Showing posts with label மும்முடிச் சோழ மண்டலம். Show all posts
Showing posts with label மும்முடிச் சோழ மண்டலம். Show all posts

Monday, February 17, 2014

திருகோணமலையில் சோழ இலங்கேஸ்வரன்


இதுவரை நாம் திருகோணமலையில் சோழர்கள் என்னும் தொடரில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் (இலங்கை) சோழவம்சத்து இளவரசர்கள் அரசப்பிரதிநிதிகளாக முடிசூடி ஆட்சி செய்தார்கள் என்பதனைப் பார்த்திருந்தோம்.

Wednesday, January 22, 2014

திருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள்

திருகோணமலை

மானாங்கேணிக் கல்வெட்டும் புராதானச் சின்னங்களான நந்தியும் ஆவுடையாரும் சுமார் 1000 வருடங்களுக்குப் பிறகும் நாம் இலகுவில் காணக்கூடியதாக திருகோணமலை நகரமத்தியில் அமைந்திருக்கும்  வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயத்தில் இன்றும் இருப்பது பற்றி பார்த்திருந்தோம்.
சோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள் 
இனி 

Monday, January 20, 2014

சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் - புகைப்படங்கள்

சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம்

ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றுதான் திருகோணமலையைச் சேர்ந்த இராஜேந்திர சோழவளநாடு. திருகோணமலை நகரமும் ,கந்தளாயும் உள்ளடங்கிய பகுதியான இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது.
சோழர்காலத் திருகோணமலையில் இருந்த வளநாடுகள் பற்றி  திருகோணமலையிற் சோழர்கள்  - பகுதி - 1  இல் பார்த்திருந்தோம்.

இனி.....

Thursday, November 28, 2013

திருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1

இராஜராஜ சோழனின் சிலை ( பிரகதீஸ்வரர் கோவில்)

முதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று '' கொல்லமும், கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்...''  என்று சோழர் ஆட்சியில் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட இடங்களில் இலங்கை  ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்ற பிரிவில் அடங்கி இருந்ததைக் குறிப்பிடுகிறது.