Monday, September 22, 2014

தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) புகைப்படங்கள் - 2


இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா  என்னும்   திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது.  கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இராஜரெட்ணம் நடனாலயத்தின் 23வது வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்த நாட்டிய நாடக பக்கப்பாட்டினை சங்கீத வித்துவான் ஸ்ரீ திவாகர் செல்வரட்ணம், இசைக் கலாவித்தகி. திருமதி. பத்மலோஜினி குணராஜசிங்கம் ஆகியோரும், மிருதங்க இசையினை மிருதங்க கலா வித்தகர்.  சி.காண்டீபன் அவர்களும், வயலின் சி.திருமாறன், மு.பவதாரணன், வீணை  எஸ்.வாகீசன்,  புல்லாங்குழல் செல்வி. கிரிஜா கனகரெட்ணம்,  ஓகன் வி.செந்தூரன்,  தபேலா  பொன்.விபுலானந்தா  ஆகியோரும் வழங்கினர்.

தென்கயிலை வாசா நாட்டிய நாடகத்தில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடைய வரலாறு ஆறு கட்டங்களாக விளக்கப்பட்டது.

1. ஆலயம் உருவான வரலாறு
2. இராவணனின் வருகை (இராவணன் வெட்டு,கன்னியா வெந்நீர் ஊற்று)
3. குளக்கோட்டு மன்னனின் திருப்பணி
4. திருஞானசம்பந்தர் பதிகம் பாடியமை
5. போத்துக்கேயரால் ஆலயம் அழிக்கப்பட்டமை
6. மீண்டும் ஆலயம் அமைக்கப்பட்டு இன்றைய நகர்வலம்
சுமார் 5 மணிநேரம் சொற்பமாக கரைந்த உணர்வு ஏற்பட்டது. பிரமாதம்.






விருந்தினர் பதிவு
               



        சி.சசிக்குமார்











இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. Dear Dr
    I have appreciated the play. We have to congratulate the teacher Mrs.Renuha for her excellent effort. The artist who performed the dance of Shiva, Ravana and others too excellent. Thank you for posting these events in your Jeevanathy..
    - Kernipiththan

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    படங்களை பார்த்துமகிழ்ந்தேன்... இப்படியான நிகழ்ச்சிகள் நடத்துவதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete
  4. எழுதித் தயாரித்து
    பங்கு பற்றிய
    அனைத்துக் கலை உள்ளங்களுக்கும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete