Wednesday, November 19, 2014

சிவநய அறநெறிப்பாடசாலை நூலக அங்குராட்பணம் - புகைப்படங்கள்

சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50 மாணவர்கள் மூன்று தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

நிரந்தரக் கட்டடமின்றி ஆலய மண்டபத்தில் இயங்கி வரும் இப்பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான ஒரு தொகை அறநெறிக் கதைப்புத்தகங்கள் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பாலேந்திரன் மயூரன் அவர்களின் நிதி உதவி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

நூலக கட்டமைப்பு எதுவும் இல்லாத காரணத்தால் அவை அன்றே மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மீண்டும் அடுத்தமுறை அறநெறி வகுப்புக்கு வரும்போது தாம் வாசித்த புத்தகத்தை ஆசிரியரிடம் கையளித்து புதிய புத்தகம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த மயூரனின் தந்தை திரு.பாலேந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு நூல்களை வழங்கினார். அத்துடன் திருமதி.ஶ்ரீவித்தியா சமயதாஸ், திருமதி.அருணா ஆகியோரால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்களையும், உடைகளையும் அவர் வழங்கிவைத்து நிகழ்வினை நிறைவு செய்தார்.

அறநெறிப்பாடசாலை, நூலகம் என்று எந்தவிதமான கட்டமைப்புக்களும் இல்லாதபோதும் மாணவர்களின் ஆர்வத்தாலும், ஆசிரியர்களின் அர்ப்பணிபாலும், நலன்விரும்பிகளின் தொடர்ச்சியான பங்களிப்பாலும் தொடர்ந்து இயங்கிவருகிறது இந்த அறநெறிப்பாடசாலை. திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான  கிராமங்களில் கப்பல்துறைக் கிராமமும் ஒன்றாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அறநெறிப்பாடசாலை
அறநெறிப்பாடசாலை
அறநெறிப்பாடசாலை
அறநெறிப்பாடசாலை
அறநெறிப்பாடசாலை
அறநெறிப்பாடசாலை
அறநெறிப்பாடசாலை

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    எம் மொழியும் சமயமும் வளர உதவி செய்யும் உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்
    தொடரட்டும் பணி..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete