Thursday, August 22, 2013

திருகோணமலைத் தமிழ்விழா 2013 - புகைப்படங்கள்

திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலையில் 2013ம் ஆண்டுக்கான தமிழ்விழாவும், மூத்த எழுத்தாளர் கௌரவிப்பும் 6.07.2013 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு திருகோணமலை புனித மரியாள் கல்லுாரியின் கலை அரங்கில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தில்லைநாதன் பவித்திரன் தலைமையில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றல்,தமிழ்த்தாய் வாழ்த்து என்னவற்றைத் தொடர்ந்து வ.தர்மபாலன் அவர்களின் வரவேற்புரை நிகழ்ந்தது.தில்லைநாதன் பவித்திரன் தொடக்கவுரை ஆற்றியதைத் தொடர்ந்து ஶ்ரீமதி பத்மராஜினி விஜயகாந்தனால் தமிழிசை இசைக்கப்பட்டது.
மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் அவர்களின் திருகோணமலையும் தேசிய இலக்கிய சமபோக்கும் என்ற தலைப்பிலான உரையினைத்  தொடர்ந்து சேனையூர் மத்திய கல்லுாரி மாணவர்களின் சிந்து நடைக் காத்தவராயன் கூத்து இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்து கொண்ட பேராசிரியர் சி.மௌனகுரு மூத்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். விருபெற்ற குறும்படங்களான யோ.சுஜீதனின் அடிவானம் , ஆனந்த ரமணனின் மண்சோறு காட்சிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கனகசபாபதி சரவணபவன் அவர்களின் வரலாற்றில் திருகோணமலை உரையும் மு.மயூரனின் கணினியில் தமிழ் என்ற உரையும் நிகழ்த்தப்பட்டது.

பிரகதீஸ்வரா கலாலயா மாணவிகளின் நடனத்தினைத் தொடர்து ஆனந்த ரமணனின் ஏணிப்படிகள் என்ற நாடகமும் மாதினி விக்னேஸ்வரனின் பெண் வெறுப்பும் , மொழியும் என்ற உரையும் இடம் பெற்றது. பத்மபிரஷனின் நன்றியுரையுடன் விழா இனிதுற நிறைவுற்றது.

திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013
திருகோணமலை  தமிழ்விழா 2013

செய்தி - த.ஜீவராஜ்
படங்கள் - விழாக்குழுவினர்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. வணக்கம்

    உங்களின் வலைப்பக்கம் வருவது இதுதான் முதலாவது தடவை இப்படியான வலைப்பூவை அறிந்தது தமிழ்மணத்தில்தான் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் படங்கள் அழகாக உள்ளது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Dear Dr
    While I appreciate the Tamil vila, I felt quite unhappy of the attitudes of the organizers. There are many divisions among Tamils. It is a curse to Tamils. Even from the heritage the Tamil kings 'Sera, Sola. Pandiyarkal sernthonrai valnththathillai. They fought among themselves for nothing. In Trincomalee too there are many groups and divisions. These divisions help our political heroes to ride on the back of the youths . I cordially invite these youths to join hands under one roof - Tamil Sangam. and work out a plan to build a strong force to uplift our mother tongue
    Kernippiththan.

    ReplyDelete
  3. Dear Dr