Wednesday, September 14, 2016

நண்பன் பிரதீபனின் தமிழ் தாய் மொழித் தமிழ் வாழ்த்துப் பாடல்


தம்பலகாமத்தைச் சேர்ந்த பல்துறைக் கலைஞன் திரு.பூபாலசிங்கம் பிரதீபன் எனது ஆரம்ப காலப்பாடசாலைத் தோழன். இவரது ஆற்றல், பலதுறைக் கலைத்திறண், கடின உழைப்பு,  அர்ப்பணிப்புடன் ஈடுபடும் தன்மை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.


இவர்  தி/புனிதசவேரியர் மகாவித்தியாலயம், தம்பலகாமம் மகாவித்தியாலயம் ,திருகோணமலை இ.கி.ச கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன்.

இலங்கை ‘அபின நாடக அரங்கியல் கலைக்கல்லூரியின்’ சிரேஸ்ட பயில்முறைப் பயிற்றுனராகக் கடமையாற்றும் இவர் பல பரிமாணங்களில் தன் ஆற்றலைப் பதிவு செய்தவர். இலங்கையின் ஆற்றுகைக் கலைஞனாக, மேடை, தொலைக்காட்சி, திரைப்பட நடிகனாக, நெறியாளனாக, பாடகனாக, ஓவியனாக,  யோகக்கலை வித்தகனாக என்று  தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி வருபவர்.

அண்மையில் அவரது தமிழ் தாய் மொழித் தமிழ் வாழ்த்துப் பாடல் வெளிவந்து பலரதும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. அவர் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த ஐந்து பாடல்களில் முதலாவதாக அழகிய காட்சி அமைப்புகளுடன் புல்மோட்டை மணல் மேடு, தம்பலகாமம், இறக்கக்கண்டிப் பாலம், திருகோணமலை நகரக் கடற்க்கரை ஆகிய இடங்களில்  இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

நிறைவாக வெளிவந்திருக்கும் இப்பாடல் முயற்சிபோல் அவரது அனைத்துப் படைப்புகளும் வெளிவர எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 



பாடல் - "வையகம் போற்றிட வாழ்க என் தமிழே!.

(நடன அமைப்பும் நெறியாள்கையும்)
திருமதி. கலைமகள் சக்தீபன்

(நடனக்கலைஞர்கள்)
1.கஜனியா பரமானந்தன்
2.ஜனார்த்திதா வேதானந்தராஜா
3.தீபா அலாவுதீன்
4.சரண்யா இந்திரன்
5.செல்மா ரூப்
6.கஜான்னி விஸ்வகாந்தன்

(பங்குபற்றிய ஏனைய கலைஞர்கள் )
1.கோபாலபிள்ளை மோகனராஜன்
2.குழந்தை-தன்சிகா பிரபாகரன்
3.பாரதியார் -N.அரவிந்தன்
4.ஒளவையார்-S.ரிதுசிகா
5.வள்ளுவர்-M.கனுஷன்

(மக்கள் தொடர்பும் கள உதவியும்)
மோ.பிரசாத்

பாடல் - "வையகம் போற்றிட வாழ்க என் தமிழே!.........."  (தாய்மொழித் தமிழ்
வாழ்த்து - "செவ்வானம்" கவிதை தொகுப்பு நூலின் முதற்கவிதை)
பாடல் இசைத்தொகுப்பு - "ஸ்பரிசம்"
வெளியீடு - "மகரந்தம்"

எழுதி மெட்டமைத்து பாடுவது-
-பூபாலசிங்கம் பிரதீபன்

இசை - ஏ.ஜே.ஜொனி

ஒலிப்பதிவுக்கலையகம்-
-நாதபிந்து- சென்னை, இந்தியா

ஒளிப்பதிவு - சமத் ஹசங்க

படத்தொகுப்பு - மாதவ பெரெரா

கருத்தாக்கமும் இயக்கமும் தயாரிப்பும்
பூபாலசிங்கம் பிரதீபன்.



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: