறிவிக்கப்பட்டிருப்பது திருகோணமலையைச் சேர்ந்த தில்லைநாதன் பவித்திரனின் குறி இடல் கவிதை நூல்.

இது பவித்திரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். 2010 இல் ரசவாதம்   ( கவிதை ) வெளிவந்தது. மூதூரைப் பிறப்பிடமாகவும்,திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பவித்திரன் 2006 முதல் இலக்கியத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

தினக்குரல்,வீரகேசரி,சுடர்ஒளி,ஞானம்,மல்லிகை,நீங்களும் எழுதலாம்,ஓசை,மகுடம் முதலான பத்திரிகை , சஞ்சிகைகளில் எழுதிவரும் பவித்திரன் திருகோணமலையில் பல இலக்கிய அமைப்புக்களிலும் செயற்பட்டுவரும் ஒரு துடிப்பான இளைஞன். 

திருகோணமலை இளங்கோ கழக செயலாளராகவும்,பகிர்வுகள் இலக்கிய அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும்,கலை,கலாச்சார அபிவிவிருத்தி மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றிவரும் இவர் திருகோணமலையின் பிராந்தியப்பத்திரிகையான மலைமுரசின் உதவி ஆசிரியராகவும் குறிப்பிட்டகாலம் பணியாற்றியவர்.

திருகோணமலை இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் இவரின் தலைமையில் இடம்பெற்ற தமிழ் விழாவும் மூத்த எழுத்தாளர் கௌரவிப்பும் மிக அண்மையில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் கலை அரங்கில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இலக்கியப் பேரவையின் விருதுக்குத் தெரிவான தில்லைநாதன் பவித்திரனுக்கு ஜீவநதி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

குறி இடல்

 த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. பவித்திரனுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Dear Dr
    It is a pleasure to hear the award news of Paviththiran through Jeevanathy . We on behalf of Trincomalee Tamil Sangam congratulate Paviththiran and wish him in every walk of his life.
    Kernipiththan

    ReplyDelete